Education · dormant

National Law School (Srirangam)

2 budgets named it 2 year span ₹ crore allocated AIADMK government

First announced in 2011-12 and named again in 1 later budget, most recently 2012-13. Places named: Srirangam.

Allocated by budget year

Located at Srirangam · Tiruchirappalli district

See it on the map → All Education projects →

What each budget said, year by year

2011-12 new project AIADMK · revised

“This Government has decided to start a new National Law School and an Indian Institute of Information Technology in Srirangam constituency.”
“பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில்‌ தமிழக முதல்வரை சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுத்து அனுப்பிய ஸ்ரீரங்கம்‌ தொகுதியில்‌ ஜுன்‌ 19 முதல்‌ 21 ஆம்‌ நாள்‌ வரை மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ மேற்கொண்ட நன்றி அறிவிப்பு சுற்றுப்பபணத்தில்‌ அப்பகுதியே விழாக்கோலம்‌ பூண்டது. மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ 190 கோடி ரூபாய்‌ அளவில்‌ பல்வேறு வளர்ச்சி, நலத்‌ திட்டப்பணிகளை அத்தருணத்தில்‌ அறிவித்தார்கள்‌. காவிரி ஆற்றின்‌ குறுக்கே முத்தரசநல்லூரில்‌ 32 கோடி ரூபாய்‌ செலவில்‌ ஒரு தடுப்பணை; 10 கோடி ரூபாய்‌ செலவில்‌ மகளிருக்கென தோட்டக்கலைக்‌ கல்லூரி- ஆராய்ச்சி நிறுவனம்‌; நான்கு கோடி ரூபாய்‌ செலவில்‌ ஒரு புதிய அறிவியல்‌-கலைக்‌ கல்லூரி; 36.40 கோடி ரூபாய்‌ செலவில்‌ ஸ்ரீரங்கத்தில்‌ பயணியர்‌ விடுதி ஆகியவை இந்த அறிவிப்புகளில்‌ குறிப்பிடத்தக்கவை. இந்த அரசு ஒரு தேசிய சட்டப்‌ பள்ளியையும்‌, இந்திய தகவல்‌ தொழில்நுட்ப நிறுவனத்தையும்‌ ஸ்ரீரங்கம்‌ தொகுதியில்‌ புதிதாகத்‌ தொடங்கவுள்ளது. மக்களுக்கு அளித்த தேர்தல்‌ வாக்குறுதிகளை ஒன்றரை ஆண்டில்‌ நிறைவேற்ற ஒரு காலவரையறையை இந்த அரசுக்கு நிர்ணயித்து, அதற்கேற்ப வைராக்யத்துடன்‌ செயல்பட்டு வாக்குறுதிகளை நிறைவேற்றும்‌ வல்லமை படைத்த மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ உறுதியை இந்த அறிவிப்புகள்‌ பறைசாற்றுகின்றன. இந்த அரசு பதவியேற்ற பின்பு சட்டம்‌ ஒழுங்கை நிலைநாட்டுவதிலும்‌, நிருவாக அமைப்பை ஒழுங்குபடுத்துவதிலும்‌, புதிய திட்டங்களைச்‌ செயல்படுத்துவதிலும்‌ எடுத்து வரும்‌ முயற்சிகளைப்‌ பொதுமக்கள்‌ வெகுவாகப்‌ பாராட்டுகின்றனர்‌ என்ற செய்தியைத்‌ தங்களுடன்‌ பகிர்ந்து கொள்வதில்‌ மிக்க மகிழ்ச்சியடைகிறேன்‌. ஆளுகை” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶4) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.93 · ¶4 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2012-13 new project AIADMK

“an Indian Institute of Information Technology, and a National Law School in Srirangam are under progress.”
“உயர்‌ கல்வியிலும்‌, உயர்‌ ஆராய்ச்சியிலும்‌ முன்னணி மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும்‌ என்பதே நமது மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ பேரவா. ஏழைகளுக்கும்‌ உயர்‌ கல்வி தடையின்றி கிடைப்பதை உறுதி செய்திட, 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ 11 புதிய கலை, அறிவியல்‌ கல்லூரிகள்‌ தொடங்கப்பட்டன. தேனி மாவட்டம்‌ போடிநாயக்கனூரில்‌ புதிய பொறியியல்‌ கல்லூரி, ஸ்ரீரங்கத்தில்‌ தேசிய தகவல்‌ தொழில்நுட்ப நிறுவனம்‌, தேசிய சட்டப்‌ பள்ளி ஆகியவற்றை அமைப்பதற்கான பணிகள்‌ நடைபெற்று வருகின்றன. நமது பல்கலைக்கழகங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி அவற்றை நேர்த்திமிகு மையங்களாகவும்‌, ஆராய்ச்சிகளை மேற்கொண்டு புதிய படைப்புகளை படைக்கும்‌ மையங்களாகவும்‌ மாற்றுவதற்கான முயற்சிகள்‌ தொடரும்‌. இத்தகைய புதுமைகளை உருவாக்கும்‌ பணிகளில்‌ ஈடுபடுவதற்கு, தொழில்‌ துறையினரோடு இணைந்து செயல்பட இப்பல்கலைக்கழகங்கள்‌ ஊக்குவிக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶94) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.60 · ¶94 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector