Fisheries · dormant
Fishing harbour, Mookaiyur
4 budgets named it 9 year span — ₹ crore allocated 185 ₹ crore whole-project cost AIADMK government 1 district
First announced in 2011-12 and named again in 3 later budgets, most recently 2019-20. Districts: ramanathapuram. Places named: Rameswaram, Ramanathapuram.
Allocated by budget year
Located at Rameswaram · Ramanathapuram district
See it on the map → All Fisheries projects →
What each budget said, year by year
2011-12 ` 60 crores
“We have also sought funds from the Central Government for establishing a fishing harbour at Poompuhar at a cost of ` 75 crores and Mookaiyur – south of Rameswaram - at a cost of ` 60 crores.”
“மீன்பிடித் தொழிலை நவீனப்படுத்துவதையும் மீனவர்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதையும், இந்த அரசு முன்னுரிமைத் திட்டங்களாகக் கருதுகிறது. மாநிலத்தின் மொத்த கடல்மீன் உற்பத்தி செய்யக்கூடிய திறன் 7 இலட்சம் டன் ஆகும். ஆனால் 4.04 இலட்சம் டன் உற்பத்தியை மட்டுமே நாம் எட்டியுள்ளோம். அதேபோல் மாநிலத்தின் உள்நாட்டு மொத்த மீன்உற்பத்தி செய்யும் திறனான 4.5 இலட்சம் டன் ஆக இருந்தாலும், 1.71 இலட்சம் டன் உற்பத்தியை மட்டுமே தமிழ்நாடு அடைந்துள்ளது. ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு ஏற்ற படகுகளை நிறுத்தி வைக்கும் வசதி போதுமானதாக இல்லாததும், பதப்படுத்துதல், சேமிப்பு, சந்தை வசதிகளில் உள்ள குறைபாடுகள் ஆகியவையும் மீன் உற்பத்தியை அதிகரிப்பதில் தடைகளாக உள்ளன. உலக வங்கியின் சுனாமி மறுசீரமைப்புத் திட்ட நிதியிலிருந்து, 35.65 கோடி ரூபாய் செலவில் நாகப்பட்டினத்திலும், 27.56 கோடி ரூபாய் செலவில் பழையாற்றிலும் நவீன மீன்பிடி துறைமுகங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 75 கோடி ரூபாய் செலவில் பூம்புகாரிலும், 60 கோடி ரூபாய் செலவில் இராமேஸ்வரத்திற்குத் தெற்கிலுள்ள மூக்கையூரிலும் மீன்பிடித் துறைமுகங்களை அமைக்க மத்திய அரசிடமிருந்து நிதி உதவி கோரப்பட்டுள்ளது. இதுதவிர 7 கடலோர மாவட்டங்களில், 12 புதிய மீன் இறங்கு தளங்கள் 74 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶35) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.23 · ¶35 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.113.90 crore
“including the construction of a new fishing harbour at Mookaiyur in Ramanathapuram District at a cost of Rs.113.90 crore”
“மாநிலத்தில் உள்ள மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. 2011-2012 ஆம் ஆண்டு முதல், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மற்றும் தேங்காய்ப்பட்டிணத்திலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பூம்புகாரிலும் மூன்று புதிய மீன்பிடி துறைமுகங்களைக் கட்டுவதற்காகவும், காசிமேடு, கடலூர், நாகப்பட்டினம், பழையாறு, தூத்துக்குடி மல்லிப்பட்டினம் மற்றும் சின்னமுட்டம் ஆகிய ஏழு இடங்களில் உள்ள துறைமுகங்களை விரிவுபடுத்தி, நவீனப்படுத்துவதற்காகவும் 1105 கோடி ரூபாய்க்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் 35 மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூக்கையூரில் 113.90 கோடி ரூபாய் செலவில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைப்பது உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் 17112 கோடி ரூபாய் செலவில் 2017-2018 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶41) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.25 · ¶41 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.113.90 crore
“Further, construction of the Mookaiyur Fishing Harbour at Ramanathapuram at a cost of Rs.113.90 crore is also in progress.”
