Transport · recurring
Chennai Peripheral Ring Road
First announced in 2014-15 and named again in 9 later budgets, most recently 2024-25. Places named: Chennai, Ennūr, Srīperumbūdūr.
Allocated by budget year
Located at Chennai · Chennai district
See it on the map → All Transport projects →
What each budget said, year by year
2014-15
“The Chennai Peripheral Ring Road is another ambitious project envisioned by this Government. The Government proposes to finance this project with loan assistance from JICA.”
“இந்த அரசு செயல்படுத்த முனைந்துள்ள பெரும் திட்டங்களுள் சென்னை சுற்றுவட்டச் சாலையும் ஒன்றாகும். ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு நிறுவனத்தின் கடன் உதவியோடு இத்திட்டத்தைச் செயல்படுத்த இந்த அரசு உத்தேசித்துள்ளது. இதுதவிர, சென்னை மாநகரப் பகுதிகளில், பாலங்கள், சாலைகள், இரயில்வே மேம்பாலங்கள் ஆகியவற்றிற்கான 17 திட்டங்களை நிறைவேற்ற 2,000 கோடி ரூபாய் நிதியுதவியை ஐப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு நிறுவனத்திடமிருந்து பெற்றுப் பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶56) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.29 · ¶56 · source PDF ↗ · on the map →
2016-17
“The Detailed Project Report for Chennai Peripheral Ring Road project is under finalization and the Government is approaching external lending agencies for its financing.”
“மதுரை மாநகரத்திற்கான நான்கு வழித்தட வெளிவட்டச் சாலையை, 213.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த அரசு வடிவமைத்து, இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் இறுதி செய்யப்பட உள்ளன. சென்னை வெளிவட்டச் சாலையின் முதற்கட்டப் பணிகளை இந்த அரசு வெற்றிகரமாக முடித்துள்ளதோடு, இச்சாலையின் இரண்டாவது கட்டப் பணிகளும் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரகடம் தொழில் பகுதி வழித்தடத் திட்டம் 961.29 கோடி ரூபாய் செலவில் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிழக்கு கடற்கரைச் சாலையை நான்கு வழித்தடச் சாலையாக்கும் பணிகள் 314.15 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகின்றன. சென்னை சுற்று வட்டச் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை முடிவு செய்யப்படும் நிலையில் உள்ளது. இதனைச் செயல்படுத்துவதற்காக பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் நிதியுதவியைப் பெற இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நெடுஞ்சாலைத் துறைக்காக இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 8,486.26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எரிசக்தி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶42) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.30 · ¶42 · source PDF ↗ · on the map →
2017-18 Rs.13,000 crore
“The Chennai Peripheral Ring Road at a cost of Rs.13,000 crore is under the consideration of JICA.” tnbudget_2017-18_speech_en · p.33 · ¶60 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.200.60 crore
“The Government of India has approved the revised Detailed Project Report for the Chennai Peripheral Ring Road project at a cost of Rs.12,301 crore for funding from JICA. Works for section-I of the proposed Chennai Peripheral Ring Road, namely the Northern Port Access Road from Ennore Port to Thatchur on NH-5 will commence shortly. An amount of Rs.200.60 crore has been allocated for this project in the Budget.”
“கிழக்கு கடற்கரை பொருளாதார வழித்தடத்தின் ஓர் அங்கமான சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டம், தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளையும், துறைமுகங்களையும் மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக 6,448.24 கோடி ரூபாய் செலவிலான, 654.54 கிலோமீட்டர் நீளமுள்ள 14 சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியினைப் பெறுவதற்காக மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் நிதியுதவியுடன் 12,301 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படவிருக்கும் சென்னை சுற்றுவட்டச் சாலை திட்டத்தின் திருத்திய விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக, தேசிய நெடுஞ்சாலை எண்-5-ஐ இணைக்கும் எண்ணூர் துறைமுகம் முதல் தச்சூர் வரையிலான வடக்குத் துறைமுக அணுகுசாலையை அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். இத்திட்டத்திற்காக, 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் 200.60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶56) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.35 · ¶56 · source PDF ↗ · on the map →
2019-20
“The Chennai Peripheral Ring Road (CPRR) project is in the final stage of negotiation with JICA and is expected to improve the connectivity and standard of roads around Chennai city significantly.” tnbudget_2019-20_speech_en · p.43 · ¶73 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.12,301 crore
“For the Chennai Peripheral Ring Road project to be executed at a total cost of Rs.12,301 crore, land acquisition at a cost of Rs.951 crore for Section I from Ennore port to Thatchur is in progress and the loan agreement has been signed with Japan International Cooperation Agency (JICA) for a loan of Rs.2,673 crore.”
“சென்னை சுற்றுவட்டச் சாலை திட்டம் 12,301 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். அதில், முதல் கட்டமாக எண்ணூர் துறைமுகம் முதல் தச்சூர் வரையிலான பகுதிக்கான நில எடுப்புப் பணிகள் 951 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டு, தற்பொழுது நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் முதல் பிரிவிற்கான பணிகள் 2,673 கோடி ரூபாய் செலவில் ஐப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் கடனுதவியுடன் மேற்கொள்வதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை சுற்றுவட்டச் சாலையின் மேலும் மூன்று பிரிவுகளுக்கான நில எடுப்புப் பணிகளை 2,603.32 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின், பகுதி 2 மற்றும் sor Sp, தச்சூர் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான பணிகளுக்கு, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் (OPEC) சர்வதேச வளர்ச்சி நிதியம் ஆகியவற்றின் 3,346.49 கோடி ரூபாய் கடன் உதவியும் பெறப்பட உள்ளது. 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்காக 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶101) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.58 · ¶101 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.1,750 crore
“The Chennai Peripheral Ring Road Project is being implemented with a budget provision of Rs.1,750 crore in 2021-22.”
“சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிராண்ட் சவுத் டிரங்க் சாலை மாநிலத்தின் பொருளாதாரத்திற்கான முதுகெலும்பாகும். இந்த தேசிய நெடுஞ்சாலையை ஆறு மற்றும் எட்டுவழி நெடுஞ்சாலையாக மொத்த தூரத்திற்கும் மேம்படுத்துவதற்கு ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் சென்னை கன்னியாகுமரி தொழில் பெருவழித் திட்டத்தின் கீழ், 6,448.24 கோடி ரூபாய் மொத்த செலவில், 589 கி.மீ நிளமுள்ள 16 மாநில நெடுஞ்சாலைப் பெருவழிகள் மேம்படுத்தப்படும். இதனால் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளுடன் சிறந்த இணைப்பைப் பெறுவது உறுதி செய்யப்படும். தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் 683 கோடி ரூபாய் வரவு-செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும், 1,750 கோடி ரூபாய் வரவு-செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் சென்னை வெளி வட்ட சுற்றுச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும். நெடுஞ்சாலைத் துறையின் ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு 17,899.17 கோடி ரூபாயாக இருக்கும். போக்குவரத்து”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶90) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.40 · ¶90 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2021-22 Rs.12,301 crore
“The Chennai Peripheral Ring Road project with 5 sections for a total length of 133.87 km at a total cost of Rs.12,301 crore has been taken up for implementation.” tnbudget_2021-22_speech_en_interim · p.55 · ¶85 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.4,899 crore
“The loan agreement for the execution of Sections II and III of the project at a total cost of Rs.4,899 crore, with AIIB and OPEC Fund for International Development will be signed shortly.” tnbudget_2021-22_speech_en_interim · p.55 · ¶85 · source PDF ↗ · on the map →
2022-23 Rs.2,250 crore
“An amount of Rs.2,250 crore has been allotted towards Chennai Peripheral Ring Road Project” financedept_2022-23_speech_en · p.43 · ¶125 · source PDF ↗ · on the map →
2023-24 Rs.1,847 crore
“Allocations of Rs.1,847 crore towards Chennai Peripheral Ring Road Project, Rs.1,500 crore for the Chennai-Kanniyakumari Industrial Corridor Project and Rs.645 crore towards Tamil Nadu Road Sector Project-II have been made in the Budget Estimates.” financedept_2023-24_speech_en · p.39 · ¶92 · source PDF ↗ · on the map →
2024-25 Rs.2,267 crore
“In the Budget Estimates 2024-25, a sum of Rs.8,365 crore under Comprehensive Road Infrastructure Development Programme (CRIDP), a sum of Rs.2,267 crore under Chennai Peripheral Ring Road Project and a sum of Rs.908 crore for Chennai-Kanyakumari Industrial Corridor Project have been allocated.”
“ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கு (CRIDP) 8365 கோடி ரூபாயும் டசன்னை எல்லைச் சாலை திட்டத்திற்காக 2,267 கோடி ரூபாயும் சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டத்திற்கு 908 கோடி ரூபாயும் இந்த வரவு-டசலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶168) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2024-25_speech_en · p.77 · ¶168 · source PDF ↗ · on the map →
Linked projects
- Chennai Peripheral Ring Road Section I · component of
Nearby in the same sector
- Tamil Nadu Road Sector Project – Phase II · 12 years
- Comprehensive Road Infrastructure Development Programme (CRIDP) · 11 years
- Chennai Metro Rail Project · 9 years
- Diesel subsidy to State Transport Undertakings · 9 years
- Chennai Metro Rail Phase-II · 9 years
- Road Safety Fund · 8 years