Fisheries · completed claimed
College of Fisheries Engineering and Fisheries Research Institute
1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2016-17 and not named in any budget since. Places named: Nagapattinam, Ponneri.
Located at Nagapattinam · Nagapattinam district
See it on the map → All Fisheries projects →
What each budget said, year by year
2016-17
“Apart from constituting a separate University for Fisheries, this Government has established a College of Fisheries Engineering at Nagapattinam and Fisheries Research Institute at Ponneri.”
“மீன்பிடி துறைமுகங்கள், இறங்கு தளங்கள், பதப்படுத்தும் பூங்காக்கள், உள்நாட்டு உற்பத்தி வசதிகள் மற்றும் விற்பனை வசதிகள் போன்ற மீன்வளத் துறைக்கான அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் இந்த அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது. இத்தகைய கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக, 2011 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரை, 1100 கோடி ரூபாய்க்கும் மேலாக இந்த அரசு நிதியை வழங்கியுள்ளது. சூரை மீன்பிடி தூண்டில் படகுகளைப் பயன்படுத்தி ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கும் வகையில் 51.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த அரசு தொடங்கியுள்ள திட்டம், மீனவர்களுக்கு கணிசமான வருவாயினை ஈட்டுவதற்கும், மாநிலத்தின் ஆழ்கடல் மீன்பிடித் திறனை வளர்ப்பதற்கும் உதவும். மீன்வளத் துறைக்காக தனிப் பல்கலைக்கழகத்தை நிறுவியதோடு, நாகப்பட்டினத்தில் மீன்வளப் பொறியியல் கல்லூரியையும், பொன்னேரியில் மீன்வள ஆராய்ச்சி மையத்தையும் இந்த அரசு புதிதாக அமைத்துள்ளது. ன்படி, வரவு-செலவுத் திட்ட அறிக்கையுடன் இடைப்பட்ட கால நிதி நிலவரத் திட்டம் குறித்த அறிக்கை ஒன்றையும் மாநில அரசு சட்டப் பேரவையில் வைக்க வேண்டும். இச்சட்டத்தின், பிரிவு 3(2) ன்படி, வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை போன்ற நிதி நிலைக் குறியீடுகளுக்கான இலக்குகளை வரும் ஆண்டுகளுக்குக் குறிப்பிட்டும், அதற்கான அனுமானங்களைத் தெளிவாக விளக்கியும் இடைப்பட்ட கால நிதி நிலவரத் திட்டம் வகுக்கப்பட வேண்டும். இச்சட்டத்தின்படி, வரும் ஆண்டு மற்றும் 2017-2018 முதல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இடைப்பட்ட கால நிதி நிலவரத் திட்டம் சட்டமன்றப் பேரவை முன் வைக்கப்படுகிறது. நோக்கங்கள் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் சமச்சீரான வளர்ச்சி பெற்று, ஏழைகள், நலிவடைந்த பிரிவினர் ஆகியோரும் மாநில வளர்ச்சியில் பங்கேற்கும் வகையில் உரிய வாய்ப்புகளை ஏற்படுத்தத் தேவையான நிதி ஆதாரத்தை உருவாக்கி, உயர் பொருளாதார வளர்ச்சியை அடையும் வகையில் இடைப்பட்ட கால நிதி நிலவரத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், கல்வி உதவித் தொகைகள் போன்ற பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் சாலைகள், நீர்ப்பாசனம் மற்றும் மின்திட்டங்கள் போன்ற மூலதனச் செலவுகளுக்கு இந்த அரசு அதிக அளவில் செலவிட்டு வருகிறது. இவற்றுடன், தொடர்ந்து உயர்ந்துவரும் அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, புதிய பணியிடங்கள் தோற்றுவிப்பு மற்றும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் போன்ற நிருவாகச் செலவினங்களுக்கான நிதித் தேவைகளையும் மாநில அரசு நிறைவு செய்ய வேண்டியுள்ளது. அதே வேளையில், பதினான்காவது நிதி ஆணையம் வகுத்துள்ள இலக்குகளுக்குட்பட்டு நிதிநிலை உறுதித்தன்மையை அடையவும் அரசு உறுதியாக உள்ளது. வருவாய்ப் பற்றாக்குறை அளவை கட்டுப்படுத்துதல், 2017-2018 ஆம் ஆண்டினைத் தவிர்த்து ஏனைய ஆண்டுகளில் நிதிப் பற்றாக்குறையை மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் மூன்று சதவீதத்திற்குள் கட்டுப்படுத்துதல் மற்றும் பதினான்காவது நிதி ஆணையம் நிர்ணயித்துள்ள வரம்பிற்குள் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் கடன் அளவு சதவீதத்தை பராமரித்தல் முதலான நிதிநிலை இலக்குகள் 2016-2019 ஆண்டு காலத்திலும், அதனைத் தொடர்ந்தும் பராமரிக்கப்பட வேண்டும் என்பதை இடைப்பட்ட கால நிதி நிலவரத் திட்டமானது உறுதி செய்கிறது. எதிர்காலக் கணிப்புகள் 2016-2017 ஆம் ஆண்டிற்கான மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி பதினான்காவது நிதி ஆணையம் மதிப்பிட்ட அளவிலேயே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைய போக்குகளின் அடிப்படையில், 2016-2017 ஆம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் மேலும் உயரும் எனவும், பண வீக்கம் மிதமான அளவில் இருக்குமெனவும் கணிக்கப்பட்டுள்ளது. |. வருவாய்க் கணக்கு வரவுகள் மத்திய அரசின் நிதி உதவி உள்ளிட்ட மாநில அரசின் மொத்த வருவாய் வரவுகள் 2016-2017 ஆம் ஆண்டில் ரூ.152,004.23 கோடியாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. வருவாய்க் கணக்கு வரவுகளின் முக்கியக் கூறுகள் மற்றும் அவற்றின் வளர்ச்சி போக்குகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶30) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.22 · ¶30 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Fishing ban period relief assistance · 7 years
- Twelve Fish Landing Centres · 6 years
- Deep sea fishing conversion scheme · 6 years
- Fishing harbour, Mookaiyur · 4 years
- Fishing harbour, Poompuhar · 4 years
- Fish Processing Parks · 3 years