Welfare · completed claimed

Ockhi cyclone relief and rehabilitation

1 budget named it 1 year span 124 ₹ crore allocated AIADMK government 1 district

First announced in 2018-19 and not named in any budget since. Districts: kanniyakumari.

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2018-19 Rs.124.11 crore completion claim AIADMK

“Totally, Rs.124.11 crore was released for relief and rehabilitation towards the damages caused by Ockhi cyclone”
“கன்னியாகுமரி மாவட்டத்தைத்‌ தாக்கிய ‘el’ புயலினால்‌, கடலில்‌ காணாமல்‌ போன மீனவர்களைத்‌ தேடி மீட்கும்‌ நடவடிக்கைகளில்‌ இந்த அரசு துரிதமாகச்‌ செயல்பட்டது. இந்த நடவடிக்கைகளால்‌, 3,506 மீனவர்கள்‌ பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன்‌, 288 மீன்பிடிப்‌ படகுகளும்‌ மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்‌, காணாமல்‌ போன 177 மீனவர்களை மீட்க வாய்ப்பில்லை என அறிவித்து, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும்‌ தலா 20 இலட்சம்‌ ரூபாய்‌ வழங்கப்பட்டுள்ளது. ஓகி புயலால்‌ ஏற்பட்ட பாதிப்புகளைச்‌ சீர்‌ செய்வதற்காகவும்‌, நிவாரணப்‌ பணிகளை மேற்கொள்வதற்காகவும்‌, மொத்தம்‌ 124.11 கோடி ரூபாயை அரசு விடுவித்துள்ளது. இது தவிர, 2017 ஆம்‌ ஆண்டு நவம்பர்‌ மாதம்‌ பெய்த தொடர்‌ கடும்‌ மழையால்‌ ஏற்பட்ட பாதிப்புகளைச்‌ சரி செய்து, உட்கட்டமைப்பு வசதிகளை மறுசீரமைக்கவும்‌, நிவாரண உதவிக்காகவும்‌ 51.05 கோடி ரூபாயை அரசு விடுவித்துள்ளது. 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, மாநிலப்‌ பேரிடர்‌ நிவாரண நிதியத்திற்காக 786 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶8) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.6 · ¶8 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector