Industry · recurring
Handloom Support Programme
4 budgets named it 8 year span 130 ₹ crore allocated AIADMK / DMK governments
First announced in 2018-19 and named again in 3 later budgets, most recently 2025-26.
Allocated by budget year
See it on the map → All Industry projects →
What each budget said, year by year
2018-19 Rs.40 crore
“Budgetary allocation for the rebate on the sale of handloom cloth will be substantially increased from Rs.80 crore to Rs.150 crore and Rs.40 crore will be provided for the Handloom Support Programme.”
“கைத்தறி நெசவாளர்களுக்குத் தொடர்ச்சியாக வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், 2018-2019 ஆம் ஆண்டில் “விலையில்லா சேலைகள், வேட்டிகள் வழங்கும் திட்டத்தைச்” செயல்படுத்துவதற்காக, 490.45 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கைத்தறி வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சந்தைப்படுத்துதலுக்கான ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளதால், கைத்தறித் துறைக்கு ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க, தள்ளுபடி மானியத் திட்டத்திற்கான ஒதுக்கீட்டை இந்த அரசு அதிகரித்துள்ளது. கைத்தறி நெசவுக்கு மேலும் ஆதரவு அளிக்கும் வகையில், உற்பத்திப் பொருட்களில் புதுமை முயற்சிகளையும், பல்வகைப்படுத்துதலையும் ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி அளிக்க *கைத்தறி உதவித் திட்டம்” என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்தும். கைத்தறி துணி விற்பனை மீதான தள்ளுபடி மானியத் திட்டத்திற்கான ஒதுக்கீடு 80 கோடி ரூபாயிலிருந்து 150 கோடி ரூபாயாக உயர்த்தப்படுவதுடன், கைத்தறி உதவித் திட்டத்திற்கு 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை தொழில்களை ஊக்குவித்து, நிலைக்கத்தக்க வகையில் வலுப்படுத்தி மேம்படுத்திட ஒரு 'புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கையினை' அரசு விரைவில் வெளியிடும். வளர்ந்து வரும் தொழில்நுட்ப ஜவுளி துணிகளை (Technical Textiles) தயாரிக்கும் நிறுவனங்கள் போன்று, புதிய உற்பத்தி முயற்சியில் ஈடுபடும் நிறுவனங்களை ஊக்குவிக்கவும், ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்கவும் உரிய உத்திகளுடன் இந்தப் புதிய கொள்கை வடிவமைக்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶73) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.45 · ¶73 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.40 crore
“A sum of Rs.40 crore is allocated under the newly launched Handloom Support Programme for the year 2019-2020.”
“முதன்மை நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கோஆப்டெக்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் கைத்தறிப் பொருட்களின் விற்பனையை அரசு மானியம் வழங்கி ஊக்குவிப்பதன் மூலம், கைத்தறி நெசவாளர்கள் உறுதியான தொடர்ச்சியான, வேலைவாய்ப்பு பெறுகின்றனர். 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்காக 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கைத்தறி உதவித் திட்டத்தை 2019-2020 ஆம் ஆண்டில் செயல்படுத்துவதற்காக 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏழைக் குடும்பங்களுக்கு “விலையில்லா சேலைகள் வேட்டிகள் வழங்கும் திட்டத்தை” தொடர்ந்து செயல்படுத்துவதற்காக, 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 490.20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கைவினைப் பொருட்கள் விற்பனையை ஊக்குவிப்பதற்காக, நாட்டிலேயே முதன்முறையாக, வாடிக்கையாளர்கள் இணையவழியாகக் கொள்முதல் செய்யும் வகையில், “மெய்நிகர் தோற்ற (Virtual Reality) விற்பனை நிலையத்தை தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகம் உருவாக்கி வருகிறது. 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு 1170.56 கோடி ரூபாயும், கைவினை மற்றும் கதர்த் துறைக்கு 21111 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தகவல் தொழில் நுட்பவியல்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶105) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.58 · ¶105 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.40 crore
“The handloom support scheme launched in 2018-19 will be continued in 2020-21 with a budgetary allocation of Rs.40 crore.”
“தமிழ்நாட்டில் வேளாண்மைத் துறையை அடுத்து, அதிக வேலைவாய்ப்பினை வழங்கும் துறையாக ஐவுளி துறை உள்ளது. கைத்தறி விற்பனையை ஊக்குவிப்பதற்காக செயல்படுத்தப்படும் தள்ளுபடி மானியத் திட்டத்திற்கு 2020-21 ஆம் ஆண்டில் 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடர்ந்து செயல்படுத்தப்படும். 2018-19 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கைத்தறி உதவித் திட்டம், 2020-21 ஆம் ஆண்டில் 40 கோடி ரூபாய் வரவு-செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். கைத்தறி மற்றும் விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர்ச்சியாக செயல்படுத்தப்படும். இதற்கென, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்திற்கான மானியத் தொகையாக 360.33 கோடி ரூபாய் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶148) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.82 · ¶148 · source PDF ↗ · on the map →
2025-26 Rs.10 crore
“an additional corpus fund of Rs.10 crore will be provided to the Handloom Weavers Cooperative Societies to provide credit for working capital requirements to strengthen their financial base.”
“கைத்தறித் தொழிலில் சந்தைத் தேவையை நிறைவு டுசய்தல், நெசவாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்குதலை உறுதி செய்தல் ஆகியவற்றை முதன்மை நோக்கங்களாகக் கொண்டு, தமிழ்நாடு அரசு கைத்தறி ஆதரவுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ், கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களின் நிதி ஆதாரத்தினை வலுப்படுத்தும் நடைமுறை மூலதனத் தேவைக்கு கடனுதவி வழங்கிட கூடுதலாக 10 கோடி ரூபாய் திரள் நிதியாக வழங்கப்படும். மேலும், விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 673 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 191 ஆயத்த ஆடைமற்றும் வீட்டு உபயோக ஜவுளிகளை, ஏற்றுமதி தரத்திற்கேற்ப துல்லியமான முறையில் உற்பத்தி செய்திடவும், உற்பத்தித் திறனை மேம்படுத்தும் பொருட்டும், பொது வசதி மையங்களில், கணினிவழி வடிவமைப்பு மென்பொருளுடன் (CAD/CAM) கூடிய புதிய முழுமையான கணினிம௰மாக்கப்பட்ட துணி வெட்டும் இயந்திரங்கள் நிறுவிட, 50 சதவீதம் வரை மூலதன மாணியம் வழங்கப்படும். இத்திட்டம், அடுத்த ஐந்தாண்டுகளில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶190) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2025-26_speech_en · p.83 · ¶190 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Free electricity to handloom weavers · 2011-12 –2023-24
- runs alongside Handloom sale rebate subsidy · 2011-12 –2020-21
Nearby in the same sector
- New Entrepreneur-cum-Enterprise Development Scheme (NEEDS) · 11 years
- Handloom sale rebate subsidy · 8 years
- Industrial Growth Corridor (Madurai–Thoothukudi) · 6 years
- New Industrial Policy 2011 · 5 years
- Rebate to Khadi and Sarvodaya Societies · 5 years
- MSME Cluster Development Programme · 4 years