“மீன்பிடி தடைக் காலத்திலும், மீன்பிடி குறைவாக உள்ள காலத்திலும் மீனவர் குடும்பங்கள் கண்ணியமாக வாழ்வதற்கு வழங்கப்பட்டு வரும், குடும்பத்திற்கு தலா 5,000 ரூபாய் உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படும். மாநிலத்தில் மீன்பிடிப்பிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல், தேங்காய்ப்பட்டிணம் மற்றும் சின்னமுட்டத்திலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பூம்புகாரிலும் புதிய மீன்பிடி துறைமுகங்கள், 423.34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டங்களை தடையின்றி நிறைவேற்றும் நோக்கில், மாநில அரசின் பங்குத்தொகையான 182 கோடி ரூபாயுடன், மத்திய அரசு ஏற்றுக்கொண்டபடி விடுவிக்காத நிலுவைத் தொகையான 41.65 கோடி ரூபாயையும் மாநில அரசே ஏற்றுள்ளது. மேலும், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூக்கையூரில் 113.90 கோடி ரூபாய் செலவில் புதிய துறைமுகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் நிதியாண்டில் 70 கோடி ரூபாய் செலவில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குந்துக்கல்லில் மீன் இறங்கு தளமும், 220 கோடி ரூபாய் மொத்தச் செலவில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வெள்ளப்பள்ளம் மற்றும் தரங்கம்பாடி ஆகிய இடங்களில் மீன்பிடி துறைமுகங்களும் கட்டுவதற்கான பணிகளை இந்த அரசு மேற்கொள்ளும். 2018-2019 ஆம் ஆண்டில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குரும்பனை, பொழிக்கரை, கேசவன்புத்தன்துறை மற்றும் பள்ளம்துறை ஆகிய இடங்களில் மீன் இறங்கு தளங்கள் அமைப்பதற்கான பணிகளையும் இந்த அரசு 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶39) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.26 · ¶39 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.185 crore
“besides developing infrastructure facilities at Mookaiyur and Kundukal in Ramanathapuram district at a cost of Rs.185 crore”
“மீனவர்களின் நலனைப் பேணவும், தமிழ்நாட்டில் மீனளத் துறையின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கான மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகிறது. மீன்பிடி தடைக்காலத்திலும், மீன்பிடி குறைவாக உள்ள காலத்திலும் வழங்கப்படும் உதவித்தொகைத் திட்டத்திற்காக 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 170.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாக் விரிகுடா பகுதியில் 2,000 இழுவலை மீன்பிடிப் படகுகளை 1600 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்து உரிய மாற்றம் செய்வதற்கான சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக, 500 இழுவலைப் படகுகளை, தூண்டில் மற்றும் செவுள்வலையுடன் கூடிய ஆழ்கடல் சூரை மீன்பிடி படகுகளாக மாற்றிட மொத்தம் 286 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூக்கையூர் மற்றும் குந்துக்கல் ஆகிய இடங்களில் 185 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டிலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் 148 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மூக்கையூர் மற்றும் பூம்புகார் துறைமுகங்களில் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன. குந்துக்கல் மீன்பிடி துறைமுகப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இது தவிர 420 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் வெள்ளப்பள்ளம், தரங்கம்பாடி மற்றும் திருவொற்றியூர் குப்பம் ஆகிய இடங்களில் மீன்பிடி துறைமுகங்களைக் கட்டுவதற்கும் இந்த அரசு அனுமதி அளித்துள்ளதுடன், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீரோடி, மார்த்தாண்டத்துறை மற்றும் வில்லவிளை ஆகிய இடங்களில் கடலரிப்புத் தடுப்பான்களை 116 கோடி ரூபாய் செலவில் அமைப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் தெரிவிக்க விரும்புகின்றேன்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶39) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.24 · ¶39 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Fishing Harbour upgradation at Rameshwaram · 2014-15
- runs alongside Fishing harbour schemes (ongoing) · 2021-22
- runs alongside Fishing harbour at Arcottuthurai · 2020-21
- runs alongside Colachel fishing harbour · 2011-12
- runs alongside Fishing harbour, Poompuhar · 2011-12 –2019-20
- runs alongside Modernised fishing harbour, Nagapattinam · 2011-12
- runs alongside Modernised fishing harbour, Pazhayar · 2011-12
- runs alongside Thengaipattinam fishing harbour · 2011-12
- runs alongside Fishing Harbour upgradation at Mallipattinam · 2014-15
- part of Fisheries infrastructure development 2017-18 · 2017-18
- runs alongside Fish landing centre at Kunthukal · 2018-19
Nearby in the same sector
- Fisheries infrastructure development 2017-18 · 1 year · shares a district
- Fish landing centre at Kunthukal · 1 year · shares a district
- Fishing ban period relief assistance · 8 years
- Twelve Fish Landing Centres · 6 years
- Deep sea fishing conversion scheme · 6 years
- Fishing harbour, Poompuhar · 4 years