Irrigation · completed claimed

IAMWARM project Phase-I

1 budget named it 1 year span ₹ crore allocated 2,675 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2016-17 and not named in any budget since.

See it on the map → All Irrigation projects →

What each budget said, year by year

2016-17 Rs.2,674.80 crores completion claim project cost AIADMK · interim

“The first phase of the World Bank assisted Irrigated Modernisation and Water Bodies Restoration and Management (IAMWARM) project has been successfully completed in June 2015 at a cost of Rs.2,674.80 crores in 61 sub-basins.”
“உலக வங்கி உதவியோடு அணைகள்‌ புனரமைப்பு மற்றும்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்தை 745.49 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ 2012-2013 ஆம்‌ ஆண்டிலிருந்து இந்த அரசு தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இடைக்கால வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌, இத்திட்டத்திற்காக 408 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவேரி டெல்டா பகுதியில்‌, பருவநிலை மாறுதல்களை எதிர்கொள்ளும்‌ திட்டத்தை வடிவமைத்து, ஆசிய வளர்ச்சி வங்கியின்‌ நிதியுதவியையும்‌ இந்த அரசு வெற்றிகரமாகப்‌ பெற்றுள்ளது. பருவநிலை மாறுபாடுகளை எதிர்கொள்ள உதவுவதை முக்கியக்‌ குறிக்கோளாகக்‌ கொண்டு, மாநில அளவில்‌ செயல்படுத்தப்படும்‌ முதல்‌ திட்டம்‌ இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின்‌ மொத்த மதிப்பீடாகிய 1560 கோடி ரூபாயில்‌, வெண்ணாறு உப வடிநிலப்‌ பகுதியில்‌ 960.66 கோடி ரூபாய்‌ செலவில்‌ இத்திட்டப்‌ பணிகளை, இந்த அரசு முதற்கட்டமாக மேற்கொண்டுள்ளது. இதற்காக இடைக்கால வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 398.50 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, 61 உப வடிநிலப்‌ பகுதிகளில்‌ 2,674.80 கோடி ரூபாய்‌ செலவில்‌, நீர்வள நிலவளத்‌ திட்டத்தின்‌ முதல்‌ கட்டப்‌ பணிகள்‌, உலக வங்கி உதவியுடன்‌ வெற்றிகரமாகச்‌ செயல்படுத்தப்பட்டு, 2015 ஆம்‌ ஆண்டு ஜுன்‌ மாதம்‌ நிறைவு செய்யப்பட்டன. இதைத்‌ தொடர்ந்து, 2,950 கோடி ரூபாய்‌ செலவில்‌, முதல்‌ கட்டத்தில்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்படாத உப வடிநிலப்‌ பகுதிகளில்‌, உலக வங்கி உதவியோடு இத்திட்டத்தின்‌ இரண்டாவது கட்டப்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட உள்ளன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶35) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.25 · ¶35 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector