Education · dormant

Girls' education programmes (NPEGEL, KGBV, Girls Hostels)

1 budget named it 1 year span ₹ crore allocated AIADMK government

First announced in 2011-12 and not named in any budget since.

See it on the map → All Education projects →

What each budget said, year by year

2011-12 continuation AIADMK · revised

“The Kasturba Gandhi Balika Vidhyalayas (KGBV) which are residential schools up to the upper primary level have been set up in 45 blocks in 14 districts.”
“பள்ளிக்‌ கல்வியில்‌ ஆண்‌, பெண்‌ கல்வி விகிதாச்சாரத்தில்‌ உள்ள இடைவெளியை சரி செய்வதற்கான வழிவகைகளை அரசு வகுத்து வருகிறது. 2011 ஆம்‌ ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின்‌ கல்வி கற்றோர்‌ விகிதாச்சாரம்‌ 80.33 விழுக்காடாக உள்ளது. இதில்‌ ஆண்களின்‌ கல்வி விழுக்காடு 86.81 ஆகவும்‌ பெண்களின்‌ கல்வி விழுக்காடு 73.86 ஆகவும்‌ உள்ளது. பெண்களுக்கான தேசிய தொடக்கக்‌ கல்வித்‌ திட்டம்‌ 11 மாவட்டங்களில்‌ கல்வியில்‌ பின்தங்கியுள்ள 38 வட்டாரங்களில்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. தங்கிப்‌ பயிலக்‌ கூடிய வகையில்‌ இடைநிலைக்‌ கல்வியை வழங்கும்‌ கஸ்தூரிபாய்‌ காந்தி பாலிகா வித்யாலயா திட்டத்தில்‌ 14 மாவட்டங்களில்‌ உள்ள 45 வட்டாரங்களில்‌ உறைவிடப்‌ பள்ளிகள்‌ ஏற்படுத்தப்பட்டுள்ளன. உயர்நிலை, மேனிலைக்‌ கல்வி பயிலும்‌ மாணவியருக்கு உண்டி-உறைவிட வசதி செய்து தருவதற்காக 13 மாவட்டங்களில்‌ உள்ள 44 வட்டாரங்களில்‌ 44 மாணவியர்‌ தங்கும்‌ விடுதிகள்‌ தொடங்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு தொடக்கக்‌ கல்வி வழங்கும்‌ தேசியத்‌ திட்டம்‌, கஸ்தூரிபாய்‌ காந்தி பாலிகா வித்யாலயா, மாணவியர்‌ தங்கும்‌ விடுதிகள்‌ ஆகிய திட்டங்களின்‌ மூலம்‌ 2,58,715 மாணவியர்‌ பயனடைகின்றனர்‌. பெண்‌ கல்வியை ஊக்குவிக்கும்‌ நோக்குடன்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ பட்டப்‌ படிப்பும்‌, பட்டயப்‌ படிப்பும்‌ படித்த பெண்களுக்கான திருமண உதவித்‌ தொகையை 25,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தியதுடன்‌, நான்கு கிராம்‌ தங்கக்‌ காசும்‌ மனமுவந்து வழங்கியுள்ளார்கள்‌. பெற்றோர்கள்‌ தங்கள்‌ பெண்‌ குழந்தைகளை ஆண்‌ குழந்தைகளுக்கு நிகரான கல்வி புகட்ட ஊக்கமளிப்பதோடு கல்வி கற்பதில்‌ விரைவில்‌ பாலின சமநிலையை எட்டவும்‌ இது உதவும்‌ என நம்புகிறேன்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶81) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.49 · ¶81 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Nearby in the same sector