Irrigation · completed claimed

Kattalai barrage across the Cauvery

3 budgets named it 5 year span 50 ₹ crore allocated 254 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2011-12 and named again in 2 later budgets, most recently 2015-16.

Allocated by budget year

See it on the map → All Irrigation projects →

What each budget said, year by year

2011-12 ` 189 crores continuation project cost AIADMK · revised

“As a first phase of the linking of the Cauvery with the Vaigai and Gundar rivers, Kattalai barrage work across the Cauvery is already in progress at an estimated cost of ` 189 crores. ` 93 crores is budgeted for the year 2011-2012.”
“தமிழ்நாட்டிலுள்ள நதிகளை இணைப்பதை, இந்த அரசு முதன்மையானப்‌ பணியாகக்‌ கருதுகிறது. நதிநீர்‌ இணைப்பால்‌, பாசன வசதிகளை மேம்படுத்துவது, வெள்ளத்தைக்‌ கட்டுப்படுத்துவது, உள்நாட்டு நீர்ப்‌ போக்குவரத்து போன்ற பல பயன்கள்‌ ஏற்படும்‌. இதன்‌ முதல்‌ கட்டமாக காவிரி ஆற்றை வைகை, குண்டாறு ஆறுகளுடன்‌ இணைப்பதற்காக, காவிரி ஆற்றில்‌ கட்டளைக்‌ கதவணை அமைக்கும்‌ பணி 189 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ ஏற்கெனவே நடைபெற்று வருகிறது. இப்பணிக்கு 2011-2012 ஆம்‌ ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு 93 கோடி ரூபாயாகும்‌. இதன்‌ அடுத்த கட்டமாக கட்டளைக்‌ கதவணையை குண்டாறு ஆற்றுடன்‌ இணைப்பதற்குரிய பணியினை இவ்வரசு தொடங்கும்‌. மத்திய அரசு உதவியுடன்‌ வெள்ள மேலாண்மைப்‌ பணியாக இரண்டு கட்டத்தில்‌ இப்பணி செய்யப்படும்‌. முதற்‌ கட்டமாக கட்டளை அணைக்கட்டிலிருந்து கால்வாய்‌ அமைத்து அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறுடன்‌ 3,787 கோடி ரூபாய்‌ செலவில்‌ இணைக்கப்படும்‌. இரண்டாவது கட்டத்தில்‌ மணிமுத்தாறு, வைகை ஆற்றுடன்‌ குண்டாறு 1,379 கோடி ரூபாய்‌ செலவில்‌ இணைக்கப்படும்‌. இந்த வெள்ளத்‌ தடுப்புப்‌ பணிகளுக்கு 5,166 கோடி ரூபாய்‌ மதிப்பில்‌ விரிவான கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பப்படும்‌. எனினும்‌ மத்திய அரசின்‌ உதவிக்காக காத்திராமல்‌ மாநில அரசே இப்பணியினை உடனடியாகத்‌ தொடங்கும்‌. இப்பணிக்காக 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ 60 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போன்று மற்றொரு நதிநீர்‌ இணைப்புத்‌ திட்டமான நம்பியாறுடன்‌ தாமிரபரணி ஆற்றை இணைக்கும்‌ பணி 369 கோடி ரூபாய்‌ செலவில்‌ நடைபெற்று வருகிறது. 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ இப்பணிக்காக 90 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶43) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.27 · ¶43 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2012-13 Rs.50 crores continuation AIADMK

“As part of the Cauvery-Gundar link, the construction of the Kattalai Barrage across the Cauvery is under progress. A sum of Rs.50 crores has been provided for this scheme in the Budget Estimates 2012-2013.”
“மாநிலத்திற்குள்‌ பாயும்‌ நதிகளை இணைக்கும்‌ திட்டம்‌ இந்த அரசின்‌ கீழ்‌ புதிய உத்வேகம்‌ பெற்றுள்ளது. அண்மையில்‌, தேச நலன்‌ கருதி, நதிகளை இணைக்கும்‌ தொலைநோக்குத்‌ திட்டத்தை செயல்படுத்த வேண்டும்‌ என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றமும்‌ உத்தரவிட்டுள்ளது என்பதையும்‌ நான்‌ குறிப்பிட விரும்புகிறேன்‌. காவிரி - குண்டாறு இணைப்பின்‌ ஒரு பகுதியாக காவிரி நதியின்‌ குறுக்கே கட்டளையில்‌ கதவணை அமைக்கும்‌ பணி விரைவாக நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்காக 2012-2013 வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 50 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது. 369 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலான தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத்‌ திட்டமும்‌ துரித செயலாக்கத்தில்‌ உள்ளது. இத்திட்டத்திற்காக, 2012-2013 வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 100 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶47) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.31 · ¶47 · source PDF ↗ · on the map →

2015-16 Rs.254.45 crores completion claim project cost AIADMK

“Construction of the Kattalai Barrage has been completed at a cost of Rs.254.45 crores as a part of the Cauvery-Gundar river linkage project.”
“காவேரி மற்றும்‌ முல்லைப்‌ பெரியாறு நதிநீர்ப்‌ பிரச்சினைகளில்‌ இந்த அரசு மேற்கொண்ட அயராத போராட்டங்களும்‌, பெற்ற வியத்தகு வெற்றிகளும்‌ வரலாற்று முக்கியத்துவம்‌ வாய்ந்தவைகளாகும்‌. இதனைத்‌ தொடர்ந்து மாநிலத்தின்‌ உரிமைகளை நிலைநாட்டிட இந்த அரசு முழு மூச்சோடு செயல்பட்டு வருகிறது. காவேரி நதிநீர்ப்‌ பங்கீட்டில்‌ தமிழ்நாட்டு விவசாயிகளின்‌ உரிமையை நிலைநாட்டிடத்‌ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்‌ நமது அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. காவேரியின்‌ குறுக்கே மேகதாதுவில்‌ கர்நாடக அரசு, சட்டத்திற்குப்‌ புறம்பாக அணை கட்ட எடுக்கும்‌ முயற்சிகளைத்‌ தடுக்க ஒரு இடைக்கால மனுவை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில்‌ ஏற்கெனவே தாக்கல்‌ செய்துள்ளது. கர்நாடக அரசு மேகதாதுவில்‌ அணைகட்ட எத்தகைய முயற்சிகளை எடுத்தாலும்‌ அவற்றைத்‌ தடுக்க தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கைகள்‌ உள்ளிட்ட அனைத்து முயற்சிகளையும்‌ மேற்கொள்ளும்‌. போற்றுதலுக்குரிய மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள்‌ வலியுறுத்தியவாறு காவேரி மேலாண்மை வாரியத்தையும்‌, காவேரி நதிநீர்‌ முறைப்படுத்தும்‌ குழுவையும்‌ அமைக்க உரிய நடவடிக்கைகளை இந்த அரசு தொடர்ந்து எடுக்கும்‌. மேலும்‌, முக்கிய நதிநீர்‌ இணைப்புத்‌ திட்டங்களைச்‌ செயல்படுத்துவதற்கான முயற்சிகளும்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு நதிகளை இணைப்பதற்கான பணிகள்‌ 369 கோடி ரூபாய்‌ செலவில்‌, நான்கு கட்டங்களாக நடந்து வருகின்றன. காவேரி-குண்டாறு நதிநீர்‌ இணைப்புத்‌ திட்டத்தின்‌ ஒரு பகுதியாக 254.45 கோடி ரூபாய்‌ செலவில்‌ கட்டளையில்‌ கதவணை அமைக்கும்‌ பணி நிறைவு பெற்றுள்ளது. வரும்‌ நிதியாண்டிற்கு நதிநீர்‌ இணைப்புப்‌ பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள 253.50 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶39) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.25 · ¶39 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector