Education · dormant

Filling infrastructure gap in Government ITIs

1 budget named it 1 year span ₹ crore allocated 30 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2018-19 and not named in any budget since.

See it on the map → All Education projects →

What each budget said, year by year

2018-19 Rs.30 crore enhancement project cost AIADMK

“The present infrastructure gap in Government ITIs will be filled up at a cost of Rs.30 crore for enabling them to receive central grants.”
“மாநிலத்தில்‌ 88 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள்‌, 484 தனியார்‌ தொழிற்பயிற்சி நிறுவனங்கள்‌ மற்றும்‌ 385 தொழிற்பயிற்சிப்‌ பள்ளிகள்‌ மூலம்‌ தொழிற்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அரசு நடத்தி வரும்‌ 88 தொழிற்பயிற்சி நிறுவனங்களில்‌ 26 தொழிற்பயிற்சி நிறுவனங்களைத்‌ தவிர ஏனைய தொழிற்பயிற்சி நிறுவனங்கள்‌ தேசிய பயிற்சிக்‌ குழு முறையின்‌ (National Council for Vocational Training) கீழ்‌ கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த 26 தொழிற்பயிற்சி நிறுவனங்களையும்‌ 126 கோடி ரூபாய்‌ செலவில்‌ தரம்‌ உயர்த்தி, வரும்‌ இரண்டு ஆண்டுகளில்‌ தேசிய பயிற்சிக்‌ குழு முறையின்‌ கீழ்‌ கொண்டு வரப்படும்‌. அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களின்‌ கட்டமைப்பில்‌ உள்ள குறைபாடுகளை 30 கோடி ரூபாய்‌ செலவில்‌ நீக்கி, மத்திய அரசின்‌ நிதியுதவி பெற வழிவகை செய்யப்படும்‌. தொழிற்பயிற்சி நிறுவனங்களில்‌ படிக்கும்‌ மாணவர்களின்‌ வேலைவாய்ப்பினை அதிகரிக்கும்‌ வகையில்‌, 20 தொழிற்பயிற்சி நிறுவனங்களில்‌ 38 கோடி ரூபாய்‌ செலவில்‌ மருத்துவ மின்னணுவியல்‌, இயந்திரவியல்‌, கருவியியல்‌ மற்றும்‌ அச்சு உருவாக்கம்‌, மின்‌ மின்னணுவியல்‌ மற்றும்‌ கட்டட வடிவமைப்பு ஆகிய புதிய தொழிற்பிரிவுகளை இந்த அரசு தொடங்கும்‌. தொழிற்பயிற்சி நிறுவனங்களில்‌ பயிலும்‌ 10,000 மாணவர்களுக்கு தொழில்‌ அனுபவம்‌ வழங்கவும்‌, அவர்கள்‌ வேலைவாய்ப்புப்‌ பெறுவதற்குத்‌ தேவையான திறன்களைப்‌ பெறவும்‌, தொழிற்சாலைகளில்‌ நேரடியாக பயிற்சி பெற இந்த அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶13) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.9 · ¶13 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector