Education · dormant

Model Residential Schools, Jawadhu Hills

1 budget named it 1 year span — ₹ crore allocated 24 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2017-18 and not named in any budget since.

See it on the map → All Education projects →

What each budget said, year by year

2017-18 Rs.24 crore new project project cost AIADMK

“This Government has decided to establish two Model Residential Schools, along with staff quarters, in Jawadhu Hills at a total cost of Rs.24 crore, to ensure the accessibility of quality education to tribal students.”
“2016-2017 ஆம்‌ ஆண்டில்‌, மொத்தம்‌ 49.84 கோடி ரூபாய்‌ அனுமதிக்கப்பட்டு, நபார்டு வங்கி கடனுதவியுடன்‌ 157 அரசு பழங்குடியினர்‌ உண்டு உறைவிடப்‌ பள்ளிகள்‌ மற்றும்‌ வனத்துறையால்‌ நடத்தப்படும்‌ பள்ளிகளின்‌ உட்கட்டமைப்பு வசதிகள்‌ மேம்படுத்தப்பட உள்ளன. பழங்குடியினர்‌ பகுதிகளில்‌ பல்வேறு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வசதிகள்‌ மேற்கொள்ளவும்‌, பழங்குடியினக்‌ குடும்பங்களின்‌ சமூகப்‌ பொருளாதார மேம்பாட்டிற்கு நிதியுதவி வழங்கிடவும்‌, 2011-2012 ஆம்‌ ஆண்டு முதல்‌ ஒருங்கிணைந்த பழங்குடியினர்‌ மேம்பாட்டுத்‌ திட்டம்‌” அரசால்‌ செயல்படுத்தப்படுகிறது. இந்த அரசு, பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதிப்படுத்தும்‌ வகையில்‌, பழங்குடியின மாணவ, மாணவியர்‌ தங்கி கல்வி பயிலும்‌ வகையில்‌, ஜவ்வாது மலையில்‌ இரண்டு உண்டு உறைவிட மாதிரிப்‌ பள்ளிகள்‌ (Model Residential School) ஆசிரியர்‌ குடியிருப்புகளுடன்‌ 24 கோடி ரூபாய்‌ செலவில்‌ அமைக்கப்படும்‌ இதன்‌ பயனாக அப்பகுதிகளில்‌ உள்ள மாணவ, மாணவிகள்‌ மேல்நிலைப்‌ பள்ளி வரை கல்வி கற்பதற்கான வாய்ப்பினை பெறுவர்‌. 2017-2018 ஆம்‌ ஆண்டின்‌ வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ ஒருங்கிணைந்த பழங்குடியினர்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 50 கோடி ரூபாயும்‌, அழிவின்‌ விளிம்பிலுள்ள பண்டைய பழங்குடியினர்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 37 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶124) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.68 · ¶124 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector