Education · recurring
Chief Minister's Breakfast Scheme
3 budgets named it 3 year span 1,700 ₹ crore allocated DMK government
First announced in 2023-24 and named again in 2 later budgets, most recently 2025-26.
Allocated by budget year
See it on the map → All Education projects →
What each budget said, year by year
2023-24 Rs.500 crore
“the Chief Minister‟s Breakfast Scheme will be expanded to cover all the 30,122 Government primary schools in the State from the coming academic year. Rs.500 crore is allotted for this scheme in this Budget which will benefit 18 lakh students studying from Class I to Class V.”
“முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 1937 பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 148,315 மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட 1543 தொடக்கப் பள்ளிகளில் 1319 பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதில், 624 பள்ளிகளில் 10 சதவிதமும், 462 பள்ளிகளில் 20 சதவிதமும்,.193 பள்ளிகளில் 30 சதவிதமும் என மாணவர் வருகை அதிகரித்துள்ளது. திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், திருவாளூர் ஆகிய மாவட்டங்களில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்கவும், கற்றலை இனிமையாக்கவும், எல்லாக் குழந்தைகளும் பசியின்றி கல்வியறிவு பெற்றிடவும் எந்தத் தியாகத்தையும் செய்திடுவோம்: என்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உன்னத நோக்கத்தை செயல்படுத்திட, வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள 30 ஆயிரத்து 122 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை பயிலும் 18 இலட்சம் மாணவர்கள் பயணடையும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் இந்த நல்ல நோக்கத்திற்கு வரும் நிதியாண்டில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶56) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2023-24_speech_en · p.25 · ¶56 · source PDF ↗ · on the map →
2024-25 Rs.600 crore
“In the next financial year, an allocation of Rs.600 crore will be earmarked towards this initiative.”
““பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்கவும், கற்றலை இனிமையாக்கவும், எல்லாக் குழந்தைகளும் பசியின்றிக் கல்வியறிவு பெற்றிடவும், எந்தத் தியாகத்தையும் செய்திடுவோம்” என்று அறிவித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உன்னத நோக்கத்தினை மேலும் முழுமையாகச் செயல்படுத்திட, தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை பயிலும் மேலும் சுமார் இரண்டு இலட்சத்து ௧0 ஆயிரம் மாணவர்கள் பயனடையும் வகையில், வரும் கல்வி ஆண்டு முதல் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக வரும் நிதியாண்டில் 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶60) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2024-25_speech_en · p.30 · ¶60 · source PDF ↗ · on the map →
2025-26 Rs.600 crore
“This historic scheme, which is the first initiative of its kind in the country, will be further expanded in the next academic year to include Government aided schools in urban areas also, thus benefitting an additional 3.14 lakh students enrolled from class I to class V. A sum of Rs.600 crore has been allocated for its implementation in the coming financial year.”
“பசிப்பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ? சேய்த்தோ? கூறுமின், எமக்கே. புறநானூறு-173) சங்ககாலத்தைச் சேர்ந்த குறுநில மன்னர் ஒருவர் ஏழை எளியோரின் பசியைப் போக்கியதால், பசிப்பிணியைப் போக்கிய மருத்துவராகப் போற்றப்படுகிறார். அம்மரபின் வழிவந்து, தமிழ்ச் சமூகத்தை வழிநடத்திய தலைவர்கள் பலரும் காலந்தோறும் வறுமையை அகற்றிடவும், மாணவர்களின் கல்வி நலன்களைப் பாதுகாத்திடவும் பல முன்னோடித் திட்டங்களை அறிமுகப்படுத்தி வந்துள்ளனர். அதன் கொடர்ச்சியாக பள்ளிக் கல்வியை மேலும் பரவலாக்கவும், கற்றலை இனிமையாக்கவும் எல்லாக் குழந்தைகளும் பசியின்றிக் கல்வியறிவு பெற்றிடவும் எந்தத் தியாகத்தையும் செய்திடுவோம்” என்று அறிவித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உன்னத நோக்கத்தினை உள்வாங்கி அறிமுகப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: வாயிலாக, தமிழ்நாட்டிலுள்ள 30,992 அரசுப் பள்ளிகளிலும், ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள 3,995 அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 1753 இலட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர் மாணவர்களின் வருகை உயர்ந்துள்ளதோடு, அவர்களின் ஊட்டச்சத்தும் கற்றல் திறனும் மேம்பட்டுள்ளது என்று ஆய்வுகள் டுதரிவிக்கின்றன. நாட்டிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம், தமிழ்நாட்டின் நகரப் பகுதிகளில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மேலும் 344 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், வரும் கல்வியாண்டு முதல் மேலும் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்காக வரும் நிதியாண்டில் 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶55) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2025-26_speech_en · p.28 · ¶55 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- First-generation graduate education fees · 10 years
- Cash incentives to school students · 10 years
- Free school uniforms and footwear · 9 years
- School infrastructure (259 schools) · 9 years
- Free laptop distribution scheme · 8 years
- Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) · 8 years