Urban · announced once

Chief Minister's Integrated Urban Development Mission

1 budget named it 1 year span 2,117 ₹ crore allocated TVK government

First announced in 2026-27 and not named in any budget since.

See it on the map → All Urban projects →

What each budget said, year by year

2026-27 Rs.2,117 crore new project TVK · revised

“I am pleased to announce the 'Chief Minister's Integrated Urban Development Mission', bringing under one roof urban infrastructure, water supply, underground sewerage systems, integrated solid waste management, city roads, urban transport, expansion of green spaces, protection of urban water bodies, social infrastructure, the safety of women and children, AI-driven e-governance, and a dedicated Urban Public Health Improvement Mission, with the objective of addressing gaps in urban infrastructure and delivering a visibly better quality of life to every citizen of our urban local bodies. By 2031, this Mission will reshape the urban landscape, character and functioning of Tamil Nadu's cities, positioning the State as a national role model in urban governance. An amount of Rs.2,117 crore has been allocated for this Mission in the current financial year.”
“மாநிலத்தின்‌ அடுத்தகட்ட வளர்ச்சிப்‌ பயணத்தின்‌ அத்தியாயம்‌ தமிழ்நாட்டின்‌ நகர்ப்புரப்‌ பகுதிகளில்‌ இருந்தே தொடங்கும்‌. நகர்ப்புர உட்கட்டமைப்பில்‌ உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்து, நமது நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின்‌ ஒவ்டுவாரு குடிமக்களும்‌ பயன்பெறும்‌ வகையில்‌ சிறந்த வாழ்க்கைத்‌ தரத்தை வழங்கும்‌ நோக்கில்‌, நகர்ப்புர உட்கட்டமைப்பு, குடிநீர்‌ வழங்கல்‌, நிலத்தடிக்‌ கழிவுநீர்‌ வடிகால்‌ அமைப்பு, ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை, நகரச்‌ சாலைகள்‌, நகர்ப்புரப்‌ போக்குவரத்து, பசுமைப்‌ பரப்பு விரிவாக்கம்‌, நகர்ப்புர நீர்நிலைகளின்‌ பாதுகாப்பு, சமூக உட்கட்டமைப்பு, பெண்கள்‌ மற்றும்‌ குழந்தைகளின்‌ பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவைச்‌ சார்ந்த மின்‌ ஆளுமை மற்றும்‌ பிரத்தியேக நகர்ப்புரப்‌ பொது சுகாதார மேம்பாட்டு இயக்கம்‌ ஆகியவற்றை ஒரே கூரையின்‌ கீழ்‌ இணைக்கும்‌ ஒருங்கிணைந்த இயக்கமான முதலமைச்சரின்‌ ஒருங்கிணைந்த நகர்ப்புர மேம்பாட்டுத்‌ திட்டத்தினை: அறிவிப்பதில்‌ நான்‌ பெருமகிழ்ச்சி கொள்கிறேன்‌. 2031 ஆம்‌ ஆண்டிற்குள்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள நகரங்கள்‌ எவ்வாறு காட்சியளிக்க வேண்டும்‌, எவ்வாறு உணரப்பட வேண்டும்‌, எவ்வாறு டெயல்பட வேண்டும்‌ என்பதை இத்திட்டம்‌ புதிதாக வடிவமைக்கிறது. இதன்‌ மூலம்‌ நகர்ப்புர ஆளுமையில்‌, இந்தியாவின்‌ முன்னணி முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு நிலைநிறுத்தப்படும்‌. இந்த இயக்கத்தின்‌ கீழ்‌, நடப்பு நிதியாண்டிற்கு 2117 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்படுகிறது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶107) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.53 · ¶107 · full speech ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector