Fisheries · completed claimed

Fishing harbour, Poompuhar

4 budgets named it 9 year span ₹ crore allocated 819 ₹ crore whole-project cost AIADMK government 1 district

First announced in 2011-12 and named again in 3 later budgets, most recently 2019-20. Districts: nagappatinam. Places named: Colachel, Thengaipattinam, Chennai, Chinnamuttom.

Allocated by budget year

Located at Colachel · Kanniyakumari district

See it on the map → All Fisheries projects →

What each budget said, year by year

2011-12 ` 75 crores new project project cost AIADMK · revised

“We have also sought funds from the Central Government for establishing a fishing harbour at Poompuhar at a cost of ` 75 crores and Mookaiyur – south of Rameswaram - at a cost of ` 60 crores.”
“மீன்பிடித்‌ தொழிலை நவீனப்படுத்துவதையும்‌ மீனவர்களுக்கான நலத்திட்டங்களைச்‌ செயல்படுத்துவதையும்‌, இந்த அரசு முன்னுரிமைத்‌ திட்டங்களாகக்‌ கருதுகிறது. மாநிலத்தின்‌ மொத்த கடல்மீன்‌ உற்பத்தி செய்யக்கூடிய திறன்‌ 7 இலட்சம்‌ டன்‌ ஆகும்‌. ஆனால்‌ 4.04 இலட்சம்‌ டன்‌ உற்பத்தியை மட்டுமே நாம்‌ எட்டியுள்ளோம்‌. அதேபோல்‌ மாநிலத்தின்‌ உள்நாட்டு மொத்த மீன்‌உற்பத்தி செய்யும்‌ திறனான 4.5 இலட்சம்‌ டன்‌ ஆக இருந்தாலும்‌, 1.71 இலட்சம்‌ டன்‌ உற்பத்தியை மட்டுமே தமிழ்நாடு அடைந்துள்ளது. ஆழ்கடல்‌ மீன்பிடி தொழிலுக்கு ஏற்ற படகுகளை நிறுத்தி வைக்கும்‌ வசதி போதுமானதாக இல்லாததும்‌, பதப்படுத்துதல்‌, சேமிப்பு, சந்தை வசதிகளில்‌ உள்ள குறைபாடுகள்‌ ஆகியவையும்‌ மீன்‌ உற்பத்தியை அதிகரிப்பதில்‌ தடைகளாக உள்ளன. உலக வங்கியின்‌ சுனாமி மறுசீரமைப்புத்‌ திட்ட நிதியிலிருந்து, 35.65 கோடி ரூபாய்‌ செலவில்‌ நாகப்பட்டினத்திலும்‌, 27.56 கோடி ரூபாய்‌ செலவில்‌ பழையாற்றிலும்‌ நவீன மீன்பிடி துறைமுகங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்‌. மேலும்‌ 75 கோடி ரூபாய்‌ செலவில்‌ பூம்புகாரிலும்‌, 60 கோடி ரூபாய்‌ செலவில்‌ இராமேஸ்வரத்திற்குத்‌ தெற்கிலுள்ள மூக்கையூரிலும்‌ மீன்பிடித்‌ துறைமுகங்களை அமைக்க மத்திய அரசிடமிருந்து நிதி உதவி கோரப்பட்டுள்ளது. இதுதவிர 7 கடலோர மாவட்டங்களில்‌, 12 புதிய மீன்‌ இறங்கு தளங்கள்‌ 74 கோடி ரூபாய்‌ செலவில்‌ அமைக்கப்பட்டு வருகின்றன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶35) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.23 · ¶35 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2014-15 Rs.78.50 crore new project project cost AIADMK

