Transport · dormant
NABARD-RIDF roads and bridges
3 budgets named it 3 year span — ₹ crore allocated 2,564 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2016-17 and named again in 2 later budgets, most recently 2018-19.
Allocated by budget year
See it on the map → All Transport projects →
What each budget said, year by year
2016-17 Rs.2,563.87 crores
“Further, the State has also taken up 1,184.84 km length of roads and 914 bridges at a cost of Rs.2,563.87 crores from 2011-2012 for widening and strengthening of roads and bridges under NABARD-RIDF assistance.”
“மேலும், நபார்டு வங்கியின் உதவியோடு, 2011-2012 ஆம் ஆண்டிலிருந்து 1,184.84 கிலோ மீட்டர் சாலை மேம்பாட்டுப் பணிகளையும், 914 பாலப் பணிகளையும், 2,563.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. திருமங்கலம் மற்றும் மூலக்கடை சந்திப்பில் உள்ள பாலம், முடிச்சூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் உள்ள பாலம் ஆகியன உள்ளிட்ட, பல பாலப் பணிகள் சென்னை பெருநகர்ப் பகுதியில் 1195.35 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விரிவுபடுத்தப்பட்ட சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், சாலை அகலப்படுத்துதல் மற்றும் நடைபாதைகள், வடிகால்கள் போன்றவற்றை அமைப்பதற்கான பணிகள் 400 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இரயில்வே பணிகள் திட்டத்தின் கீழ், 1,116.94 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 52 இரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாலப் பணிகள் இந்த அரசால் முடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகள் 5,171 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உலக வங்கியின் உதவியோடு, திட்டமிடப்பட்டவாறு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில், 2,653 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 12 சாலைப் பணிகள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்காக இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1220.28 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶41) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.29 · ¶41 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.300 crores
“Further, during 2016-2017, this Government will undertake strengthening of roads and bridges at a cost of Rs.300 crores with NABARD assistance.”
“2016-2017 ஆம் ஆண்டில் 'ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்” (CRIDP) கீழ் 1000 கிலோமீட்டர் சாலைகளை அகலப்படுத்தும் பணிகளும், 3,000 கிலோமீட்டர் சாலைகளை மேம்படுத்துவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்திற்காக 2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2,800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. “செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறையின்” (Performance Based Maintenance Contract) &p பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, இராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் கோட்டங்களில் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய மாவட்டச் சாலைகளை வலுப்படுத்தவும், பராமரிக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடப்பு நிதியாண்டிலும் இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 437 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2016-2017 ஆம் ஆண்டில் சாலைகள் மற்றும் பாலங்களை மேம்படுத்தும் பணிகளை, 300 கோடி ரூபாய் செலவில் நபார்டு வங்கியின் கடனுதவியுடன் இந்த அரசு மேற்கொள்ளும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶60) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.31 · ¶60 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.200 crore
“During 2017-2018, this Government will undertake construction of bridges at a cost of Rs.200 crore with NABARD assistance.”
“2017-2018 ஆம் ஆண்டில் நபார்டு வங்கி கடனுதவியுடன், 200 கோடி ரூபாய் செலவில் பாலங்கள் கட்டுவதற்கான பணிகளை இந்த அரசு மேற்கொள்ளும். நெடுஞ்சாலைத் துறைக்காக, 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 10,067 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எரிசக்தி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶61) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.34 · ¶61 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.200 crore
“In 2018-2019, the Government will take up 70 more bridges at an estimated cost of Rs.200 crore under the RIDF programme.”
“இரயில்வே பணிகள் திட்டத்தின் கீழ், 2011 ஆம் ஆண்டு முதல் 1436.66 கோடி ரூபாய் செலவில், 60 இரயில்வே மேம்பாலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக 2018-2019 ஆம் ஆண்டில் 6 இரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகளை 184 கோடி ரூபாய் செலவில் இந்த அரசு மேற்கொள்ளும். 2017-2018 ஆம் ஆண்டில் 315 கோடி ரூபாய் செலவில் 126 பாலங்கள் நபார்டு வங்கி நிதியுதவியுடன் கட்டப்பட்டு வருகின்றன. 2018-2019 ஆம் ஆண்டில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதலாக 70 பாலங்களை இந்த அரசு அமைக்கும். 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இரயில்வே பணிகள் திட்டத்திற்காக 513.66 கோடி ரூபாயும், நபார்டு திட்டப் பணிகளுக்காக 250 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத் துறைக்கு மொத்தமாக 11,073.66 கோடி ரூபாய் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எரிசக்தி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶57) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.35 · ¶57 · source PDF ↗ · on the map →
Linked projects
- runs alongside Irrigation works under NABARD-RIDF · 2014-15 –2020-21
- runs alongside Causeways to high-level bridges · 2022-23 –2024-25
- runs alongside Construction of 6 Road Over Bridges (ROBs) 2018-2019 · 2018-19 –2019-20
- runs alongside Town panchayat roads improvement · 2011-12 –2019-20
Nearby in the same sector
- Comprehensive Road Infrastructure Development Programme (CRIDP) · 12 years
- Tamil Nadu Road Sector Project – Phase II · 12 years
- Chennai Peripheral Ring Road · 10 years
- Diesel subsidy to State Transport Undertakings · 10 years
- Chennai Metro Rail Phase-II · 10 years
- Chennai Metro Rail Project · 9 years