Police & justice · dormant

Digitization of High Court of Madras court records

3 budgets named it 3 year span — ₹ crore allocated 37 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2016-17 and named again in 2 later budgets, most recently 2018-19. Places named: Chennai.

Allocated by budget year

Located at Chennai · Chennai district

See it on the map → All Police & justice projects →

What each budget said, year by year

2016-17 Rs.9.43 crores continuation project cost AIADMK · revised

“Digitization of court records of the High Court of Madras is under progress at a cost of Rs.9.43 crores.”
“நீதிமன்றங்கள்‌ சீராகவும்‌ செம்மையாகவும்‌ செயல்பட, நீதிமன்றக்‌ கட்டமைப்பு வசதிகள்‌ பெருமளவு மேம்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில்‌, 223 புதிய நீதிமன்றங்கள்‌ உருவாக்கப்பட்டு, 486.26 கோடி ரூபாய்‌ செலவில்‌ புதிய நீதிமன்றக்‌ கட்டடங்கள்‌ அமைக்கப்பட்டுள்ளதுடன்‌, கூடுதல்‌ நீதிபதிகளுக்கும்‌, தேவையான ஊழியர்களுக்கும்‌ ஒப்புதல்‌ அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில்‌ மாநில நீதித்துறை பயிற்சிக்‌ கழகத்தை அமைத்துள்ளதுடன்‌, கோயம்புத்தூர்‌ மற்றும்‌ மதுரையில்‌ அதன்‌ மண்டல மையங்கள்‌, 28.10 கோடி ரூபாய்‌ செலவில்‌ அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சிறப்பு முயற்சியாக நீதிமன்றப்‌ பதிவுருக்களை கணினிமயமாக்குவதற்கு 9.43 கோடி ரூபாய்க்கு ஒப்பளிக்கப்பட்டு அதற்கான பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, நீதி நிர்வாகத்திற்கு 993.24 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிர்வாக ஆளுமை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶26) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2016-17_speech_en_revised · p.15 · ¶26 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.37 crore continuation project cost AIADMK

“Digitisation of court records has been taken up at a cost of Rs.37 crore and is expected to substantially improve case file management and enhance the efficiency of the judiciary.”
“நீதிமன்றங்களின்‌ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 2011 ஆம்‌ ஆண்டிலிருந்து 265 புதிய நீதிமன்றங்களை ஏற்படுத்த அரசு ஆணையிட்டுள்ளது. மேலும்‌, இதே காலகட்டத்தில்‌, நீதிமன்றங்களின்‌ உட்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்காக, 928.22 கோடி ரூபாய்‌ செலவில்‌ நீதிமன்றக்‌ கட்டடங்கள்‌ கட்டுவதற்கும்‌, கூடுதல்‌ பணியாளர்கள்‌ நியமனம்‌ செய்வதற்கும்‌ ஆணையிடப்பட்டுள்ளது. நீதிமன்ற ஆவணங்களை கணினிமயமாக்கும்‌ திட்டம்‌ 37 கோடி ரூபாய்‌ செலவில்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினால்‌, வழக்கு சம்பந்தப்பட்ட கோப்புகள்‌ பராமரிக்கப்படும்‌ மேலாண்மை முறை மேம்படுவதுடன்‌, நீதித்‌ துறையின்‌ செயல்‌ திறனும்‌ அதிகரிக்கும்‌. 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, நீதிமன்றங்களுக்கான கட்டடங்கள்‌ கட்டுவதற்கு 229 கோடி ரூபாயும்‌, நீதி நிர்வாகத்‌ துறைக்கு மொத்தமாக 984 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிர்வாக ஆளுமை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶21) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.14 · ¶21 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.37 crore new project project cost AIADMK

“to enhance the efficiency of courts, digitization of court records has been taken up at a cost of Rs.37 crore.”
“நீதித்‌ துறையின்‌ செயல்பாட்டினை மேம்படுத்துவதற்காக, புதிய நீதிமன்றங்களை அமைக்கவும்‌, பல்வேறு புதிய கட்டடங்களைக்‌ கட்டுவதற்காகவும்‌, கூடுதல்‌ பணியாளர்களை நியமனம்‌ செய்வதற்காகவும்‌, 2011 ஆம்‌ ஆண்டு முதல்‌ 1382.76 கோடி ரூபாயை இந்த அரசு அனுமதித்துள்ளது. மேலும்‌, நீதிமன்றங்களின்‌ செயல்திறனை உயர்த்துவதற்காக, நீதிமன்ற ஆவணங்களை கணினிம௰யமாக்கும்‌ திட்டம்‌ 37 கோடி ரூபாய்‌ செலவில்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீதி நிர்வாகத்‌ துறைக்கு 1,197.95 கோடி ரூபாயும்‌, நீதிமன்றக்‌ கட்டடங்களின்‌ கட்டுமானப்‌ பணிகளுக்காக 182.44 கோடி ரூபாயும்‌ இந்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நிர்வாக ஆளுமை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶21) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.14 · ¶21 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector