Fisheries · dormant

Fishermen welfare schemes

3 budgets named it 11 year span 946 ₹ crore allocated AIADMK / DMK governments

First announced in 2013-14 and named again in 2 later budgets, most recently 2023-24.

Allocated by budget year

See it on the map → All Fisheries projects →

What each budget said, year by year

2013-14 Rs.200 crores continuation AIADMK

“In the Budget Estimates 2013-2014, this Government has provided Rs.200 crores for the above welfare schemes.”
“மீனவர்களின்‌ நிலையை மேம்படுத்தி அவர்கள்‌ வாழ்வை வளம்பெறச்‌ செய்ய, மீன்‌ பிடிப்பு குறைவாக உள்ள காலங்களில்‌ ஒவ்வொரு குடும்பத்திற்கும்‌ 4,000 ரூபாய்‌ நிவாரணம்‌ அளித்தது, மீன்‌ பிடிப்பு தடைசெய்யப்பட்ட காலங்களில்‌ வழங்கப்படும்‌ நிவாரணத்தை 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தியது மற்றும்‌ மானியத்தோடு எரிபொருள்‌ வழங்குவது போன்ற பல்வேறு சிறப்பான முயற்சிகளை இந்த அரசு எடுத்துள்ளது. மேற்கூறிய நலத்திட்டங்களுக்காக 2013-2014 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்திட்டத்தில்‌, அரசு 200 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்துள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶49) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2013-14_speech_en · p.21 · ¶49 · source PDF ↗ · on the map →

2017-18 Rs.357 crore continuation AIADMK

“In the Budget Estimates 2017-2018, Rs.357 crore has been allocated for these welfare schemes.”
“மற்றுமொரு தேர்தல்‌ வாக்குறுதியை நிறைவேற்றும்‌ விதமாக, 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ 85 கோடி ரூபாய்‌ செலவில்‌ மீனவர்களுக்கென 5,000 வீடுகளைக்‌ கட்டுவதற்கு இந்த அரசு உத்தரவிட்டுள்ளது. மீன்பிடி தடைக்‌ காலத்திலும்‌, மீன்பிடி குறைவாக உள்ள காலத்திலும்‌ மீனவர்‌ குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும்‌, குடும்பத்திற்கு தலா 5,000 ரூபாய்‌ நிவாரண உதவி தொடர்ந்து வழங்கப்படும்‌. தேசிய கடல்‌ மீனவர்‌ சேமிப்பு மற்றும்‌ நிவாரணத்‌ திட்டம்‌, தமிழ்நாடு மீனவ மகளிர்‌ சேமிப்பு மற்றும்‌ நிவாரணத்‌ திட்டம்‌ ஆகிய திட்டங்களின்‌ கீழ்‌ வழங்கப்படும்‌ நிவாரண உதவித்தொகை 2,700 ரூபாயிலிருந்து 4,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்‌. இதற்காக, இத்திட்டங்களின்‌ கீழ்‌ வழங்கப்படும்‌ மாநில அரசின்‌ பங்கு தேவையான அளவிற்கு உயர்த்தப்படும்‌. 2017-2018 ஆம்‌ ஆண்டின்‌ வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, இத்திட்டங்களுக்கென 357 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶39) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.23 · ¶39 · source PDF ↗ · on the map →

2023-24 Rs.389 crore enhancement DMK

“An allocation of Rs.389 crore has been made to benefit 4.3 lakh beneficiaries for implementing the fishermen welfare schemes such as Lean period assistance, Ban period relief assistance and Savings cum Relief schemes.”
“மீனவர்கள்‌ நலனில்‌ மிகுந்த அக்கறை கொண்டுள்ள இந்த அரசு அவர்களது சிறப்புத்‌ தேவைகளை நன்கு உணர்ந்து பல்வேறு நலத்‌ திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. மீன்பிடி குறைவு காலத்தில்‌ மீனவர்கள்‌ பயன்பெறும்‌ பொருட்டு 5,000 ரூபாய்‌ என வழங்கி வந்த சிறப்பு நிவாரணத்‌ தொகையினை 6,000 ரூபாயாக கடந்த ஆண்டு முதல்‌ இவ்வரசு உயர்த்தி வழங்கி வருகிறது. வரும்‌ நிதியாண்டில்‌ மீன்பிடி குறைவு கால சிறப்பு நிவாரணம்‌, மீன்பிடித்‌ தடைக்கால நிவாரணம்‌, மீனவர்‌ சேமிப்பு மற்றும்‌ நிவாரணத்‌ திட்டங்கள்‌ என 4.3 இலட்சம்‌ மீனவர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ 389 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு டுசய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶66) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2023-24_speech_en · p.30 · ¶66 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector