Housing · dormant

Housing For All scheme

2 budgets named it 3 year span 5,686 ₹ crore allocated 1,412 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2016-17 and named again in 1 later budget, most recently 2018-19.

Allocated by budget year

See it on the map → All Housing projects →

What each budget said, year by year

2016-17 Rs.1,411.58 crores continuation project cost AIADMK · interim

“Under the ‘Housing For All’ scheme, this Government has taken up 34,013 units for construction, which includes construction of individual houses as well as multi-storied tenements, with a total outlay of Rs.1,411.58 crores.”
“தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்‌ மற்றும்‌ தமிழ்நாடு குடிசைப்‌ பகுதி மாற்று வாரியம்‌ ஆகியவற்றின்‌ மூலமாக, நகர்ப்புர ஏழை மக்களின்‌ வீட்டுவசதித்‌ தேவையை நிறைவு செய்வதற்காக, பெரும்‌ முயற்சிகளை மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ எடுத்து வருகிறார்கள்‌. கடந்த நான்கு ஆண்டுகளில்‌, 2,707.87 கோடி ரூபாய்‌ செலவில்‌, 18,978 குடியிருப்புகளைக்‌ கட்டுவதற்கான பணிகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்‌ மேற்கொண்டு வருகிறது. மேலும்‌, நடப்பு ஆண்டில்‌, 1993.61 கோடி ரூபாய்‌ செலவில்‌ 18,553 குறைந்த விலையிலான குடியிருப்புகளைக்‌ கட்டுவதற்கான பணிகளும்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2011 ஆம்‌ ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரை, மாநில அரசு மற்றும்‌ மத்திய அரசுத்‌ திட்டங்களின்‌ கீழ்‌, 3,702.26 கோடி ரூபாய்‌ செலவில்‌, பொருளாதாரத்தில்‌ நலிவுற்ற பிரிவினருக்கான 62,609 குடியிருப்புகளை அமைக்க தமிழ்நாடு குடிசைப்‌ பகுதி மாற்று வாரியம்‌ நடவடிக்கை எடுத்துள்ளது. அனைவருக்கும்‌ வீட்டு வசதி” திட்டத்தின்‌ கீழ்‌, தனி வீடுகள்‌ மற்றும்‌ அடுக்கு மாடிக்‌ குடியிருப்புகள்‌ உட்பட 34,013 குடியிருப்புகளை 1,411.58 கோடி ரூபாய்‌ ஒதுக்கீட்டில்‌ கட்டுவதற்கும்‌ இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்பணிகளுக்கென, மத்திய அரசு 510.20 கோடி ரூபாயும்‌, மாநில அரசு 685.86 கோடி ரூபாயும்‌ வழங்கிட உள்ளன. அனைவருக்கும்‌ வீட்டு வசதி” திட்டத்திற்காக 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 689 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில்‌ திட்டம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶69) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.45 · ¶69 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.689 crores continuation AIADMK · revised

“In the Revised Budget 2016-2017, an allocation of Rs.689 crores has been made for the 'Housing for All' scheme.”

tnbudget_2016-17_speech_en_revised · p.49 · ¶100 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2018-19 Rs.2,696.14 crore continuation AIADMK

“An amount of Rs.2,696.14 crore has been allocated for the rural housing schemes in the Budget Estimates 2018-2019.”
“தமிழ்நாட்டில்‌ குடிசைகளற்ற கிராமங்களையும்‌, குடிசைப்‌ பகுதிகளற்ற நகரங்களையும்‌ உருவாக்க வேண்டும்‌ என்ற மறைந்த முன்னாள்‌ முதலமைச்சர்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்களின்‌ கனவை நனவாக்க இந்த அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ பிரதம மந்திரி வீட்டுவசதித்‌ திட்டத்தின்‌ (ஊரகம்‌)” கீழ்‌, மத்திய அரசின்‌ நிதியுதவியான 975 கோடி ரூபாய்‌ உள்ளிட்ட, 2,276 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ 1.30 இலட்சம்‌ வீடுகளைக்‌ கட்ட இந்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. 2018-2019 ஆம்‌ ஆண்டில்‌, மேலும்‌ 2,276 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ 1.30 இலட்சம்‌ வீடுகள்‌ கட்டப்படும்‌. இதுதவிர, முதலமைச்சரின்‌ சூரியஒளி மின்வசதி கொண்ட பசுமை வீடுகள்‌ திட்டத்தின்‌” கீழ்‌, 420 கோடி ரூபாய்‌ செலவில்‌ 20,000 வீடுகள்‌ கட்டப்படும்‌. 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, ஊரகப்‌ பகுதிகளுக்கான வீட்டுவசதித்‌ திட்டங்களுக்காக, மொத்தம்‌ 2,696.14 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶87) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.52 · ¶87 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.2,301.30 crore continuation AIADMK

“During 2018-2019, it is proposed to take up construction of 1 lakh more dwelling units. A sum of Rs.2,301.30 crore has been allocated in the Budget Estimates 2018-2019 for Housing for All - PMAY Urban.”
“நகர்ப்புரங்களில்‌ வசித்து வரும்‌ 13.92 இலட்சம்‌ வீடில்லா ஏழைக்‌ குடும்பங்களுக்கு வீடுகளுக்கான தேவை உள்ளது. அதை 2023 ஆம்‌ ஆண்டிற்கு முன்னர்‌ நிறைவு செய்ய தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம்‌ நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை, “அனைவருக்கும்‌ வீட்டுவசதி-பிரதம மந்திரி வீட்டுவசதி (நகர்ப்புரம்‌) திட்டத்தின்‌ கீழ்‌, 16,776.04 கோடி ரூபாய்‌ திட்ட மதிப்பீட்டில்‌ 4.25 இலட்சம்‌ குடியிருப்புகளைக்‌ கட்டுவதற்கான பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட இந்த மொத்த மதிப்பீட்டில்‌, மத்திய அரசு தனது பங்கான 6,373.29 கோடி ரூபாயில்‌, 1497.97 கோடி ரூபாய்‌ இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது. 2018-2019 ஆம்‌ ஆண்டில்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ மேலும்‌ ஒரு இலட்சம்‌ குடியிருப்புகள்‌ கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்‌. 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, *அனைவருக்கும்‌ வீட்டுவசதி-பிரதம மந்திரி வீட்டுவசதி (நகர்ப்புரம்‌) திட்டத்திற்கு” 2,301.30 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶88) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.52 · ¶88 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector