Welfare · dormant

Chief Minister's Farmer Security Scheme (revamped)

7 budgets named it 10 year span 2,132 ₹ crore allocated AIADMK government

First announced in 2011-12 and named again in 6 later budgets, most recently 2020-21.

Allocated by budget year

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2011-12 ` 166 crores enhancement AIADMK · revised

“A sum of ` 166 crores is allocated in the Revised Budget Estimates for the implementation of this new scheme.”
“வேளாண்‌ தொழிலாளர்கள்‌, விவசாயிகள்‌ ஆகியோரின்‌ சமூகப்‌ பாதுகாப்பை உறுதி செய்யும்‌ நோக்கில்‌ கடந்த 2005 ஆம்‌ ஆண்டில்‌ “தமிழக முதலமைச்சரின்‌ உழவர்‌ பாதுகாப்புத்‌ திட்டம்‌” தொடங்கப்பட்டது. தற்போது 1.09 இலட்சம்‌ பயனாளிகள்‌ இத்திட்டத்தில்‌ பதிவு செய்துள்ளனர்‌. இத்திட்டம்‌ புதுப்பொலிவுடன்‌ செயல்படும்‌ வகையில்‌ சீரமைக்கப்பட்டு விரைவில்‌ நடைமுறைக்கு கொண்டுவரப்படும்‌. இதற்கென இத்திருத்த வரவு-செலவுத்‌ திட்டமதிப்பீட்டில்‌ 166 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶100) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.60 · ¶100 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2015-16 Rs.662.36 crores transfer scheme AIADMK

“A sum of Rs.662.36 crores is provided in this Budget Estimates for the CMUPT programme.”
“இந்த அரசின்‌ சீரிய செயல்பாடுகளின்‌ காரணமாக மாநிலத்தில்‌ வருவாய்‌ நிர்வாகம்‌ புத்துயிர்‌ பெற்றுள்ளது. சேவைகளை விரைவாக வழங்குவதும்‌ அவை மக்களுக்கு எளிதாகக்‌ கிடைப்பதும்‌ உறுதி செய்யப்பட்டுள்ளன. மாண்புமிகு அம்மா அவர்கள்‌ தமிழக முதலமைச்சராகப்‌ பொறுப்பேற்ற 2011 மே மாதம்‌ முதல்‌ புதிய வருவாய்‌ வட்டங்களும்‌, வருவாய்க்‌ கோட்டங்களும்‌ ஏற்படுத்தப்பட்டுள்ளது மட்டும்‌ அல்லாமல்‌, 338.73 கோடி ரூபாய்‌ செலவில்‌ வருவாய்த்‌ துறைக்கான புதிய கட்டடப்‌ பணிகளும்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவாகப்‌ பட்டா வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌, நீண்டகாலமாக நிலுவையில்‌ உள்ள பட்டா மாறுதல்‌ கோரிக்கைகளைத்‌ தீர்வு செய்வதற்கான பெரும்‌ முயற்சியை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம்‌ 46.68 இலட்சம்‌ பட்டா மாறுதல்கள்‌ இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ 3 இலட்சம்‌ வீட்டுமனைப்‌ பட்டாக்களை ஏழை எளியோருக்கு வழங்கிட இந்த அரசால்‌ இலக்கு நிர்ணயம்‌ செய்யப்பட்டு, இந்த இலக்கு எய்தப்பட்டுள்ளது. 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ மேலும்‌ 3.5 இலட்சம்‌ வீட்டுமனைப்‌ பட்டாக்கள்‌ வழங்கப்படும்‌. முதலமைச்சரின்‌ உழவர்‌ பாதுகாப்புத்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 10.9.2017-லிருந்து இதுவரை 33.65 இலட்சம்‌ பயனாளிகளுக்கு 2,829.19 கோடி ரூபாய்‌ அளவிலான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ 662.36 கோடி ரூபாய்‌ இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும்‌ நிதியாண்டிற்கு மொத்தமாக வருவாய்த்‌ துறைக்கு 6,126.03 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶22) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.16 · ¶22 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.205.99 crores continuation AIADMK · interim

“The ‘Chief Minister’s Uzhavar Padhukappu Thittam’ (CMUPT) has benefited 37.52 lakh beneficiaries with a sum of Rs.3,032 crores in the last five years. A sum of Rs.205.99 crores has been allocated for this scheme.”
“கடந்த ஐந்தாண்டுகளில்‌ ஒன்பது புதிய வருவாய்‌ கோட்டங்களையும்‌, 65 புதிய வட்டங்களையும்‌ இந்த அரசு உருவாக்கியுள்ளது. தஞ்சாவூர்‌, கடலூர்‌, திருப்பூர்‌ ஆகிய மூன்று மாவட்டங்களில்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகங்களையும்‌, கோவை, நீலகிரி, இராமநாதபுரம்‌, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகங்களுக்கு கூடுதல்‌ கட்டடங்களையும்‌, ஆறு கோட்டாட்சிய்‌ அலுவலகக்‌ கட்டடங்களையும்‌, 64 வட்டாட்சியர்‌ அலுவலகக்‌ கட்டடங்களையும்‌, 400 வருவாய்த்‌ துறைக்கான இதர கட்டடங்களையும்‌ 410.99 கோடி ரூபாய்‌ செலவில்‌ அமைக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும்‌, 8,000 கிராம நிர்வாக அலுவலகங்களையும்‌ புதுப்பித்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில்‌, முதலமைச்சரின்‌ உழவர்‌ பாதுகாப்புத்‌ திட்டத்தின்‌ மூலமாக, 3,032 கோடி ரூபாய்‌ அளவில்‌ 37.52 இலட்சம்‌ பயனாளிகள்‌ பயனடைந்துள்ளனர்‌. இத்திட்டத்திற்காக 205.99 கோடி ரூபாயும்‌, வருவாய்த்‌ துறைக்கு மொத்தமாக 5,974 கோடி ரூபாயும்‌ இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. பேரிடர்‌ நிவாரணம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶21) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.15 · ¶21 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.206 crores continuation AIADMK · revised

“For this scheme, an amount of Rs.206 crores has been allocated in the Revised Budget 2016-2017 and Rs.5,686 crores has been allocated for the Revenue Department.”

tnbudget_2016-17_speech_en_revised · p.17 · ¶32 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.251 crore transfer scheme AIADMK

“For the year 2017-2018, Rs.251 crore has been allocated for this scheme.”

tnbudget_2017-18_speech_en · p.16 · ¶24 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.269.82 crore continuation AIADMK

“Under the 'Uzhavar Padhukappu Thittam', 3.67 lakh beneficiaries have benefitted during 2017-2018 and Rs.248.48 crore has been distributed to them. An amount of Rs.269.82 crore has been provided in this Budget for this scheme.”
“அரசு சேவைகளை மக்களின்‌ இல்லங்களுக்கே கொண்டு சென்று, பொதுமக்களின்‌ குறைகளைக்‌ களையும்‌ அம்மா திட்டம்‌ சிறப்பாகச்‌ செயல்பட்டு வருகிறது. உழவர்‌ பாதுகாப்புத்‌ திட்டத்தின்‌” கீழ்‌, 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ 248.48 கோடி ரூபாய்‌ அளவிற்கு 3.67 இலட்சம்‌ பயனாளிகள்‌ பயன்‌ பெற்றுள்ளனர்‌. இத்திட்டத்திற்கு 269.82 கோடி ரூபாய்‌ இந்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விபத்து நிவாரணத்‌ திட்டத்திற்கு 80 கோடி ரூபாயும்‌, நலிந்தோர்‌ நிவாரணத்‌ திட்டத்திற்கு 18.37 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, மொத்தம்‌ 6,144.58 கோடி ரூபாய்‌ வருவாய்த்‌ துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை மாண்புமிகு பேரவைத்‌ தலைவர்‌ அவர்களே,” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶25) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.16 · ¶25 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.169.81 crore continuation AIADMK

“In the Budget Estimates 2019-2020, a sum of Rs.169.81 crore has been provided for Uzhavar Padhukappu Thittam.”

tnbudget_2019-20_speech_en · p.10 · ¶15 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.200.82 crore continuation AIADMK

“The Uzhavar Padhukappu Thittam will also continue to be implemented with a provision of Rs.200.82 crore in the Budget Estimates 2020-21.”
“கடந்த வருட வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ நான்‌ அறிவித்ததின்படி, இந்திய ஆயுள்‌ காப்பீட்டுக்‌ கழகத்துடன்‌ (LIC) இணைந்து, வறுமைக்‌ கோட்டிற்குக்‌ கீழ்‌ உள்ள அனைத்துக்‌ குடும்பங்களும்‌ பயனடையும்‌ வகையில்‌ செயல்படுத்தப்பட உள்ள, புரட்சித்‌ தலைவி அம்மா விரிவான விபத்து மற்றும்‌ ஆயுள்‌ காப்பீட்டுத்‌ திட்டத்திற்கான” விரிவான வழிகாட்டி நெறிமுறைகள்‌ வகுக்கப்பட்டுள்ளன. இயற்கை மரணங்களில்‌, தற்போது வழங்கப்படும்‌ உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்திற்கான இழப்பீட்டுத்‌ தொகை இரண்டு இலட்சம்‌ ரூபாயாக உயர்த்தப்படும்‌. விபத்துகளால்‌ ஏற்படும்‌ உயிரிழப்புகளில்‌, உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்திற்கான இழப்பீட்டுத்‌ தொகை நான்கு இலட்சம்‌ ரூபாயாக உயர்த்தப்படும்‌. விபத்தினால்‌ நிரந்தர ஊனமுற்றோருக்கு உதவித்தொகை இரண்டு இலட்சம்‌ ரூபாய்‌ வரையும்‌ கணிசமாக உயர்த்தி வழங்கப்படும்‌. இத்திட்டம்‌, விரைவில்‌ அறிமுகப்படுத்தப்படும்‌. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ இத்திட்டத்திற்காக 250 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய ஆயுள்‌ காப்பீட்டுத்‌ திட்டத்தின்‌ மூலம்‌, பயன்பெற முடியாத நபர்களுக்காக, தற்போது செயல்படுத்தப்பட்டு வரும்‌ விபத்து நிவாரணத்‌ திட்டம்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. உழவர்‌ பாதுகாப்புத்‌ திட்டம்‌, 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 200.82 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீட்டுடன்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. பேரிடர்‌ மேலாண்மை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶21) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.13 · ¶21 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector