Energy · recurring

Kundah Pumped Storage Hydro Power Project (4 x 125 MW)

3 budgets named it 9 year span — ₹ crore allocated AIADMK / DMK governments

First announced in 2016-17 and named again in 2 later budgets, most recently 2024-25. Places named: Kundah.

Allocated by budget year

Located at Kundah · Nilgiris district

See it on the map → All Energy projects →

What each budget said, year by year

2016-17 new project AIADMK · interim

“4 x 125 MW Kundah Pumped Storage Hydro Power Project”
“தொலைநோக்குத்‌ திட்டம்‌ 2023 ல்‌ திட்டமிடப்பட்டவாறு, 1X 660 மெகாவாட்‌ திறன்‌ கொண்ட எண்ணூர்‌ விரிவாக்கப்பட்ட அனல்‌ மின்‌ உற்பத்தித்‌ திட்டம்‌, 2 56 660 மெகாவாட்‌ திறன்‌ கொண்ட எண்ணூர்‌ சிறப்பு பொருளாதார மண்டல மின்‌ உற்பத்தித்‌ திட்டம்‌, 156 800 மெகாவாட்‌ திறன்‌ கொண்ட வடசென்னை அனல்‌ மின்‌ உற்பத்தித்‌ திட்டத்தின்‌ மூன்றாவது நிலை ஆகியவற்றிற்கான கட்டமைப்புப்‌ பணிகள்‌ தொடங்கப்பட்டுள்ளன. இராமநாதபுரம்‌ மாவட்டத்தில்‌ 2 xX 800 மெகாவாட்‌ திறன்‌ கொண்ட உப்பூர்‌ அனல்‌ மின்‌ உற்பத்தித்‌ திட்டம்‌ மற்றும்‌ 5 x 800 மெகாவாட்‌ திறன்‌ கொண்ட கடலாடி அனல்‌ மின்‌ உற்பத்தித்‌ திட்டம்‌, தூத்துக்குடி மாவட்டத்தில்‌ 2 X 660 மெகாவாட்‌ திறன்‌ கொண்ட உடன்குடி அனல்‌ மின்‌ உற்பத்தித்‌ திட்டம்‌, 15௦660 மெகாவாட்‌ திறன்‌ கொண்ட எண்ணூர்‌ மாற்று அனல்‌ மின்‌ உற்பத்தித்‌ திட்டம்‌, 4: 125 மெகாவாட்‌ திறன்‌ கொண்ட குந்தா நீர்‌ மின்‌ உற்பத்தித்‌ திட்டம்‌ மற்றும்‌ 4 5: 500 மெகாவாட்‌ திறன்‌ கொண்ட சில்லஹல்லா நீர்‌ மின்‌ உற்பத்தி நிலையம்‌ ஆகியவற்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டு வருகின்றன. மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ அயராத முயற்சிகளும்‌, அவரின்‌ கடும்‌ உழைப்பும்‌, எதிர்காலத்திலும்‌ தமிழ்நாடு மின்மிகை மாநிலமாகத்‌ தொடர்ந்து விளங்குவதை உறுதி செய்யும்‌ என நான்‌ நம்புகிறேன்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶44) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2016-17_speech_en_interim · p.31 · ¶44 · source PDF ↗ · on the map →

2023-24 continuation DMK

“The 500 MW pumped hydroelectric storage project being constructed at Kundah will be operational by 2024-25.”
“மாநிலத்தின்‌ உச்சநேர மின்‌ தேவையை நிறைவு செய்வதற்காக அரசு - தனியார்‌ பங்களிப்புடன்‌ (PPP) நீரேற்று மின்‌ திட்டங்கள்‌ நிறுவப்படும்‌. குந்தாவில்‌ கட்டப்பட்டு வரும்‌ 500 மெகாவாட்‌ திறன்கொண்ட புனல்‌ மின்‌ திட்டம்‌ 2024-25 ஆம்‌ ஆண்டிற்குள்‌ செயல்பாட்டிற்கு வரும்‌. மேலும்‌, 2030ஆம்‌ ஆண்டுக்குள்‌, 77,000 கோடி ரூபாய்‌ செலவில்‌ 14,500 மெகாவாட்‌ திறன்கொண்ட 15 புதிய நீரேற்று மின்‌ திட்டங்கள்‌ அரசு-தனியார்‌ பங்களிப்புடன்‌ செயல்படுத்தப்படும்‌. மாநிலத்தில்‌ நீரேற்று மின்‌ திட்டங்களில்‌ முதலடுகளை ஊக்குவிக்க ஒரு விரிவான கொள்கையை அரசு வகுக்கும்‌. மேலும்‌, தற்போது நடைபெற்று வரும்‌ 4100 மெகாவாட்‌ அனல்‌ மின்‌ திட்டப்‌ பணிகள்‌ விரைந்து முடிக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶104) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2023-24_speech_en · p.43 · ¶104 · source PDF ↗ · on the map →

2023-24 Rs.77,000 crore new project investment target DMK

“Further, 15 more projects will be established under the PPP mode with a total capacity of 14,500 MW at an estimated cost of Rs.77,000 crore by 2030.”
“மாநிலத்தின்‌ உச்சநேர மின்‌ தேவையை நிறைவு செய்வதற்காக அரசு - தனியார்‌ பங்களிப்புடன்‌ (PPP) நீரேற்று மின்‌ திட்டங்கள்‌ நிறுவப்படும்‌. குந்தாவில்‌ கட்டப்பட்டு வரும்‌ 500 மெகாவாட்‌ திறன்கொண்ட புனல்‌ மின்‌ திட்டம்‌ 2024-25 ஆம்‌ ஆண்டிற்குள்‌ செயல்பாட்டிற்கு வரும்‌. மேலும்‌, 2030ஆம்‌ ஆண்டுக்குள்‌, 77,000 கோடி ரூபாய்‌ செலவில்‌ 14,500 மெகாவாட்‌ திறன்கொண்ட 15 புதிய நீரேற்று மின்‌ திட்டங்கள்‌ அரசு-தனியார்‌ பங்களிப்புடன்‌ செயல்படுத்தப்படும்‌. மாநிலத்தில்‌ நீரேற்று மின்‌ திட்டங்களில்‌ முதலடுகளை ஊக்குவிக்க ஒரு விரிவான கொள்கையை அரசு வகுக்கும்‌. மேலும்‌, தற்போது நடைபெற்று வரும்‌ 4100 மெகாவாட்‌ அனல்‌ மின்‌ திட்டப்‌ பணிகள்‌ விரைந்து முடிக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶104) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2023-24_speech_en · p.43 · ¶104 · source PDF ↗ · on the map →

2024-25 Rs.60,000 crore new project investment target DMK

“In these locations, new pumped storage hydro-electric power stations will be established under public-private partnership with an investment of approximately Rs.60,000 crore.”
“மேலும்‌, தமிழ்நாட்டில்‌ 11500 மெகாவாட்‌ திறனுள்ள நீரேற்று புனல்‌ மின்‌ நிலையங்கள்‌ அமைப்பதற்கு உகந்த 12 இடங்கள்‌ தேர்வு செய்யப்பட்டுள்ளன. பொதுத்துறை மற்றும்‌ தனியார்‌ பங்கேற்புடன்‌, சுமார்‌ 60,000 கோடி ரூபாய்‌ முதலீட்டில்‌ இந்தப்‌ புதிய நீரேற்று புனல்‌ மின்‌ நிலையங்கள்‌ உருவாக்கப்படும்‌. காலநிலை மாற்றம்‌ 123, “சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின்‌ தீராத பக்கங்களில்‌ ஒரு பறவையின்‌ வாழ்வை எழுதிச்‌ செல்கிறது” படிமக்‌ கவிஞர்‌ பிரமிளின்‌ கவிதை வரிகளை சுற்றுச்சூழல்‌ அமைப்பில்‌ பொருத்திப்‌ பார்த்தால்‌ இந்தப்‌ பிரபஞ்சத்தில்‌ வாழும்‌ அனைத்து உயிரினங்களையும்‌ இயற்கை வளங்களையும்‌ பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்குக்‌ கொடையளிப்பது மானுடக்‌ கடமை என்பதை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது. நாட்டிலேயே பல்லுயிர்‌ இனங்களின்‌ தாயகமாக தமிழ்நாடு திகழ்கிறது. இருப்பினும்‌, மாறி வரும்‌ காலச்சூழலில்‌ உலகெங்கும்‌ உள்ள சில அரிய வகை உயிரினங்கள்‌ அழிந்து வரும்‌ நிலை காணப்படுவதால்‌, அவ்வகை உயிரினங்களைப்‌ பாதுகாத்திட வேண்டிய தேவைக்‌ குறித்து பன்னாட்டு இயற்கைப்‌ பாதுகாப்பு அமைப்பு (International Union for Conservation of Nature) உட்பட பல அமைப்புகள்‌ தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. எனவே, பல்லுயிர்‌ நலன்‌ காக்கும்‌ முயற்சியாக, அழிந்து வரும்‌ உயிரினங்கள்‌ பாதுகாப்பு நிதி ஒன்றை 50 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ அமைக்க, தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கென முதற்கட்டமாக ஐந்து கோடி ரூபாயை அரசு வழங்கும்‌. பிற அரசு நிறுவனங்கள்‌, பெருநிறுவன சமூகப்‌ பொறுப்பு நிதி, தேசிய சுற்றுச்சூழல்‌ அமைப்புகளின்‌ உதவியோடு, அழிந்துவரும்‌ மற்றும்‌ விளிம்பு நிலையிலுள்ள உயிரினங்களைப்‌ பாதுகாக்க உரிய திட்டங்கள்‌ வகுக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶122) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2024-25_speech_en · p.56 · ¶122 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector