Industry · recurring

New Industrial Policy 2011

5 budgets named it 16 year span — ₹ crore allocated AIADMK / TVK governments

First announced in 2011-12 and named again in 4 later budgets, most recently 2026-27.

Allocated by budget year

See it on the map → All Industry projects →

What each budget said, year by year

2011-12 policy AIADMK · revised

“This Government will come out with a New Industrial Policy 2011, besides formulating sector specific policies for automobiles and auto components, bio-technology and pharma.”
“உலக அளவில்‌ தமிழ்நாடு உற்பத்தி சார்ந்த தொழில்‌ முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக கருதப்படுகிறது. வாகனங்கள்‌, அவற்றின்‌ உதிரிப்‌ பாகங்கள்‌, பொறியியல்‌, துணி, தோல்‌ பொருட்கள்‌ உற்பத்தி, தகவல்‌ தொழில்‌ நுட்பம்‌, தகவல்‌ தொழில்‌ நுட்பம்‌ சார்ந்த சேவைகள்‌ ஆகியவற்றின்‌ முன்னணி உற்பத்தியாளர்களின்‌ உற்பத்தி மையமாக இம்மாநிலம்‌ நிலைபெற்றுள்ளது. இருப்பினும்‌, சமீபகாலத்தில்‌ இம்மாநிலத்தின்‌ தொழில்‌ வளர்ச்சி பின்னடைவைச்‌ சந்தித்து வருகிறது. பதினோறாவது ஐந்தாண்டுத்‌ திட்டகாலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட 9.2 விழுக்காடு என்ற தொழில்‌ வளர்ச்சி இலக்கில்‌ 2007-2008 முதல்‌ 2010-2011 வரையிலான முதல்‌ நான்கு ஆண்டு காலத்தில்‌ 4.43 விழுக்காடு வளர்ச்சி மட்டுமே எய்தப்பட்டுள்ளது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின்‌ (Centre for Monitoring Indian Economy) 2010-2011 ஆண்டிற்கான அறிக்கையின்படி, உற்பத்திப்‌ பிரிவிற்கான முதலீட்டை ஈர்ப்பதில்‌ தமிழ்நாடு ஏழாமிடத்திற்குப்‌ பின்தள்ளப்பட்டுள்ளது. உற்பத்தி சார்ந்த வளர்ச்சி சிறப்பாக அமைந்தால்தான்‌ பொருளாதார நிலை மீள்வது உறுதி பெறும்‌. முதலீட்டாளர்களுக்கு உகந்த முனைப்பானக்‌ கொள்கைகளை உருவாக்குவதாலும்‌, மின்சாரம்‌ வழங்குவதை மேம்படுத்தி அடிப்படைக்‌ கட்டமைப்பில்‌ உள்ள இடைவெளியை நீக்குவதாலும்‌, திறன்‌ வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்குவதாலும்‌ அதிகளவில்‌ வெளிநாட்டு நேரடி முதலீட்டினை பெற்று, தற்போதுள்ள மந்த நிலையினை மாற்றி தொழில்துறையில்‌ கூடுதல்‌ வளர்ச்சியினைக்‌ கொண்டு வர இந்த அரசு முயற்சி மேற்கொள்ளும்‌. இந்த அரசு மோட்டார்‌ வாகனங்கள்‌, அதன்‌ உதிரி பாகங்கள்‌ தயாரித்தல்‌, உயிரி தொழில்நுட்பம்‌, மருந்துகள்‌ தயாரிப்பு போன்ற துறைகளுக்கென தனித்தனியே துறை சார்ந்த திட்டவட்டமானத்‌ தொழிற்‌ கொள்கைகளை வகுப்பதுடன்‌ புதிய தொழிற்‌ கொள்கை 2011 ஒன்றையும்‌ உருவாக்கும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶50) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.32 · ¶50 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2012-13 policy AIADMK

