Industry · recurring

MSME capital subsidy

4 budgets named it 12 year span 892 ₹ crore allocated AIADMK / DMK / TVK governments

First announced in 2015-16 and named again in 3 later budgets, most recently 2026-27.

Allocated by budget year

See it on the map → All Industry projects →

What each budget said, year by year

2015-16 Rs.80 crores continuation AIADMK

“A sum of Rs.80 crores as capital subsidy, Rs.42 crores as generator subsidy, Rs.12 crores as interest subvention and Rs.60 crores as infrastructure support for new industrial estates are provided for the year 2015-2016.”
“குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ துறை, 63.18 இலட்சம்‌ பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி தமிழகத்தின்‌ பொருளாதாரத்தில்‌ மிக முக்கியப்‌ பங்கு வகிக்கிறது. இத்தகைய தொழில்‌ நிறுவனங்களுக்கு அதிகபட்சம்‌ முப்பது இலட்சம்‌ ரூபாய்‌ வரை 25 சதவீத முதலீட்டு மானியத்தையும்‌, 3 சதவீத அளவிற்கான வட்டி மானியத்தையும்‌ இந்த அரசு வழங்கி வருகிறது. தனியார்‌ தொழில்‌ குழுமங்களின்‌ கட்டமைப்பை மேம்படுத்தவும்‌ இந்த அரசு உதவியளித்து வருகிறது. தொழில்‌ முனைவோருக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்க பெரிய தொழிற்சாலைகளுக்கென ஏற்படுத்தப்படவுள்ள ஒற்றைச்‌ சாளர முதலீட்டாளர்கள்‌ வளைதளப்‌ பகுதியைப்‌ போன்றே இத்துறைக்கு இத்தகைய வசதியை 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ இந்த அரசு ஏற்படுத்தும்‌. 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ மூலதன மானியமாக 80 கோடி ரூபாயும்‌, மின்னாக்கி மானியமாக 42 கோடி ரூபாயும்‌, வட்டி மானியமாக 12 கோடி ரூபாயும்‌, புதிய தொழிற்பேட்டைகளுக்கான கட்டமைப்பு நிதியுதவியாக 60 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶58) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.37 · ¶58 · source PDF ↗ · on the map →

2017-18 Rs.160 crore enhancement AIADMK

“The allocation of capital subsidy to MSME units will be doubled to Rs.160 crore in 2017-2018 from the present level of Rs.80 crore.”
“குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ அலகுகள்‌, நிலைக்கத்தக்க தொழில்‌ வளர்ச்சிக்கு அத்தியாவசியமானதாக உள்ளதாலும்‌, அதிக அளவில்‌ வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாலும்‌, அரசு அதனை ஊக்குவிக்கிறது. எனவே, பின்வரும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ மூலம்‌ குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்களை இந்த அரசு மேலும்‌ ஊக்குவிக்கும்‌. * குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்களுக்கான மூலதன மானிய ஒதுக்கீடு, தற்போதைய அளவான 80 கோடி ரூபாயிலிருந்து, 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கு இரு மடங்காக அதாவது 160 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்‌. மதுரை, சேலம்‌ மற்றும்‌ திருச்சிராப்பள்ளியில்‌ வணிக ஊக்குவிப்பு மையங்களை (Trade Facilitation Centre) அமைத்திட, குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ சங்கங்களுக்கு தலா ஐந்து கோடி ரூபாய்‌ நிதிக்கு மிகாமல்‌ 50 சதவீத மானியத்தை அரசு வழங்கும்‌. 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கு இத்திட்டத்திற்காக 15 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்‌ இத்தகைய தொழில்‌ அலகுகளுக்கு சந்தை வாய்ப்புகளை பரவலாக்கிடும்‌ பொருட்டு, பன்னாட்டு வர்த்தகக்‌ கண்காட்சி ஆண்டுதோறும்‌ நடத்தப்படும்‌. இதற்காக 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கு 10 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும்‌ அயல்நாட்டுச்‌ சந்தையில்‌ போட்டியிடுவதற்கான திறனை அதிகரிப்பதற்கு, 10 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ ஏற்றுமதியை ஊக்குவித்தல்‌ மற்றும்‌ சந்தைப்படுத்துதலுக்கு ஆதரவு அளிப்பதற்கான ஒரு சிறப்புத்‌ திட்டம்‌ தொடங்கப்படும்‌. குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ அலகுகளில்‌ மின்‌ சேமிப்பை மேம்படுத்துவதற்கான ஒரு சிறப்புத்‌ திட்டம்‌ ஐந்து கோடி ரூபாய்‌ ஒதுக்கீட்டில்‌ செயல்படுத்தப்படும்‌. குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ அலகுகளுக்கு மின்திறன்‌ தணிக்கையின்‌ அடிப்படையில்‌ உரிய சலுகைகள்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்படும்‌. * குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ அலகுகளின்‌ தரம்‌ மற்றும்‌ போட்டித்‌ தன்மையை மேம்படுத்திட, மூன்று தரக்‌ கட்டுப்பாடு மற்றும்‌ பரிசோதனை ஆய்வகங்கள்‌ சிட்கோ பூங்காக்களில்‌ நிறுவப்படும்‌. உ குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ அலகுகள்‌ செயலிழந்துள்ளதன்‌ காரணங்களை தொழில்‌ வாரியாக கண்டறிவதற்கும்‌, அத்தகைய தொழில்கள்‌ மீண்டும்‌ செயல்பட புத்துயிரூட்டுவதற்கும்‌ உரிய உதவி செய்ய அரசு ஒரு சிறப்பு ஆய்வை மேற்கொள்ளும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶80) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.45 · ¶80 · source PDF ↗ · on the map →

2022-23 Rs.300 crore continuation DMK

“In the Budget, an amount of Rs.300 crore has been provided as Capital Subsidy for MSMEs”
“குறு, சிறு, மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்களுக்கு மூதைன மானியமாக 300 கோடி ரூபாயும்‌, குறு, சிறு, மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்களுக்கு கடன்‌ உத்தரவாதத்‌ திட்டத்திற்காக 100 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு டுசய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶138) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2022-23_speech_en · p.47 · ¶138 · source PDF ↗ · on the map →

2026-27 Rs.352 crore continuation TVK · revised

“and Rs.352 crore under the Capital Subsidy Scheme.”
“பதிவு செய்யப்பட்ட 43.47 இலட்சம்‌ குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்களுடன்‌, தேசிய அளவில்‌ தமிழ்நாடு மூன்றாம்‌ இடத்தில்‌ உள்ளது. புதிதாகத்‌ தொழில்‌ தொடங்குவோருக்கு மூதைன மானியம்‌ மற்றும்‌ வட்டி மானியம்‌,பல திட்டங்களின்‌ கீழ்‌ வழங்கப்படுகிறது. இந்த நிதியாண்டில்‌, தமிழ்நாடு மகளிர்‌ தொழில்முனைவோர்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 225 கோடி ரூபாயும்‌, மூதைன மானியங்கள்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 352 கோடி ரூபாயும்‌ ஒதுக்கீடு செய்யப்படுகிறது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶85) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.43 · ¶85 · full speech ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector