Housing · announced once

Metropolitan Youth and Family Housing Scheme (MY-HOME)

1 budget named it 1 year span ₹ crore allocated TVK government

First announced in 2026-27 and not named in any budget since.

See it on the map → All Housing projects →

What each budget said, year by year

2026-27 Rs.15,000 crore new project investment target TVK · revised

“To this end, the Tamil Nadu Urban Habitat Development Board is launching a pilot initiative in the Chennai Metropolitan Area titled the 'Metropolitan Youth and Family Housing Scheme' (MY-HOME), under which 1 lakh housing units will be developed over the next seven years. This project is expected to attract approximately Rs.15,000 crore in investment through Public-Private Partnership (PPP), supported by Rs.3,500 crore in Viability Gap Funding (VGF) through the Tamil Nadu Shelter Fund.”
“குறைந்த வருமானம்‌ கொண்ட குடும்பங்களும்‌, ஆற்றல்மிக்க இளைஞர்களும்‌ கண்ணியமான, பாதுகாப்பான மற்றும்‌ தரமான குடியிருப்பு வசதியைப்‌ பெறுவது இந்த அரசின்‌ உயரிய இலக்குகளில்‌ ஒன்றாகும்‌. இதனை முன்னெடுத்துச்‌ செல்லும்‌ வகையில்‌, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால்‌, முதற்கட்டமாக சென்னைப்‌ பெருநகரப்‌ பகுதியில்‌ மாநகர இளைஞர்‌ மற்றும்‌ குடும்ப விட்டு வசதித்‌ திட்டம்‌ (MY-HOME) என்ற முன்னோடித்‌ திட்டத்தை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின்‌ கீழ்‌, அடுத்த ஏழு ஆண்டுகளில்‌ 1 இலட்சம்‌ விடுகள்‌ கட்டப்படும்‌. இந்த இலட்சியத்‌ திட்டத்தின்‌ மூலம்‌, அரசு-தனியார்‌ கூட்டாண்மை (PPP) வாயிலாக சுமார்‌ 15,000 கோடி ரூபாய்‌ முதலீடு ஈர்க்கப்படும்‌. இதற்கு ஊக்கமளிக்கும்‌ வகையில்‌, தமிழ்நாடு உறைவிட நிதியத்தின்‌ (Tamil Nadu Shelter Fund) eipeotb 3,500 கோடி ரூபாய்‌ செயல்திறன்‌ இடைவெளி நிதி (Viability Gap Funding) வழங்கப்படும்‌. இந்தக்‌ கூட்டாண்மை அடிப்படையிலான அணுகுமுறையுடன்‌, மின்னணு வாடகை பற்றுச்சீட்டு (Digital Rental Voucher) முறையை அறிமுகப்படுத்துவதன்‌ மூலம்‌, குறைந்த வருமானம்‌ கொண்ட குடும்பங்களும்‌, இளைஞர்களும்‌ தங்களது வருமானத்திற்கு ஏற்ற, பாதுகாப்பான மற்றும்‌ கண்ணியமான குடியிருப்புகளை எளிதில்‌ பெறும்‌ சூழல்‌ உருவாக்கப்படும்‌. இந்த முன்னோடி முயற்சி, சென்னைப்‌ பெருநகரத்தை அனைவருக்கும்‌ சமமான வாய்ப்புகளையும்‌, தரமான வாழ்க்கைத்‌ தரத்தையும்‌, பாதுகாப்பான குடியிருப்பு வசதியையும்‌ வழங்கும்‌ பெருநகரமாக மாற்றுவதில்‌ முக்கியப்‌ பங்காற்றும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶105) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.52 · ¶105 · full speech ↗ · on the map →

Nearby in the same sector