Transport · recurring
Integrated Traffic Management System, Chennai
4 budgets named it 15 year span — ₹ crore allocated 660 ₹ crore whole-project cost AIADMK / TVK governments
First announced in 2012-13 and named again in 3 later budgets, most recently 2026-27. Places named: Chennai.
Allocated by budget year
Located at Chennai · Chennai district
See it on the map → All Transport projects →
What each budget said, year by year
2012-13 Rs.150 crores
“it is proposed to set up an Integrated Traffic Management System in Chennai with state- of-the-art infrastructure at an estimated cost of Rs.150 crores.”
“சென்னை மாநகரில் செயல்படுத்தப்பட்டுள்ள 'இ-சலான்” திட்டத்தின் மாபெரும் வெற்றியானது, மதுரை, சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி ஆகிய ஐந்து ஆணையரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும், சோதனை முறையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் இத்திட்டத்தை செயல்படுத்திட வழி வகுத்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக, 150 கோடி ரூபாய் செலவில் சென்னை மாநகரப் பகுதியில் அதிநவீன கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், கண்காணிப்பு முறையை முழுவதும் தானியங்கி முறையாக மாற்றி, போக்குவரத்தை சிறப்பாக முறைப்படுத்தவும் எளிதாக கண்காணிக்கவும் உதவும். இத்தருணத்தில், 2011-2012 ஆம் ஆண்டில் சென்னை மாநகர போக்குவரத்து கண்காணிப்பு பணிகளுக்காக தற்போதுள்ள வாகனங்களுடன் கூடுதலாக 87 ரோந்து வாகனங்களை இந்த அரசு அளித்துள்ளது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶22) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.16 · ¶22 · source PDF ↗ · on the map →
2014-15
“This Government has envisioned a new Intelligent Transport System for Chennai City. The preliminary study and preparation of the Detailed Project Report for this technology intensive solution for a new Chennai City Transportation System will be taken up soon.”
“போக்குவரத்து அமைப்புகளின் திறனை மேம்படுத்த நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரவு பேருதவியாக இருக்கும். சென்னை மாநகரத்தில் ஒரு புதிய நுண்ணறிவுப் போக்குவரத்து அமைப்பைச் (Intelligent Transport System) செயல்படுத்த இந்த அரசு உத்தேசித்துள்ளது. சென்னை மாநகரப் போக்குவரத்து அமைப்பிற்கான இந்த உயர் தொழில்நுட்பத் தீர்வைச் செயல்படுத்துவதற்கான முதல் கட்ட ஆய்வும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியும் விரைவில் மேற்கொள்ளப்படும். சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கியத் தீர்வாக இது அமையும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶60) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.31 · ¶60 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.660 crore
“TNIDB has developed the Intelligent Transport Systems project for Chennai to be implemented by Chennai Smart City Ltd at a cost of Rs.660 crore and has also secured the funding for the same through Japan International Co-operation Agency (JICA).”
“ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தின் வருவாய்ச் செலவினங்கள் உயர்ந்து வருவதால், மூலதனச் செலவினங்களையும், உட்கட்டமைப்புத் திட்டங்களையும் அதிக அளவில் மேற்கொள்வதற்கு போதுமான நிதி ஆதாரங்கள் இல்லை. எனவே, உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கான கருத்துருவாக்கம் முதல் செயலாக்கம் வரை விரைந்து செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் ஏற்படுத்தப்பட்டதுடன், இதற்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுவதற்காக தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகமும் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் 3,329 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலைப் பணிகள், சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் ஆகியவற்றிற்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிப்பதற்காக முறையே 132.76 கோடி ரூபாயும், 21.83 கோடி ரூபாயும் அனுமதித்துள்ளதுடன், சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் மற்றும் அதிவேக மக்கள் திரள் போக்குவரத்தையும் (0415) சென்னை மெட்ரோ இரயிலையும் ஒருங்கிணைத்தல் போன்ற திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிப்பதற்காகவும் நிதி உதவியை அளித்துள்ளது. சென்னை திறன்மிகு நகர நிறுவனம் மூலம் 660 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ள அறிவுசார் போக்குவரத்து அமைப்புத் திட்டத்தினை (Intelligent Transport System Project) தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் உருவாக்கி, இத்திட்டத்திற்கு ஐப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் நிதியுதவியையும் பெற்றுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶7) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.5 · ¶7 · source PDF ↗ · on the map →
2026-27
“To improve urban transport, the Intelligent Transport Management System of Greater Chennai Corporation, developed in coordination with the Chennai City Police and the Metropolitan Transport Corporation, is in its final stage of implementation.”
“பெருநகர சென்னை மாநகராட்சி, 91 இலட்சம் மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதையும், நகரின் வாழ்வாதாரத் தரத்தை மேம்படுத்தும் உட்கட்டமைப்புகளை உருவாக்குவதையும் உறுதிசெய்து, சேவையாற்றி வருகிறது. நகர்ப்புரப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், சென்னை காவல்துறை மற்றும் டபெருநகரப் போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து பெருநகர சென்னை மாநகராட்சியின் நுண்ணறிவுப் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு இறுதிக்கட்ட செயலாக்கத்தில் உள்ளது. மேலும், பாதசாரிகளுக்கான கட்டமைப்பு வசதி, அனைவரும் சமமாக அணுகக்கூடிய வசதி மற்றும் நகர்ப்புர வடிவமைப்பு மேம்பாடு ஆகியவற்றிற்கு முன்னுநிமை அளித்து, விழிவான நகர்ப்புரப் போக்குவரத்து வசதிகள் மற்றும் தெருக்கள் மறுசீரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் ஒரு பகுதியாக, 20 இடங்களில் திறன்மிகு வாகன நிறுத்துமிட மேலாண்மை (smart parking management) அமைக்கப்படுவதுடன், அம்பத்தூர் மற்றும் கிண்டி தொழிற்பேட்டைகளின் சாலைகள் மறுவடிவமைக்கப்படும். சென்னையின் பசுமைப் பரப்பை மேம்படுத்தி,மக்களை மையமாகக் கொண்ட பொது இடங்களை உருவாக்கும் வகையில், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் முக்கிய வழித்தடங்களின் நடைபாதைகள் அழகுபடுத்தப்பட்டு பசுமையாக்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶108) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2026-27_speech_en_revised · p.54 · ¶108 · full speech ↗ · on the map →
Linked projects
- runs alongside Integrated Public Bus Information System (GPS) · 2014-15
- runs alongside e-challan system expansion · 2012-13
Nearby in the same sector
- Comprehensive Road Infrastructure Development Programme (CRIDP) · 12 years
- Tamil Nadu Road Sector Project – Phase II · 12 years
- Chennai Peripheral Ring Road · 10 years
- Diesel subsidy to State Transport Undertakings · 10 years
- Chennai Metro Rail Phase-II · 10 years
- Chennai Metro Rail Project · 9 years