Welfare · recurring

Housing loans for Government employees

4 budgets named it 12 year span 674 ₹ crore allocated AIADMK / DMK governments

First announced in 2012-13 and named again in 3 later budgets, most recently 2023-24.

Allocated by budget year

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2012-13 Rs.247 crores enhancement AIADMK

“the present limit of the housing loan extended to Government employees will be hiked from Rs.15 lakhs to Rs.25 lakhs. An increased allotment of Rs.247 crores has been provided in these Budget Estimates for providing housing loans to needy Government employees.”
“அரசின்‌ பல்வேறு திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்கு அரசுப்‌ பணியாளர்களின்‌ ஊக்கமும்‌, நலனும்‌ இன்றியமையாதவையென இந்த அரசு கருதுகிறது. பல்வேறு துறைகளில்‌ உள்ள காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும்‌ அரசு மேற்கொண்டு வருகிறது. அரசுப்‌ பணியாளர்களின்‌ செயல்‌ திறனை மேம்படுத்த பயிற்சி மிகவும்‌ இன்றியாமையாததாகும்‌. இதனைக்‌ கருத்தில்‌ கொண்டு சென்னையில்‌ அமைந்துள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தில்‌ பயிற்சிக்கான வசதிகள்‌ மேம்படுத்தப்படும்‌. புதிதாக சேலம்‌, திருச்சிராப்பள்ளி, மதுரை ஆகிய இடங்களில்‌ மூன்று மண்டல பயிற்சி மையங்கள்‌ அமைக்கப்பட்டு பயிற்சிக்கான வசதிகள்‌ மேம்படுத்தப்படும்‌ என்பதை மகிழ்ச்சியுடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. வீடுகள்‌ கட்டுவதற்கான செலவினம்‌ உயர்ந்துள்ளதை கருத்தில்‌ கொண்டு, அரசு ஊழியர்களுக்கான அதிகபட்ச வீட்டுவசதி கடன்‌ 15 இலட்சம்‌ ரூபாயிலிருந்து 25 இலட்சம்‌ ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்‌ இக்கடன்‌ தேவைப்படும்‌ அரசு ஊழியர்கள்‌ பயன்‌ பெறும்‌ வகையில்‌ இதற்கென வரவு-செலவு திட்ட மதிப்பீட்டில்‌ 247 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான மருத்துவக்‌ காப்பீட்டு திட்டம்‌ இந்த ஆண்டு சூன்‌ மாதத்துடன்‌ முடிவதை கருத்தில்‌ கொண்டு, இரண்டு லட்சம்‌ ரூபாய்க்கு பதிலாக நான்கு லட்சம்‌ ரூபாய்‌ வரை காப்பீடு கொண்ட திருத்தியமைக்கப்பட்ட புதிய மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டம்‌ விரைவில்‌ செயல்முறைப்படுத்தப்படும்‌. ஓய்வூதியதாரர்‌ நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶128) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.82 · ¶128 · source PDF ↗ · on the map →

2013-14 Rs.252.95 crores enhancement AIADMK

“In the Budget Estimates 2013-2014, Rs.252.95 crores has been provided for this purpose.”

financedept_2013-14_speech_en · p.60 · ¶148 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.173.95 crore continuation AIADMK

“A sum of Rs.173.95 crore has been provided for loans to Government employees under House Building Advance.”
“அரசுப்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக்‌ காப்பீட்டுத்‌ திட்டக்‌ காப்பீட்டுக்‌ கட்டணத்‌ தொகை செலுத்துவதற்காக முறையே, 342 கோடி ரூபாய்‌ மற்றும்‌ 306.65 கோடி ரூபாய்‌, 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ ஒதுக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத்‌ தொகையைப்‌ பெறுவதற்கான நடைமுறைகளை எளிதாக்கும்‌ வண்ணம்‌, விரிவான வழிகாட்டுதல்கள்‌ அரசால்‌ வெளியிடப்பட்டுள்ளன. அரசுப்‌ பணியாளர்களுக்கு வீடுகட்டும்‌ முன்பணம்‌ வழங்குவதற்காக 173.95 கோடி ரூபாய்‌ இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ சேர்க்கப்பட்டுள்ளது. அரசுப்‌ பணியாளர்களின்‌ சம்பளங்கள்‌ மற்றும்‌ படிகளுக்கு 64,208.55 கோடி ரூபாயும்‌, ஒய்வூதியதாரர்களுக்கு ஒய்வூதியம்‌ வழங்குவதற்காக 32,009.35 கோடி ரூபாயும்‌ இந்த வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த அரசு சிரமமான நிதி நிலைமையிலும்‌, அரசுப்‌ பணியாளர்களுக்கான அகவிலைப்‌ படியை, உரிய நேரத்தில்‌ ஒரே சீராக வழங்கி வருகின்றது. பாகம்‌ - ஆ வரவு-செலவுத்‌ திட்டத்திற்கான நிதி ஆதாரங்கள்‌ மாண்புமிகு பேரவைத்‌ தலைவர்‌ அவர்களே,” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶177) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.99 · ¶177 · source PDF ↗ · on the map →

2023-24 policy DMK

“the maximum ceiling for the house building advance will be increased to Rs.50 lakh from Rs.40 lakh per employee from the upcoming financial year.”

financedept_2023-24_speech_en · p.57 · ¶142 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector