Irrigation · dormant

IAMWARM Phase II

4 budgets named it 4 year span 4,419 ₹ crore allocated 2,950 ₹ crore whole-project cost AIADMK government 1 district

First announced in 2015-16 and named again in 3 later budgets, most recently 2018-19. Districts: 29.

Allocated by budget year

See it on the map → All Irrigation projects →

What each budget said, year by year

2015-16 Rs.2,950 crores new project AIADMK

“In continuation of its successful implementation, the State Government will propose to the Government of India, seeking World Bank assistance of Rs.2,950 crores for Phase II of the project.”
“உலக வங்கியின்‌ நிதியுதவியோடு 745.49 கோடி ரூபாய்‌ செலவில்‌ 113 அணைகளைப்‌ புனரமைப்பதற்காக, அணைகள்‌ புனரமைப்பு மற்றும்‌ மேம்பாட்டுத்‌ திட்டம்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2015-2016 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌, இதற்காக 450.13 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உலக வங்கி நிதியுதவியுடன்‌ 2007 ஆம்‌ ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டுவரும்‌ பாசன விவசாயத்தை நவினப்படுத்துதல்‌ மற்றும்‌ நீர்வள மேலாண்மைத்‌ திட்டம்‌ (Irrigated Agriculture Modernisation and Water-Bodies Restoration and Management) வரும்‌ ஜூன்‌ 2015ல்‌ முடிவடைகிறது. இத்திட்டத்தில்‌ இதுவரை 2,544.15 கோடி ரூபாய்‌ செலவிடப்பட்டுள்ளது. வெற்றிகரமாக இத்திட்டம்‌ செயல்படுத்தப்பட்டுள்ளதைத்‌ தொடர்ந்து இத்திட்டத்தின்‌ இரண்டாம்‌ கட்டமாக 2,950 கோடி ரூபாய்க்கு உலக வங்கியின்‌ நிதியுதவியைக்‌ கோரி மத்திய அரசுக்குத்‌ திட்டம்‌ சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன்‌ 1560 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ செயல்படுத்தப்படவுள்ள, மற்றொரு அயல்நாட்டு உதவிபெறும்‌ திட்டமாகிய காவேரி வடிநில பருவநிலை மாற்றத்‌ தழுவல்‌ திட்டத்திற்கான பணிகள்‌ 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ தொடங்கும்‌. இந்தத்‌ திட்டத்தில்‌ வெண்ணாறு உப வடிநிலப்‌ பகுதியில்‌ பணிகளை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2015-2016 ஆம்‌ ஆண்டு வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ இதற்காக 200 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶40) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.26 · ¶40 · source PDF ↗ · on the map →

2016-17 Rs.2,950 crores continuation project cost AIADMK · interim

“Encouraged by its success, Phase-II of IAMWARM is being taken up with the assistance of the World Bank at an estimated cost of Rs.2,950 crores in the basins not covered in Phase-I.”
“உலக வங்கி உதவியோடு அணைகள்‌ புனரமைப்பு மற்றும்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்தை 745.49 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ 2012-2013 ஆம்‌ ஆண்டிலிருந்து இந்த அரசு தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இடைக்கால வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌, இத்திட்டத்திற்காக 408 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவேரி டெல்டா பகுதியில்‌, பருவநிலை மாறுதல்களை எதிர்கொள்ளும்‌ திட்டத்தை வடிவமைத்து, ஆசிய வளர்ச்சி வங்கியின்‌ நிதியுதவியையும்‌ இந்த அரசு வெற்றிகரமாகப்‌ பெற்றுள்ளது. பருவநிலை மாறுபாடுகளை எதிர்கொள்ள உதவுவதை முக்கியக்‌ குறிக்கோளாகக்‌ கொண்டு, மாநில அளவில்‌ செயல்படுத்தப்படும்‌ முதல்‌ திட்டம்‌ இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின்‌ மொத்த மதிப்பீடாகிய 1560 கோடி ரூபாயில்‌, வெண்ணாறு உப வடிநிலப்‌ பகுதியில்‌ 960.66 கோடி ரூபாய்‌ செலவில்‌ இத்திட்டப்‌ பணிகளை, இந்த அரசு முதற்கட்டமாக மேற்கொண்டுள்ளது. இதற்காக இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 398.50 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, 61 உப வடிநிலப்‌ பகுதிகளில்‌ 2,674.80 கோடி ரூபாய்‌ செலவில்‌, நீர்வள நிலவளத்‌ திட்டத்தின்‌ முதல்‌ கட்டப்‌ பணிகள்‌, உலக வங்கி உதவியுடன்‌ வெற்றிகரமாகச்‌ செயல்படுத்தப்பட்டு, 2015 ஆம்‌ ஆண்டு ஜுன்‌ மாதம்‌ நிறைவு செய்யப்பட்டன. இதைத்‌ தொடர்ந்து, 2,950 கோடி ரூபாய்‌ செலவில்‌, முதல்‌ கட்டத்தில்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்படாத உப வடிநிலப்‌ பகுதிகளில்‌, உலக வங்கி உதவியோடு இத்திட்டத்தின்‌ இரண்டாவது கட்டப்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட உள்ளன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶35) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.25 · ¶35 · source PDF ↗ · on the map →

2017-18 Rs.814 crore new project AIADMK

“For the IAMWARM Phase-II project, Rs.814 crore has been allocated in the Budget Estimates 2017-2018.”

tnbudget_2017-18_speech_en · p.30 · ¶52 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.655.29 crore continuation AIADMK

“In the Budget Estimates for 2018-2019, an amount of Rs.655.29 crore has been allocated for the second phase of the IAMWARM project.”
“நீர்‌ நிலைகளை மீட்டெடுப்பதற்காகவும்‌, நிலத்தடிநீர்‌ செறிவூட்டுதலை மேம்படுத்துவதற்காகவும்‌ இந்த அரசு நீர்வள நிலவளத்‌ திட்டத்தின்‌” (Irrigated Agriculture Modernisation and Water-Bodies Restoration and Management Project) இரண்டாம்‌ கட்டப்‌ பணிகளை, 3,008 கோடி ரூபாய்‌ திட்ட மதிப்பீட்டில்‌ உலக வங்கி நிதியுதவியுடன்‌ மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தின்‌ கீழ்‌, 29 மாவட்டங்களில்‌, 66 உப வடிநிலப்‌ பகுதிகளுடன்‌ 4,778 குளங்களையும்‌, 477 அணைக்கட்டுகளையும்‌ மறுசீரமைப்பு செய்வதன்‌ மூலம்‌ 5.43 இலட்சம்‌ ஹெக்டேர்‌ ஆயக்கட்டு நிலங்கள்‌ பயனடையும்‌. 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 655.29 கோடி ரூபாய்‌ நீர்வள நிலவள இரண்டாம்‌ கட்டத்‌ திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶46) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.30 · ¶46 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector