Education · completed claimed
Eleven new Arts and Science Colleges
First announced in 2011-12 and named again in 3 later budgets, most recently 2025-26. Districts: chengalpattu, chennai, dindigul, niligiris, sivagangai, thanjavur, thoothukudi, tiruvarur, villupuram. Places named: Harūr, Srirangam, Coonoor, Natham, Alandur, Vikravāndi, Cheyyur, Manamadurai.
Allocated by budget year
Located at Harūr · Dharmapuri district
See it on the map → All Education projects →
What each budget said, year by year
2011-12
“Hon’ble Chief Minister has inaugurated eleven new Arts and Science Colleges as constituent colleges of the respective Universities recently at Harur and Pappireddipatti in Dharmapuri District; Nagalapuram in Thoothukudi District; Kallakurichi in Villupuram District; Vedaranyam in Nagapattinam District; Tirupattur in Vellore District; Tiruthuraipoondi and Nannilam in Tiruvarur District; Nemmeli in Kancheepuram District; Sattur in Virudhunagar District; and Srirangam in Tiruchirappalli District.”
“அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய தரமான உயர் கல்வியை வழங்குவதே இந்த அரசின் குறிக்கோளாகும். உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பட்ட வசதிகளுடன் கூடிய உயர்கல்வி மையமாக தமிழகத்தை உருவாக்குவதே இந்த அரசின் விருப்பமாகும். நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கும், கிராமப்புற மாணவ மாணவியர்களுக்கும் உயர் கல்வி வசதி மேலும் கிடைக்கச் செய்ய மாநில அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நோக்கத்தை அடையும் வகையில் குறைந்தபட்ச தகுதியாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (AICTE) குறிப்பிட்டுள்ள அளவுகோலிலிருந்து மாறுபட்டு அக்குறியீடுகளைத் தளர்த்தி பின்பற்ற இந்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவ மாணவியர்களும் கிராமப்புற மாணவ மாணவியர்களும் உயர்கல்வியைப் பெருமளவில் பெற முடியும். இத்தகைய தளர்த்தப்பட்ட குறியீடுகளைப் பின்பற்றும்படி மாண்பமை உயர் நீதிமன்றமும் இந்த மாநிலத்திற்கு ஓர் இடைக்கால ஆணை பிறப்பித்துள்ளது என்பதை நான் மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகிறேன். தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி - தூத்துக்குடி மாவட்டத்தில் நாகலாபுரம்; விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி; நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம்; வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர்; திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, நன்னிலம்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெம்மேலி; விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர்; திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் என பதினோறு இடங்களில் புதிதாக அரசு கலை-அறிவியல் கல்லூரிகளை அந்தந்த பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சமீபத்தில் தொடங்கி வைத்தார்கள். தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூரில் அரசு பொறியியல் கல்லூரி ஒன்றை புதிதாகத் தொடங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தொழிற்கல்வி பயிலும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கட்டணம் இந்த அரசால் தொடர்ந்து வழங்கப்படும். 2011-2012 ஆம் ஆண்டில் இதற்காக, 280 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶85) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.52 · ¶85 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2011-12 ` 4 crores
“a new Arts and Science College at a cost of ```` 4 crores”
“பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தமிழக முதல்வரை சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுத்து அனுப்பிய ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜுன் 19 முதல் 21 ஆம் நாள் வரை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்ட நன்றி அறிவிப்பு சுற்றுப்பபணத்தில் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 190 கோடி ரூபாய் அளவில் பல்வேறு வளர்ச்சி, நலத் திட்டப்பணிகளை அத்தருணத்தில் அறிவித்தார்கள். காவிரி ஆற்றின் குறுக்கே முத்தரசநல்லூரில் 32 கோடி ரூபாய் செலவில் ஒரு தடுப்பணை; 10 கோடி ரூபாய் செலவில் மகளிருக்கென தோட்டக்கலைக் கல்லூரி- ஆராய்ச்சி நிறுவனம்; நான்கு கோடி ரூபாய் செலவில் ஒரு புதிய அறிவியல்-கலைக் கல்லூரி; 36.40 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீரங்கத்தில் பயணியர் விடுதி ஆகியவை இந்த அறிவிப்புகளில் குறிப்பிடத்தக்கவை. இந்த அரசு ஒரு தேசிய சட்டப் பள்ளியையும், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தையும் ஸ்ரீரங்கம் தொகுதியில் புதிதாகத் தொடங்கவுள்ளது. மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை ஒன்றரை ஆண்டில் நிறைவேற்ற ஒரு காலவரையறையை இந்த அரசுக்கு நிர்ணயித்து, அதற்கேற்ப வைராக்யத்துடன் செயல்பட்டு வாக்குறுதிகளை நிறைவேற்றும் வல்லமை படைத்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உறுதியை இந்த அறிவிப்புகள் பறைசாற்றுகின்றன. இந்த அரசு பதவியேற்ற பின்பு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், நிருவாக அமைப்பை ஒழுங்குபடுத்துவதிலும், புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் எடுத்து வரும் முயற்சிகளைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டுகின்றனர் என்ற செய்தியைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ஆளுகை”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶4) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.93 · ¶4 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2012-13
“Eleven new Arts and Science Colleges were started during 2011- 2012 to improve access to higher education for the poor.”
“உயர் கல்வியிலும், உயர் ஆராய்ச்சியிலும் முன்னணி மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்பதே நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பேரவா. ஏழைகளுக்கும் உயர் கல்வி தடையின்றி கிடைப்பதை உறுதி செய்திட, 2011-2012 ஆம் ஆண்டில் 11 புதிய கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் புதிய பொறியியல் கல்லூரி, ஸ்ரீரங்கத்தில் தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், தேசிய சட்டப் பள்ளி ஆகியவற்றை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நமது பல்கலைக்கழகங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி அவற்றை நேர்த்திமிகு மையங்களாகவும், ஆராய்ச்சிகளை மேற்கொண்டு புதிய படைப்புகளை படைக்கும் மையங்களாகவும் மாற்றுவதற்கான முயற்சிகள் தொடரும். இத்தகைய புதுமைகளை உருவாக்கும் பணிகளில் ஈடுபடுவதற்கு, தொழில் துறையினரோடு இணைந்து செயல்பட இப்பல்கலைக்கழகங்கள் ஊக்குவிக்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶94) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.60 · ¶94 · source PDF ↗ · on the map →
2021-22
“This year 10 new Government Arts and Science Colleges will be commenced.”
“அகில இந்திய அளவில் காணப்படுகிற உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதமான 27.1 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் 51.4 சதவீதம் என்ற மிக உயர்ந்த அளவிலும், மாணவர் : ஆசிரியர் விகிதம் 17:1 என்ற சிறப்பான விகிதத்தையும் கொண்டு தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது. இன்னும் பல்வேறு வட்டங்களில் அரசு அல்லது அரசு உதவிபெறும் கல்லூரியோ அல்லது பல்தொழில்நுட்பக் கல்லூரியோ இல்லை, மாநிலத்தில் உயர்கல்வி சென்றடையாத பகுதிகளுக்கும் அடுத்த பத்தாண்டுகளில் அரசால் உயர்கல்வி விரிவுபடுத்தப்படும், இந்த ஆண்டு புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும்,”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶108) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2021-22_speech_en_revised · p.48 · ¶108 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2025-26
“new Government Arts and Science Colleges will be started in Coonoor in the Niligiris district, Natham in Dindigul district, Alandhur in Chennai district, Vikravandi in Villupuram district, Cheyyur in Chengalpattu district, Manamadurai in Sivagangai district, Muthupettai in Tiruvarur district, Tiruvidaimaruthur in Thanjavur district, Perambalur in Perambalur district and Ottapidaram in Thoothukudi district.” financedept_2025-26_speech_en · p.38 · ¶78 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- 23 new Government Industrial Training Institutes (ITIs) · 2 years · shares a district
- Veterinary College, Tirunelveli · 3 years · shares a district
- First-generation graduate education fees · 10 years
- Free school uniforms and footwear · 9 years
- School infrastructure (259 schools) · 9 years
- Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) · 8 years