Welfare · dormant
Deendayal Upadhyaya Grameen Kaushalya Yojana (DDU-GKY)
2 budgets named it 2 year span 530 ₹ crore allocated AIADMK government
First announced in 2019-20 and named again in 1 later budget, most recently 2020-21.
Allocated by budget year
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2019-20 Rs.230.89 crore
“A sum of Rs.230.89 crore has been provided under Deendayal Upadhyaya Grameen Kaushalya Yojana (DDU-GKY) for placement linked skill training to benefit rural youth for the coming year.”
“வறுமை ஒழிப்பில் கணிசமான அளவு முன்னேற்றத்தைக் கண்டுள்ள இந்த அரசு, வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. மக்களைத் திரட்டி ஒருங்கிணைத்தல், திறன் பயிற்சி, வங்கிக் கடன் மூலம் ஊரக குறுந்தொழில்களை உருவாக்குதல் போன்ற பொருளாதார வளர்ச்சிக்கான விரிவான உத்திகளை இத்திட்டங்களில் அரசு கையாண்டு வருகிறது. பல்வேறு நகர்ப்புர மற்றும் ஊரக வறுமை ஒழிப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான மைய நிறுவனமாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் உள்ளது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், 31 மாவட்டங்களில் உள்ள 385 வட்டாரங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டம் மற்றும் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் ஒரு அங்கமாகச் செயல்படுத்தப்படுகின்றன. 2019-2020 ஆம் ஆண்டில் இந்த இயக்கத்தைச் செயல்படுத்துவதற்காக 349.46 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற இளைஞர்கள் பயனடையும் வகையில், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி அளிக்க “தீனதயாள் உபாத்யாயா கிராமின் கெளசல்யா யோஜனா” திட்டத்தின் கீழ் 230.89 கோடி ரூபாய் வரும் நிதியாண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புது வாழ்வுத் திட்டத்தினைத் தொடர்ந்து உலக வங்கியின் நிதியுதவியுடன் 918.20 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம்” 2018-2019 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 26 மாவட்டங்களில் உள்ள 120 வட்டாரங்களில், 3,994 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமே ஊரகக் குறுந்தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பது ஆகும். 2019-2020 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக 172 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீனதயாள் உபாத்யாயா-தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் ' கீழ், நகர்ப்புர வறுமை ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தேசிய திட்டத்தின் நிதியை, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின்” நிதியுடன் ஒருங்கிணைத்து மாநில அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது. 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 'தீனதயாள் உபாத்யாயா தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்திற்காக” 150 கோடி ரூபாயும், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்திற்காக 50 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 1,031.53 கோடி ரூபாய் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக இந்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶69) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.40 · ¶69 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.299.60 crore
“28,063 persons will be trained in 2020-21 and the Budget Estimates for 2020-21 include a provision of Rs.299.60 crore for this scheme.”
“கிராமப்புற, நகர்ப்புரப் பகுதிகளுக்கான வாழ்வாதார இயக்கங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கம் மாநிலத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும், அதாவது 388 வட்டாரங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, இந்த இயக்கத்தின் கீழ், 83,257 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இயக்கத்திற்காக, வரவு-செலவுத் திட்டத்தில் 450.65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீன் தயாள் உபாத்தியாய கிராமப்புறத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மொத்தமாக 1,08,416 இளைஞர்கள் 2014-15 முதல் இது வரையில் பயிற்சி பெற்றுள்ளனர். 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இந்த திட்டத்திற்காக 299.60 கோடி ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு, 28,063 இளைஞர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும். தமிழ்நாடு கிராமப்புற புத்தாக்கத் திட்டம் (Tamil Nadu Rural Transformation Project) 26 மாவட்டங்களில் உள்ள 120 வட்டாரங்களில் உலக வங்கியின் நிதியுதவியுடன், 918.20 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தொழில் முனைவோர்களை ஊரகப்பகுதிகளில் ஊக்குவிப்பதற்காக, அதிலும் குறிப்பாக, பெண்கள், பழங்குடியினர், ஆதிதிராவிடர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை தொழில்முனைவோர்களாக உருவாக்குவதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 163.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶78) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.44 · ¶78 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 16 years
- Free bicycles for SC/ST students · 13 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Social Security Pension Schemes · 12 years
- Marriage assistance with gold coin · 11 years