Fisheries · dormant
Deep sea fishing conversion scheme
First announced in 2012-13 and named again in 5 later budgets, most recently 2021-22.
Allocated by budget year
⇄ marks the budget where the name changes. This scheme continues an earlier one under a new name: Mechanised boats subsidy scheme (2011-12). Budget speeches almost never announce a rename, so this link is inferred from the two schemes' descriptions and timing rather than stated in the documents.
See it on the map → All Fisheries projects →
What each budget said, year by year
2012-13 Rs.25 crores
“this Government launched a new scheme with an outlay of Rs.25 crores providing a subsidy of 25%, not exceeding Rs.5 lakhs per beneficiary, for conversion of trawler boats to deep-sea tuna long liners or procuring new motorised crafts capable of deep sea fishing.”
“மாநிலத்தின் தற்போதைய மீன் உற்பத்தியாகிய 5.97 இலட்சம் டன் அளவில், சுமார் 4.25 லட்சம் டன் கடல் மீன்பிடிப்பிலிருந்தும், 1.72 லட்சம் டன் உள்நாட்டு மீன்பிடிப்பிலிருந்தும் கிடைக்கின்றன. உள்நாட்டு மீன் உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கு தற்போதுள்ள உள்நாட்டு நீர்வளங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இதற்காக, உள்நாட்டு மீன் பிடிப்பை அதிகப்படுத்தும் வகையில் மீன் விதைப் பண்ணைகளில் தற்போதுள்ள வசதிகளை 2012-2013 ஆம் ஆண்டில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்த இந்த அரசு முடிவு செய்துள்ளது. கடற்கரையை ஒட்டிய கடற்பகுதிகளில் அதிகமாக மீன்பிடிுத்தலை தவிர்க்கவும், ஆழ்கடல் மீன்பிடி முறைகளை ஊக்குவிக்கவும், தற்போதுள்ள மீன்பிடி விசைப் படகுகளை ஆழ்கடல் சூரை மீன்பிடி தூண்டில் படகுகளாக மாற்றுவதற்கும், ஆழ்கடலில் மீன் பிடிக்க வசதியான புதிய இயந்திரப் படகுகளை வாங்குவதற்கும், ஒரு பயனாளிக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல், 25 சதவீத மானியத்துடன் கூடிய, நிதியுதவி வழங்கும் புதிய திட்டத்தை 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த அரசு தொடங்கி உள்ளது. இத்திட்டம் ஐந்தாண்டு காலத்தில் படிப்படியாக செயல்படுத்தப்படும். பாசனமும், வெள்ளத் தடுப்பும்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶43) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.28 · ¶43 · source PDF ↗ · on the map →
2013-14 Rs.30 crores
“In order to promote deep sea fishing, the existing 25% subsidy will be enhanced to 50% to fishermen for procuring new tuna long-liners and a sum of Rs.30 crores will be set apart for this purpose.”
“ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிப்பதற்காக, புதிய ஆழ்கடல் டியூனா மீன்பிடிப் படகுகளை வாங்குவதற்கு வழங்கப்படும் 25 சதவீத மானியம் 50 சதவீதமாக உயர்த்தப்படும். இதற்காக, 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். ஆழமற்ற கடல் பகுதிகளில் செய்யப்படும் இழுவை மீன்பிடி முறையிலிருந்து, நிலைக்கத்தக்க ஆழ்கடல் மீன்பிடி முறைக்கு நமது மீனவர்களை இது மாறச் செய்யும் என நான் நம்புகிறேன். கட்டமைப்பு மோம்பாடு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶50) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.21 · ¶50 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.5 crore
“The scheme for assisting fishermen to modernise their fishing vessels to make them suitable for deep sea tuna fishing will be continued with a subsidy outlay of Rs.5 crore.”
“இந்த அரசு மீனவர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. மீன்பிடிப்பு குறைவாக உள்ள காலங்களில் மீனவக் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் நிவாரண உதவி இந்த அரசால் ஏற்கெனவே உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 47.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2014-2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் மீன்பிடிப்பு தடை செய்யப்படும் காலங்களில் வழங்கப்படும் நிவாரணத்திற்காக 105 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 184.72 கோடி ரூபாய் செலவில், மானிய விலையில் மீனவர்களுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணையை இந்த அரசு வழங்கி வருகிறது. இத்திட்டம் வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் ஐந்து கோடி ரூபாய் மானிய ஒதுக்கீட்டுடன் ஆழ்கடலில் சூரை மீன் பிடிப்பதற்காக மீன்பிடிப் படகுகளை நவீனப்படுத்த மீனவர்களுக்கு உதவும் திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶37) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.20 · ¶37 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.51.30 crores
“The scheme of promoting deep sea fishing with tuna longliners at an outlay of Rs.51.30 crores has heralded a new beginning in increasing the deep sea fishing capability in the State as well as earning a substantial income by the fisherfolk.”
“மீன்பிடி துறைமுகங்கள், இறங்கு தளங்கள், பதப்படுத்தும் பூங்காக்கள், உள்நாட்டு உற்பத்தி வசதிகள் மற்றும் விற்பனை வசதிகள் போன்ற மீன்வளத் துறைக்கான அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் இந்த அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது. இத்தகைய கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக, 2011 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரை, 1100 கோடி ரூபாய்க்கும் மேலாக இந்த அரசு நிதியை வழங்கியுள்ளது. சூரை மீன்பிடி தூண்டில் படகுகளைப் பயன்படுத்தி ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கும் வகையில் 51.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த அரசு தொடங்கியுள்ள திட்டம், மீனவர்களுக்கு கணிசமான வருவாயினை ஈட்டுவதற்கும், மாநிலத்தின் ஆழ்கடல் மீன்பிடித் திறனை வளர்ப்பதற்கும் உதவும். மீன்வளத் துறைக்காக தனிப் பல்கலைக்கழகத்தை நிறுவியதோடு, நாகப்பட்டினத்தில் மீன்வளப் பொறியியல் கல்லூரியையும், பொன்னேரியில் மீன்வள ஆராய்ச்சி மையத்தையும் இந்த அரசு புதிதாக அமைத்துள்ளது. ன்படி, வரவு-செலவுத் திட்ட அறிக்கையுடன் இடைப்பட்ட கால நிதி நிலவரத் திட்டம் குறித்த அறிக்கை ஒன்றையும் மாநில அரசு சட்டப் பேரவையில் வைக்க வேண்டும். இச்சட்டத்தின், பிரிவு 3(2) ன்படி, வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை போன்ற நிதி நிலைக் குறியீடுகளுக்கான இலக்குகளை வரும் ஆண்டுகளுக்குக் குறிப்பிட்டும், அதற்கான அனுமானங்களைத் தெளிவாக விளக்கியும் இடைப்பட்ட கால நிதி நிலவரத் திட்டம் வகுக்கப்பட வேண்டும். இச்சட்டத்தின்படி, வரும் ஆண்டு மற்றும் 2017-2018 முதல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இடைப்பட்ட கால நிதி நிலவரத் திட்டம் சட்டமன்றப் பேரவை முன் வைக்கப்படுகிறது. நோக்கங்கள் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் சமச்சீரான வளர்ச்சி பெற்று, ஏழைகள், நலிவடைந்த பிரிவினர் ஆகியோரும் மாநில வளர்ச்சியில் பங்கேற்கும் வகையில் உரிய வாய்ப்புகளை ஏற்படுத்தத் தேவையான நிதி ஆதாரத்தை உருவாக்கி, உயர் பொருளாதார வளர்ச்சியை அடையும் வகையில் இடைப்பட்ட கால நிதி நிலவரத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், கல்வி உதவித் தொகைகள் போன்ற பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் சாலைகள், நீர்ப்பாசனம் மற்றும் மின்திட்டங்கள் போன்ற மூலதனச் செலவுகளுக்கு இந்த அரசு அதிக அளவில் செலவிட்டு வருகிறது. இவற்றுடன், தொடர்ந்து உயர்ந்துவரும் அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, புதிய பணியிடங்கள் தோற்றுவிப்பு மற்றும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் போன்ற நிருவாகச் செலவினங்களுக்கான நிதித் தேவைகளையும் மாநில அரசு நிறைவு செய்ய வேண்டியுள்ளது. அதே வேளையில், பதினான்காவது நிதி ஆணையம் வகுத்துள்ள இலக்குகளுக்குட்பட்டு நிதிநிலை உறுதித்தன்மையை அடையவும் அரசு உறுதியாக உள்ளது. வருவாய்ப் பற்றாக்குறை அளவை கட்டுப்படுத்துதல், 2017-2018 ஆம் ஆண்டினைத் தவிர்த்து ஏனைய ஆண்டுகளில் நிதிப் பற்றாக்குறையை மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் மூன்று சதவீதத்திற்குள் கட்டுப்படுத்துதல் மற்றும் பதினான்காவது நிதி ஆணையம் நிர்ணயித்துள்ள வரம்பிற்குள் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் கடன் அளவு சதவீதத்தை பராமரித்தல் முதலான நிதிநிலை இலக்குகள் 2016-2019 ஆண்டு காலத்திலும், அதனைத் தொடர்ந்தும் பராமரிக்கப்பட வேண்டும் என்பதை இடைப்பட்ட கால நிதி நிலவரத் திட்டமானது உறுதி செய்கிறது. எதிர்காலக் கணிப்புகள் 2016-2017 ஆம் ஆண்டிற்கான மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி பதினான்காவது நிதி ஆணையம் மதிப்பிட்ட அளவிலேயே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைய போக்குகளின் அடிப்படையில், 2016-2017 ஆம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் மேலும் உயரும் எனவும், பண வீக்கம் மிதமான அளவில் இருக்குமெனவும் கணிக்கப்பட்டுள்ளது. |. வருவாய்க் கணக்கு வரவுகள் மத்திய அரசின் நிதி உதவி உள்ளிட்ட மாநில அரசின் மொத்த வருவாய் வரவுகள் 2016-2017 ஆம் ஆண்டில் ரூ.152,004.23 கோடியாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. வருவாய்க் கணக்கு வரவுகளின் முக்கியக் கூறுகள் மற்றும் அவற்றின் வளர்ச்சி போக்குகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶30) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.22 · ¶30 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.14.32 crores
“This Government has pioneered a scheme to tap the untapped deep sea fishery resources by helping our fishermen to procure new Tuna longliners, with 50 per cent subsidy subject to a maximum of Rs.30 lakh at a total outlay of Rs.51.30 crores. So far, this scheme has benefited 94 fishermen. A sum of Rs.14.32 crores has been provided for 2016-2017 to implement this scheme.”
“ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கும் முன்னோடித் திட்டம் மூலமாக, சூரை மீன்பிடித் தூண்டில் படகுகளை 50 சதவீத மானியத்தில் 30 இலட்சம் ரூபாய்க்கு மானியம் மிகாமல், மீனவர்கள் வாங்கிப் பயன்பெற 51.30 கோடி ரூபாய் இந்த அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டத்தின் மூலமாக இதுவரை, 94 மீனவர்கள் பயன் பெற்றுள்ளனர். 2016-2017 ஆம் ஆண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 14.32 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶46) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.26 · ¶46 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2019-20 Rs.286 crore
“In the first phase, a sum of Rs.286 crore was sanctioned towards construction of 500 deep sea tuna long liners-cum- gillnetter boats” tnbudget_2019-20_speech_en · p.1 · source PDF ↗ · on the map →
2021-22
“This Government will expedite the special programme for diversification of fishing trawlers from the Palk Bay area so that more boats can be converted to gill netters and tuna long liners. Alternative livelihood schemes including sea weed cultivation, marine cage pisciculture and coastal aquaculture will also be promoted.”
“தமிழ்நாடு நீண்ட கடலோரப் பகுதியையும், பெரிய மீனவர் சமூகத்தையும் கொண்ட மாநிலமாகும். 6000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புடன், கடல் மீன் உற்பத்தியில் தற்போது தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது பெரிய மாநிலமாக விளங்குகிறது. மீன்பிடித் தடைக்கால நிவாரண நிதிக்காகவும் சிறப்பு நிதிக்காகவும் கடல்சார் மீனவருக்கான செமிப்புடன் கூடிய நிவாரண திட்டத்திற்காகவும் மொத்த தொகையாக 303.66 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாக் வளைகுடாப் பகுதியில், மீன்பிடி இழுவைப் படகுகளிலிருந்து செவுள் வலை மற்றும் இழுவை வலை அமைப்புகளுக்கு படகுகளை மாற்றியமைப்பதற்கு பன்முகத்தன்மைக்கான சிறப்புத் திட்டத்தை இந்த அரசு விரைவுப்படுத்தும். கடல் பாசி வளர்ப்பு, கூண்டுகளில் மீன் வளர்ப்பு மற்றும் கடல் வாழ் உயிரின வளர்ப்பு உள்ளிட்ட மாற்று வாழ்வாதாரத் திட்டங்களும் ஊக்குவிக்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶51) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.24 · ¶51 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2021-22
“The special scheme of diversification of 2,000 trawlers is currently under implementation and 500 deep sea tuna long liners are under construction. 42 deep sea fishing boats have been completed and are currently in operation.”
“ஆழ்கடல் மீன்பிடிப்பு, உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பினை உருவாக்குதல், தகவல் தொடர்பு அமைப்புகள், மீன் பதப்படுத்தும் வசதிகள் மற்றும் நிலைக்கத்தக்க மீன்பிடிப்பு நடைமுறைகள் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக, இந்த அரசால் மேற்கொள்ளப்பட்ட அயராத முயற்சிகள் பெரிய அளவில் பாராட்டப்பட்டுள்ளன. 2,000 இழுவலை மீன்பிடி படகுகளை மாற்றுவதற்கான சிறப்புத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 500 ஆழ்கடல் தூண்டில் கொண்ட சூரை மீன்பிடி படகுகளின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 42 ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் கட்டப்பட்டு, தற்போது செயல்பாட்டில் உள்ளன. கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம், தமிழ்நாடு கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம், மீனவர்களுக்கான மீன்பிடிப்பு குறைவுகால சிறப்பு நிதி உதவித் திட்டம் மற்றும் மீன்பிடி தடைக்கால நிவாரணத் திட்டம் உள்ளிட்ட, மீனவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களின் கீழ், 2020-21 ஆம் ஆண்டில் மொத்த நிவாரண நிதியுதவியாக 301.31 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶51) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2021-22_speech_en_interim · p.34 · ¶51 · source PDF ↗ · on the map →
Linked projects
- contains Diversification of 2,000 trawlers in Palk-Bay · 2019-20 –2020-21
- renames or replaces Mechanised boats subsidy scheme · 2011-12
- runs alongside Mid-sea Fish Processing Unit and Carrier Mother Vessel · 2011-12
Nearby in the same sector
- Fishing ban period relief assistance · 8 years
- Twelve Fish Landing Centres · 6 years
- Fishing harbour, Mookaiyur · 4 years
- Fishing harbour, Poompuhar · 4 years
- Fish Processing Parks · 3 years
- Special allowance for fishermen (non-fishing period) · 3 years