Industry · dormant
Industrial investment MoUs
1 budget named it 1 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2015-16 and not named in any budget since.
See it on the map → All Industry projects →
What each budget said, year by year
2015-16 Rs.31,706 crores
“During the last four years, the State Government has signed 33 MoUs with an aggregate investment of Rs.31,706 crores.”
“தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு நமது நாட்டிலேயே உகந்த இடமாக தமிழகத்தை மாற்றிட இந்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. 2014 ஆம் ஆண்டு புதிய தொழில் கொள்கையும், உயிரி தொழில்நுட்பத்திற்கான கொள்கை, வாகனங்களுக்கும் வாகன உதிரிப்பாகங்களுக்குமான தொழில் கொள்கை போன்ற தனிப்பட்ட தொழில் கொள்கைகளும், பல முற்போக்கான அம்சங்களைக் கொண்டுள்ளன. இவை உற்பத்தித் துறையில் தமிழ்நாட்டை உயர்வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வழிசெய்வதோடு, உலகிலேயே தொழில்மயமான பகுதிகளில் ஒன்றாக நமது மாநிலத்தைத் திகழச் செய்யவும் வழிவகை செய்துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் 31706 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளுக்கான 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மாநில அரசு மேற்கொண்டுள்ளது. இவை மட்டுமன்றி, இந்த அரசின் சிறப்பான முயற்சிகளால், ஒற்றைச் சாளர ஒப்புதல் முறை மூலமாக 42 திட்டங்களில் 9,379 கோடி ரூபாய் அளவிற்கு கூடுதல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மேலும், 17,134 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏழு முதலீட்டுத் திட்டங்கள் இறுதி செய்யப்பட்டு இவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்திடப்பட உள்ளன. 2015 ஆம் ஆண்டு மே மாதம் 23 மற்றும் 24 ஆகிய நாட்களில், சென்னையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை இந்த அரசு நடத்தவுள்ளதை மாண்புமிகு உறுப்பினர்கள் அறிவீர்கள். அனைவருக்கும் பயனளிக்கத்தக்க வளர்ச்சி, அதிக வேலைவாய்ப்புகள், அனைத்துப் பகுதிகளிலும் சமச்சீரான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் நிலைக்கத்தக்க வளர்ச்சி போன்ற தொலைநோக்குத் திட்ட இலக்குகளை விரைவான தொழில்மயமாதல் மூலமாக எட்டிட இம்மாநாடு வழிவகுக்கும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶55) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.35 · ¶55 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- New Entrepreneur-cum-Enterprise Development Scheme (NEEDS) · 11 years
- Handloom sale rebate subsidy · 8 years
- Industrial Growth Corridor (Madurai–Thoothukudi) · 6 years
- Rebate to Khadi and Sarvodaya Societies · 5 years
- MSME Cluster Development Programme · 4 years
- New Industrial Policy 2011 · 4 years