Transport · recurring
Road Safety Fund
First announced in 2011-12 and named again in 8 later budgets, most recently 2026-27. Places named: Chennai, Madurai, Coimbatore.
Allocated by budget year
Located at Chennai · Chennai district
See it on the map → All Transport projects →
What each budget said, year by year
2011-12 ` 40 crores
“An amount of ` 40 crores has been provided in the Revised Budget Estimates for the Road Safety Fund to carry out road safety measures including providing adequate signals and improved lighting.”
“தமிழ்நாட்டில், 2005 ஆம் ஆண்டு 74.04 இலட்சமாக இருந்த வாகனங்களின் எண்ணிக்கை 2011 ஆம் ஆண்டில் 136.60 இலட்சமாக உயர்ந்துள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்துவிட்டதால் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும், உடல் ஊனங்களும் அதிகரித்துள்ளன. சாலைப் பாதுகாப்பை வலுப்படுத்தி சாலை விபத்துகளைக் குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் அமைக்கப்பட்டுள்ள சாலைப் பாதுகாப்பு மன்றங்கள் வலுவூட்டப்படும். தற்போது, தேசிய நெடுஞ்சாலைகளில் 80 ரோந்துப் பணிவாகனங்களும் மாநில நெடுஞ்சாலைகளில் 42 ரோந்துப் பணிவாகனங்களும் உள்ளன. அனைத்துக் காவல் நிலையங்களிலும் சாலை விபத்து தகவல் கண்காணிப்புத் திட்டம் (Road Accident Data Monitoring System) என்ற கணினி பயன்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் தேவையான அளவு அடையாளக் குறியீடுகள், மேம்பட்ட ஒளிரும் விளக்குகள் உள்ளிட்ட சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சாலை மேம்பாட்டு நிதிக்கு இந்த திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுத் திட்டம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶16) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.97 · ¶16 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2011-12 ` 40 crores
“During the current financial year, ` 40 crores have been provided for Road Safety fund. Places prone to frequent accidents are identified for appropriate safety measures to reduce accidents. In this Interim Budget, ` 40 crores have been allocated for this fund.”
“இந்தியாவில் சாலைப் பாதுகாப்புக் கொள்கையை முதன் முதலாக வகுத்த மாநிலம் தமிழ்நாடாகும். இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்குத் தமிழ்நாடு அரசு மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சாலைப் பாதுகாப்புக் குழுக்களைத் தோற்றுவித்துள்ளது. சாலைப் பாதுகாப்பு நிதிக்கென நடப்பு நிதியாண்டில் ரூபாய் 40 கோடி வழங்கப்பட்டுள்ளது. அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு விபத்துக்களைக் குறைப்பதற்காக, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்டத்திலும் இந்த நிதிக்கு ரூபாய் 40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீதி நிருவாகம் பல்வேறு திட்டப்பணிகளுக்கான மானியங்கள் மற்றும் பதின் மூன்றாவது நிதிக்குழு பரிந்துரைத்துள்ள மானியங்களின் அடிப்படையில் 2011-2012 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் மத்திய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்கள் ரூபாய் 7,445 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வருவாய்க் கணக்கில் செலவுகள்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶13) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2011-12_speech_en_interim · p.47 · ¶13 · source PDF ↗ · on the map →
2012-13 Rs.65 crores
“During 2011-2012, Rs.40 crores was set apart for the Road Safety Fund. It is proposed to increase this amount to Rs.65 crores of which Rs.25 crores will be earmarked for the Highways Department.”
“தேசிய அளவிலான சாலை விபத்துகளில் 13 சதவீதமும், இறப்பு ஏற்படக்கூடிய சாலை விபத்துகளில் 12 சதவீதமும் தமிழகத்தில் ஏற்படுகின்றன. எனவே, இதனைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளுக்கு இந்த அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. 2011-2012 ஆம் ஆண்டில் சாலைப் பாதுகாப்பு நிதிக்காக 40 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. வரும் நிதியாண்டில் இதனை 65 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கவும் இத்தொகையில் 25 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத் துறைக்காக ஒதுக்கீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து கட்டமைப்புகள், சாலை சமிக்ஞைகள் ஆகியவற்றை மேம்படுத்துதல், அதிக விபத்துகள் ஏற்படக்கூடிய சாலைகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பயிற்சி அளித்தல் போன்ற பணிகளுக்காக இத்தொகை செலவிடப்படும். மேலும், கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் இல்லாத 13 மாவட்டங்களில், நன்கு பயிற்சி பெற்ற ஓட்டுநர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, 13 கோடி ரூபாய் செலவில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் அமைக்கப்படும். இது தவிர, நெடுஞ்சாலை ரோந்துப் பணிகளை மேலும் வலுப்படுத்த, தற்போதுள்ள 122 ரோந்துப் படைகளின் எண்ணிக்கையை 260-ஆக உயர்த்தி, அவற்றில் 69 கூடுதல் படைகளை தேசிய நெடுஞ்சாலைகளிலும், 69 கூடுதல் படைகளை மாநில நெடுஞ்சாலைகளிலும் பயன்படுத்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். தீயணைப்பு-மீட்புப் பணிகள்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶24) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.17 · ¶24 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.65 crore
“An allocation of Rs.65 crore will be made for the Road Safety Fund during 2014-2015.”
“சாலை விபத்துகளைத் தடுப்பதற்கு இந்த அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்ட அளவிலான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேலும் முனைப்புடன் நடத்திடும் வகையில் அதற்கு ஒதுக்கப்படும் நிதி வரும் 2014-2015 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு மடங்காக உயர்த்தப்படும். சாலைப் பாதுகாப்பு நிதிக்கென, 2014-2015 ஆம் ஆண்டிற்கு, 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அத்துடன் சாலை விபத்துக்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளைக் கண்டறிந்து அத்தகைய கரும்புள்ளிப் பகுதிகளில் (Black Spots), உரிய கட்டுமானம் தொடர்பான திருத்தப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு திட்டம் ஒன்று 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்திற்காக 150 கோடி ரூபாய், 2014-2015 ஆம் ஆண்டில் ஒதுக்கப்படும். ஒரு நிதியாண்டில், அதிகபட்ச நிதியாக சாலைப் பாதுகாப்புக்கென 215 கோடி ரூபாயை ஒரு மாநில அரசு ஒதுக்கியிருப்பது இந்தியாவிலேயே இதுவே முதல் முறையாகும். நிர்வாக ஆளுமை (Governance)”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶16) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.10 · ¶16 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.165 crores
“In the coming financial year, another Rs.165 crores is allocated towards the Road Safety component.”
“சாலை விபத்துக்களையும் அவற்றால் ஏற்படும் உயிர் இழப்புகளையும் தடுப்பதற்கு இந்த அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. 2014-2015 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 245.30 கோடி ரூபாய் அளவிலும், சாலைப் பாதுகாப்பு நிதியிலிருந்து மேலும் 200 கோடி ரூபாய் அளவிலும், சாலைப் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விபத்துக்கள் அதிகமாக ஏற்படக்கூடிய பகுதிகளில் விபத்து ஏற்படக் காரணமான குறைபாடுகளைச் (Black 5௦018) சரிசெய்யவும், தேவைப்படும் பொறியியல் ரீதியான முக்கிய மாற்றங்களை சாலைகளில் மேற்கொள்ளவும் இப்பணிகள் உதவும். வரும் நிதியாண்டில் சாலைப் பாதுகாப்பு நிதிக்காக 165 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்மொழி வளர்ச்சி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶20) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.15 · ¶20 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.165 crores
“Totally, an amount of Rs.165 crores has been provided for the Road Safety Fund in this Revised Budget Estimates 2016-2017.”
“சாலை விபத்து மேலாண்மை அமைப்பின் தகவல்களைப் பயன்படுத்தியும், சாலைகளில் காவல் துறையின் ரோந்துப் பணிகளை செம்மைப்படுத்தியும், விபத்துக்களைக் குறைக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், தொழில்நுட்பச் சீரமைப்பு முயற்சிகள் போன்ற சாலைப் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை இந்த அரசு மேலும் தீவிரப்படுத்தும். 2016-2017ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் சாலைப் பாதுகாப்பு நிதிக்காக, மொத்தம் 165 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிக அளவில் விபத்துக்கள் நிகழக்கூடிய இடங்களில், சாலைக் குறைபாடுகளைச் சரி செய்ய, ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சாலைப் பாதுகாப்பிற்கென தனியாக 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶18) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.11 · ¶18 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2016-17 Rs.150 crores
“Further, under the Comprehensive Road Infrastructure Development Project (CRIDP), an amount of Rs.150 crores is earmarked for the Road Safety Component to correct black spots in highly accident-prone areas.”
“சாலை விபத்து மேலாண்மை அமைப்பின் தகவல்களைப் பயன்படுத்தியும், சாலைகளில் காவல் துறையின் ரோந்துப் பணிகளை செம்மைப்படுத்தியும், விபத்துக்களைக் குறைக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், தொழில்நுட்பச் சீரமைப்பு முயற்சிகள் போன்ற சாலைப் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை இந்த அரசு மேலும் தீவிரப்படுத்தும். 2016-2017ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் சாலைப் பாதுகாப்பு நிதிக்காக, மொத்தம் 165 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிக அளவில் விபத்துக்கள் நிகழக்கூடிய இடங்களில், சாலைக் குறைபாடுகளைச் சரி செய்ய, ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சாலைப் பாதுகாப்பிற்கென தனியாக 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶18) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.11 · ¶18 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.200 crore . and Rs.100 crore
“Further, Road Safety works at a cost of Rs.200 crore under CRIDP scheme and Rs.100 crore under Special Road Safety Project fund will be taken up during the financial year 2017-2018.”
“சாலைகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதில் இந்த அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது. அதிக சாலை விபத்துக்கள் ஏற்படும் இடங்களில் (Black Spot) உள்ள குறைபாடுகளை சரிசெய்வதற்கான விரிவானதொரு திட்டம் 1130 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு, அதில் 959.94 கோடி ரூபாய் செலவிலான 3,382 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 200 கோடி ரூபாய் செலவிலான சாலைப் பாதுகாப்புத் திட்டங்களும், சிறப்பு சாலைப் பாதுகாப்புத் திட்ட நிதியின் கீழ் 100 கோடி ரூபாய் செலவிலான பணிகளும் 2017-2018 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶58) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.33 · ¶58 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.500 crore
“Funds and schemes from different departments including Highways, Municipal Administration, Rural Development, Police, Transport and Health will be converged with the revamped Tamil Nadu Road Safety Fund and the total annual allocation for road safety stepped up to Rs.500 crore. A separate dedicated Road Safety wing will be created in the Highways Department to ensure that road safety elements are incorporated within the design of roads. Road safety cells will be created in Chennai, Madurai and Coimbatore Corporations.”
“சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் படுகாயங்களை பாதியாகக் குறைக்க வேண்டும் என்பது, 2020 ஆம் ஆண்டிற்குள் அடைய வேண்டிய நிலைக்கத்தக்க வளர்ச்சிக்கான இலக்குகளில் ஒன்றாகும். 2018 ஆம் ஆண்டில், சிறப்பான சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான விருதை, மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு பெற்றது. 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2019 ஆம் ஆண்டில் சாலை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38.87 சதவீதம் குறைந்துள்ளது. தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டம் 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டம், சென்னை, இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்ட பிறகு, அவசர சிகிச்சை பிரிவில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8.3 சதவீதத்திலிருந்து 2.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. தற்போது அணுக வசதியாக அமைந்துள்ள 80 அரசு மருத்துவமனைகள், தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்களாகச் செயல்பட்டு வருகின்றன. சாலைப் பாதுகாப்பில் தமிழ்நாட்டின் ஆக்கத்திறனை மேலும் மேம்படுத்துவதற்கும், தவிர்க்கக்கூடிய உயிரிழப்புகள் மற்றும் படுகாயங்களைக் குறைப்பதற்கும், தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பு இயக்கத்தினை (Tamil Nadu Road Safety Misson) அரசு உருவாக்கும். இந்த இயக்கம், பல்வேறு துறைகளின் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து, 'சாலை விபத்தில்லா தமிழ்நாடு (Road Accident-free Tamil Nadu)’ என்ற இலக்கை அடைவதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இத்திட்டத்தின் கீழ், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விபத்துகளை பொறியியல் சார்ந்த தீர்வு நடவடிக்கைகள் மூலம் சரி செய்தல், ஓட்டுநர் கல்வி, சட்ட அமலாக்கம், விபத்திற்குப் பிந்தைய உயிரிழப்புகளைத் தடுத்தல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்தப்படும். நெடுஞ்சாலைகள், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, காவல், போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்களை ஒருங்கிணைத்து, சாலைப் பாதுகாப்பிற்கான நிதி ஒதுக்கீடு 500 கோடி ரூபாயாக உயர்த்தப்படும். சாலை வடிவமைப்பில் சாலைப் பாதுகாப்பு அம்சங்களும் உள்ளடங்கியிருப்பதை உறுதி செய்வதற்கு, மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறையில் சாலைப் பாதுகாப்பிற்கான தனியானதொரு பிரிவு உருவாக்கப்படும். சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் சாலைப் பாதுகாப்புப் பிரிவுகள் ஏற்படுத்தப்படும். நீதி நிர்வாகம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶28) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.17 · ¶28 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.500 crore
“An Integrated Road Safety Mission will be revamped and the Commissioner of Transport will be redesignated as Commissioner of Transport and Road Safety to coordinate the efforts of the various departments including Highways, Transport, Police, Medical and Education departments to systematically bring down accidents further and ensure timely response. Funds of upto Rs.500 crore will be converged for the implementation of this Mission.” financedept_2021-22_speech_en_revised · p.18 · ¶39 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2021-22
“The Tamil Nadu Road Safety Mission has been launched and co-ordinated efforts are being undertaken by the Police Department, Transport Department, State Transport Undertakings, Highways Department, Urban Local Bodies and the Health and Family Welfare Departments.”
“தமிழ்நாட்டில் சாலைப் பாதுகாப்பிற்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்ததனால், 2016 ஆம் ஆண்டில் 17,218 ஆக இருந்த உயிரிழப்பிற்குக் காரணமான விபத்துகளின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டில் 8,060 ஆகக் குறைந்துள்ளது. தமிழ்நாடு சாலை பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டு, காவல் துறை, போக்குவரத்து துறை, மாநில போக்குவரத்து துறை நிறுவனங்கள், நெடுஞ்சாலைத் துறை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு, மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால், தேசிய மற்றும் உலகளவில் பல விருதுகளை தமிழ்நாடு அரசு வென்றது. இந்த முயற்சிகள் முன்மாதிரியானவை எனப் பாராட்டப்பட்டுள்ளன. நீதித்துறை நிருவாகம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶33) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2021-22_speech_en_interim · p.24 · ¶33 · source PDF ↗ · on the map →
2026-27 Rs.130 crore
“along with a further Rs.130 crore under the Road Safety Fund for road safety works during 2026-27.”
“ஓர் புதிய சாலைப் பாதுகாப்புக் கொள்கை: இந்த அரசால் வகுக்கப்படும். இந்தக் கொள்கையானது, நிறுவன அமைப்புகள், சாலை வடிவமைப்பு மற்றும் பொறியியல், போக்குவரத்து சட்ட அமலாக்கம், அவசரகால காய சிகிச்சை மற்றும் விழிப்புணர்வுக் கல்வி ஆகிய ஐந்து முக்கியத் தூண்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விபத்து நிவாரண நிதித் திட்டத்திற்காக 2026-27 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 200 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. மேலும், 2026-27 ஆம் நிதியாண்டில் பல்வேறு சாலை பாதுகாப்பிற்கான பணிகளை மேற்கொள்வதற்காக சாலைப் பாதுகாப்பு நிதியின் கீழ் 130 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶146) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2026-27_speech_en_revised · p.71 · ¶146 · full speech ↗ · on the map →
Linked projects
- runs alongside Accident-free State road safety improvements · 2025-26
- runs alongside Road Safety Policy · 2026-27
Nearby in the same sector
- Comprehensive Road Infrastructure Development Programme (CRIDP) · 12 years
- Tamil Nadu Road Sector Project – Phase II · 12 years
- Chennai Peripheral Ring Road · 10 years
- Diesel subsidy to State Transport Undertakings · 10 years
- Chennai Metro Rail Phase-II · 10 years
- Chennai Metro Rail Project · 9 years