Welfare · dormant
Free electricity to handloom weavers
4 budgets named it 13 year span 422 ₹ crore allocated DMK / AIADMK governments
First announced in 2011-12 and named again in 3 later budgets, most recently 2023-24.
Allocated by budget year
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2011-12 ` 62 crores
“Under this scheme, free electricity is provided upto 100 units for 1.56 lakh families of handloom weavers and upto 500 units for 1.17 lakh power loom weaving units. In this Interim Budget ` 62 crores has been allocated for this free electricity scheme.”
“கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம், இவ்வரசால் 2006-ல் தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 1.56 இலட்சம் கைத்தறி நெசவாளர் குடும்பங்களுக்கு தலா 100 யூனிட் வரையிலும், 117 இலட்சம் விசைத்தறி நெசவாளர் தொழிற் கூடங்களுக்கு தலா 500 யூனிட் வரையிலும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்காக இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் ரூபாய் 62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கைத்தறி ஆடைகள் விற்பனையை ஊக்குவித்திட ஆண்டு முழுவதும் 20 சதவீதம் தள்ளுபடியும், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 15 முதல் ஜனவரி 31-ம் தேதி வரை 30 சதவீதம் தள்ளுபடியும் அரசு வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ், 2006-2007 முதல் 2010-2011 ஆம் ஆண்டு வரை ரூபாய் 719 கோடி அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் விற்பனை மானியமாக ரூபாய் 156 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சர்வோதயா சங்கங்களுக்கு கதர் துணிகளின் விற்பனைக்காக அரசு அளித்துவரும் தள்ளுபடி மானியத்தின் உச்ச வரம்பு ரூபாய் 5 கோடியிலிருந்து ரூபாய் 10 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶99) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2011-12_speech_en_interim · p.39 · ¶99 · source PDF ↗ · on the map →
2016-17
“Free power to Handloom and Powerloom weavers has also been enhanced to 200 units and 750 units respectively as promised in the Election Manifesto.”
“மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், 191 இலட்சம் நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில், அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட்டுகள் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கி தமது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்கள். இந்த அறிவிப்பின் மூலம், அரசுக்கு ஆண்டுதோறும் 1607 கோடி ரூபாய் அளவிற்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அளித்த வாக்குறுதியின்படி கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா மின்சாரம், முறையே, 200 யூனிட்டுகள் மற்றும் 750 யூனிட்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. மின்சாரத்திற்கான மானியத்திற்கு மட்டும் நடப்பு நிதியாண்டில் 9,007 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி சீரமைப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) கடனை அரசு ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, அதைத் திரும்பச் செலுத்துவதற்காக, 2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் எரிசக்தித் துறைக்கு 13,856 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶68) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.35 · ¶68 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2020-21 Rs.360.33 crore
“The scheme for supply of free electricity to handloom and power loom industry will also be continued and a budgetary allocation of Rs.360.33 crore has been provided towards subsidy payable to TANGEDCO.”
“தமிழ்நாட்டில் வேளாண்மைத் துறையை அடுத்து, அதிக வேலைவாய்ப்பினை வழங்கும் துறையாக ஐவுளி துறை உள்ளது. கைத்தறி விற்பனையை ஊக்குவிப்பதற்காக செயல்படுத்தப்படும் தள்ளுபடி மானியத் திட்டத்திற்கு 2020-21 ஆம் ஆண்டில் 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடர்ந்து செயல்படுத்தப்படும். 2018-19 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கைத்தறி உதவித் திட்டம், 2020-21 ஆம் ஆண்டில் 40 கோடி ரூபாய் வரவு-செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். கைத்தறி மற்றும் விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர்ச்சியாக செயல்படுத்தப்படும். இதற்கென, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்திற்கான மானியத் தொகையாக 360.33 கோடி ரூபாய் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶148) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.82 · ¶148 · source PDF ↗ · on the map →
2023-24
“The free electricity units have been increased from 200 to 300 units benefitting 76,356 handloom weavers. Similarly, free electricity units have been increased from 750 to 1000 units, benefitting 1.64 lakh powerloom weavers.”
“கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களின் நலனில் இந்த அரசு தனிக் கவனம் டசலுத்தி வருகின்றது. 76356 கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சார அலகுகள் 200 இல் இருந்து 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல், 164 இலட்சம் விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சார அலகுகள் 750 இல் இருந்து 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அண்மையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மேற்கு மண்டலத்தில் புதிய ஜவுளிப் பூங்கா ஒன்று அமைக்கப்படும் என அறிவித்தார்கள். அதனடிப்படையில் சேலத்தில் சுமார் 880 கோடி ரூபாய் செலவில் 119 எக்கர் நிலப்பரப்பில் ஒன்றிய மாநில அரசுகளின் நிதியுதவியுடனும் தனியார் தொழில் முனைவோர்களின் பங்களிப்புடனும் இந்தப் பூங்கா அமைக்கப்படவுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶107) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2023-24_speech_en · p.44 · ¶107 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Handloom sale rebate subsidy · 2011-12 –2020-21
- runs alongside Free power up to 100 units to domestic consumers · 2016-17
- runs alongside Handloom Support Programme · 2018-19 –2025-26
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 16 years
- Free bicycles for SC/ST students · 13 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Social Security Pension Schemes · 12 years
- Marriage assistance with gold coin · 11 years