“This Government will unveil a new industrial policy to facilitate the realization of this vision. The new industrial policy will correct the shortcomings of the present policy and will focus on growth with employment generation.”
“மாநிலத்தின்‌ மொத்த உற்பத்தி மதிப்பில்‌ உற்பத்தித்‌ துறையின்‌ பங்கு 2004-2005 ஆம்‌ ஆண்டில்‌ 20 விழுக்காடாக இருந்து, 2009-2010-ல்‌ 17 விழுக்காடாகக்‌ குறைந்திருப்பது கவலை அளிக்கிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும்‌, சேவைத்‌ துறையில்‌ வளர்ச்சியை ஏற்படுத்துவதிலும்‌, உற்பத்தித்‌ துறை மிக முக்கியப்‌ பங்காற்றுவதால்‌, 2023 ஆம்‌ ஆண்டுக்குள்‌ மாநிலத்தின்‌ மொத்த உற்பத்தி மதிப்பில்‌ உற்பத்தித்‌ துறையின்‌ பங்கு 23 சதவீத அளவிற்கு உயர்த்தப்பட வேண்டும்‌ என மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ உறுதி கொண்டுள்ளார்‌. ஆசியாவில்‌ முதலீட்டிற்கு உகந்த முதல்‌ மூன்று இடங்களில்‌ ஒன்றாகவும்‌, இந்தியாவிலேயே முதலீட்டிற்கு மிக உகந்த இடமாகவும்‌ தமிழ்நாடு திகழ வேண்டும்‌ என்பதும்‌ அவருடைய தொலைநோக்குப்‌ பார்வையாகும்‌. இதனை எய்தக்‌ கூடிய வகையில்‌ புதிய தொழில்‌ கொள்கையை இந்த அரசு விரைவில்‌ வெளியிடும்‌. தற்போதுள்ள தொழில்‌ கொள்கையில்‌ உள்ள குறைபாடுகளை நீக்கி, வேலைவாய்ப்புகளை உருவாக்கவும்‌, வளர்ச்சிக்கு வழிவகுக்கவும்‌ இப்புதிய கொள்கை முக்கியத்துவம்‌ அளிக்கும்‌. மேலும்‌, முதன்மைத்‌ துறையினுடைய உற்பத்திக்கு அதிக மதிப்புக்‌ கூட்டப்படும்‌ வகையிலும்‌, அத்துறையில்‌ உள்ள மிகுதிப்‌ பணியாளர்களை ஈர்த்துக்‌ கொள்ளும்‌ வகையிலும்‌, வேளாண்‌ துறை, அதைச்‌ சார்ந்த துறைகளோடும்‌ உற்பத்தித்‌ துறை ஒருங்கிணைந்து வளர்ச்சி பெறுவதை இப்புதிய கொள்கை உறுதி செய்யும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶54) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.35 · ¶54 · source PDF ↗ · on the map →

2020-21 policy AIADMK

“The Government of Tamil Nadu will shortly launch a New Industrial Policy which will provide GST regime compatible incentives.”
“பொருட்கள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி நடைமுறைக்கு தகுந்தவாறு முதலீட்டாளர்களுக்கு ஊக்கத்தொகைகளை வழங்க, புதிய தொழில்‌ கொள்கையை, தமிழ்நாடு அரசு விரைவில்‌ வெளியிடும்‌. மின்சார வாகனப்‌ பயன்பாட்டை ஊக்குவித்தல்‌ மற்றும்‌ தமிழ்நாட்டை மின்சார வாகனங்கள்‌, உதிரி பாகங்கள்‌, மின்ஏற்று உபகரணங்கள்‌ தயாரிப்பு மையமாக உருவாக்குதல்‌ ஆகிய இரண்டு முக்கிய நோக்கங்களுடன்‌, மிகவும்‌ முற்போக்கான, தமிழ்நாடு மின்சார வாகனக்‌ கொள்கையை, 2019 ஆம்‌ ஆண்டில்‌ அரசு வெளியிட்டது. பயிர்செய்யத்‌ தக்க நிலங்களின்‌ பரப்பு, தொழில்‌ வளர்ச்சியினால்‌ பாதிப்படையக்கூடாது என்பதனால்‌, தொழில்துறை உபயோகத்தில்‌ உள்ள நிலங்களின்‌ நிலப்‌ பயன்பாட்டை மேம்படுத்த, மாநிலத்தில்‌ உள்ள தொழில்‌ நிறுவனங்களுக்கான தரைதளக்‌ குறியீடு ஒன்றிலிருந்து ஒன்றரையாகவும்‌ மற்றும்‌ மனை பரப்பளவு 50 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாகவும்‌ உயர்த்தப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶137) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.76 · ¶137 · source PDF ↗ · on the map →

2021-22 policy AIADMK · interim

“The industrialisation of Tamil Nadu will be further advanced by the New Industrial Policy launched by the Hon’ble Chief Minister recently.”
“மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களால்‌ சமீபத்தில்‌ வெளியிடப்பட்ட புதிய தொழில்‌ கொள்கையால்‌ தமிழ்நாட்டில்‌ தொழில்மயமாக்கல்‌ மேலும்‌ முன்னேற்றம்‌ அடையும்‌. இக்கொள்கை, பல்வேறு தரப்பினரது கருத்துகளின்‌ அடிப்படையிலும்‌, டாக்டர்‌ சி. ரங்கராஜன்‌ குழுவின்‌ சில பரிந்துரைகளின்‌ அடிப்படையிலும்‌ வகுக்கப்பட்டது. தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும்‌ உதவிகள்‌ சார்ந்த விவரங்கள்‌ இக்கொள்கையில்‌ தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. இக்கொள்கை, தென்மாவட்டங்களிலும்‌, மாநிலத்தில்‌ தொழிற்சாலைகள்‌ குறைவாக உள்ள பகுதிகளிலும்‌ தொழிற்சாலை அமைப்பதற்கு மேலும்‌ ஊக்கத்தொகையினை அளிக்கிறது. வழிகாட்டி நிறுவனம்‌ (GUIDANCE) பெருமளவில்‌ வலுப்படுத்தப்பட்டு, அமெரிக்கா, பிரான்ஸ்‌, ஜெர்மனி, இங்கிலாந்து, சீனா, கொரிய குடியரசு, ஐப்பான்‌, ஐக்கிய அரபு நாடுகள்‌, இந்தோனேசியா, சிங்கப்பூர்‌ தைவான்‌ ஆகிய நாடுகளுக்கான பிரத்தியேக அமைப்புகள்‌ உருவாக்கப்பட்டுள்ளன.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶107) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2021-22_speech_en_interim · p.68 · ¶107 · source PDF ↗ · on the map →

2026-27 policy TVK · revised

“Tamil Nadu, one of the leading States in industrial and economic growth, will release a new Tamil Nadu Industrial Policy to further strengthen this position. This Policy will foster innovation and technology-driven growth, support emerging industry sectors, and drive sustainable development and export promotion.”
“தொழில்‌ மற்றும்‌ பொருளாதார வளர்ச்சியில்‌ முன்னணி மாநிலங்களில்‌ ஒன்றாகத்‌ திகழும்‌ தமிழ்நாடு, தன்‌ நிலையை மேலும்‌ மேம்படுத்திக்‌ கொள்ளும்‌ நோக்கில்‌, ஒரு புதிய தமிழ்நாடு தொழில்‌ கொள்கை வெளியிடப்படும்‌. இக்கொள்கை, புத்தாக்கம்‌ மற்றும்‌ டொழில்நுட்ப அடிப்படையிலான வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, எழுச்சி பெற்று வரும்‌ புதிய தொழில்‌ துறைகளையும்‌ ஆதரித்து, நிலையான வளர்ச்சி மற்றும்‌ ஏற்றுமதி மேம்பாட்டை முன்னெடுக்கும்‌ வகையில்‌ வடிவமைக்கப்படும்‌. மேலும்‌, மாநிலத்தின்‌ உற்பத்தி மற்றும்‌ விநியோகத்‌ தகுதிகளைப்‌ பட்டியலிட்டு, முதலீட்டாளர்கள்‌ உள்ளூர்‌ சூழலை ஆழமாகப்‌ புரிந்துகொள்ள உதவும்‌ ஒரு விரிவான டிஜிட்டல்‌ தளமாக, தமிழ்நாடு தொழில்‌ திறன்‌ விவரப்பட்டியலை அரசு உருவாக்கும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶78) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.39 · ¶78 · full speech ↗ · on the map →

Nearby in the same sector