“A new Fishing Harbour at Poompuhar at a cost of Rs.78.50 crore and 23 Fish Landing Centres at a total cost of Rs.152 crore are being constructed.”
“கடந்த மூன்று ஆண்டுகளில்‌ மாநிலத்தில்‌ உள்ள மீன்பிடிக்‌ கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு, முன்‌ எப்போதும்‌ இல்லாத அளவிற்கு, முக்கியத்துவம்‌ அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, கடலூர்‌, பழையாறு, நாகப்பட்டினம்‌, தூத்துக்குடி, சின்னமுட்டம்‌ ஆகிய பகுதிகளில்‌ உள்ள மீன்பிடித்‌ துறைமுகங்கள்‌, மொத்தம்‌ 264.58 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ தரம்‌ உயர்த்தப்பட்டு வருகின்றன. பூம்புகாரில்‌ 78.50 கோடி ரூபாய்‌ செலவில்‌ புதிய மீன்பிடித்‌ துறைமுகமும்‌, 152 கோடி ரூபாய்‌ மொத்த செலவில்‌ பல்வேறு இடங்களில்‌ 23 மீன்‌ இறங்கு தளங்களும்‌ கட்டப்பட்டு வருகின்றன. 2014-2015 ஆம்‌ ஆண்டில்‌ தஞ்சாவூர்‌ மாவட்டம்‌ மல்லிப்பட்டினத்தில்‌ உள்ள மீன்பிடித்‌ துறைமுகம்‌ 60 கோடி ரூபாய்‌ செலவில்‌ மேம்படுத்தப்படும்‌. அத்துடன்‌, தூத்துக்குடி மாவட்டம்‌ புன்னக்காயலில்‌ தாமிரபரணி ஆற்றின்‌ முகத்துவாரம்‌ 18 கோடி ரூபாய்‌ செலவில்‌ நிலைப்படுத்தப்படும்‌. மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஏற்கெனவே அறிவித்தவாறு இராமேஸ்வரத்தில்‌ உள்ள மீன்பிடித்‌ துறைமுகத்தை மேம்படுத்தும்‌ பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. பொது விநியோகத்‌ திட்டம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶38) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.21 · ¶38 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.819.01 crores completion claim project cost AIADMK

“Over the past four years, this Government has taken up development of fishing infrastructure on a massive scale, at a cost of Rs.819.01 crores. Projects in this regard include construction of fishing harbours at Colachel, Thengaipattinam and Poompuhar and strengthening of existing facilities at Chennai, Cuddalore, Pazhayar, Nagapattinam, Thoothukudi and Chinnamuttom, besides developing 30 new fish landing centres.”
“கடந்த நான்கு ஆண்டுகளில்‌ மீன்பிடிக்‌ கட்டமைப்பை பெருமளவு மேம்படுத்துவதற்காக 819.01 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டன. 30 புதிய மீன்‌ இறங்கு தளங்களை அமைத்தல்‌, குளச்சல்‌, தேங்காய்ப்பட்டினம்‌ மற்றும்‌ பூம்புகாரில்‌ மீன்பிடி துறைமுகங்கள்‌ அமைத்தல்‌, சென்னை, கடலூர்‌, பழையாறு, நாகப்பட்டினம்‌, தூத்துக்குடி மற்றும்‌ சின்னமுட்டம்‌ ஆகிய இடங்களில்‌ தற்போதுள்ள வசதிகளை மேம்படுத்துதல்‌ ஆகிய பணிகள்‌ இவற்றுள்‌ முக்கியமானவை ஆகும்‌. உறுதியளிக்கப்பட்ட மத்திய அரசின்‌ உதவி கிடைக்கப்பெறாத சில இனங்களில்‌ கூட, மாநில அரசு தனது நிதியை முறையாக ஒதுக்கீடு செய்து திட்டங்கள்‌ தடையின்றி செயல்படுத்தப்படுவதை உறுதி செய்துள்ளது. 2015-2016 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ மீனளத்‌ துறைக்காக 728.68 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொது விநியோகத்‌ திட்டம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶36) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.23 · ¶36 · source PDF ↗ · on the map →

2019-20 Rs.148 crore new project project cost AIADMK

“and Poompuhar fishing harbour in Nagappatinam district at a cost of Rs.148 crore.”

tnbudget_2019-20_speech_en · p.24 · ¶39 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector