Welfare · dormant
Particularly Vulnerable Tribes Development Programme
4 budgets named it 7 year span 102 ₹ crore allocated AIADMK government
First announced in 2011-12 and named again in 3 later budgets, most recently 2017-18.
Allocated by budget year
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2011-12 ` 10.76 crores
“Further ```` 10.76 crores has been allocated under the Particularly Vulnerable Tribes Development Programme.”
“இந்த அரசு பழங்குடியினர் நலனில் தனிக் கவனம் செலுத்திவருகிறது. பழங்குடியினர் மேம்பாட்டுக்குப் போதுமான நிதியொதுக்கத்தினை உறுதி செய்யும் பொருட்டு, 1976-1977 ஆம் ஆண்டிலிருந்து பழங்குடியினர் துணைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2011-2012 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் பழங்குடியினர் நலனுக்காக 246 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த ஆண்டுத் திட்ட ஒதுக்கீட்டில் 1.05 விழுக்காடாகும். பழங்குடியினர் வாழும் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 2750) ஆம் பிரிவின்படியும் சிறப்பு மத்திய நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு, 2011-2012 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் 13.91 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அழிவின் விளிம்பு நிலையில் உள்ள குறிப்பிட்ட பழங்குடியினர் நலனை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 10.76 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶126) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.73 · ¶126 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2013-14 Rs.25.72 crores
“Rs.25.72 crores has been provided for the development of the Particularly Vulnerable Tribal Groups.”
“2012-2013 ஆம் ஆண்டில் 349.30 கோடி ரூபாயாக இருந்த பழங்குடியினர் துணைத் திட்டத்திற்கான ஒதுக்கீடு, 2013-2014 ஆம் ஆண்டில் 489.48 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டு திட்ட ஒதுக்கீட்டில் இது 1.32 சதவீதமாகும். அவசியமான கட்டமைப்பு வசதிகளான குடிநீர் வழங்கல், கிராமங்களுக்கு சாலை இணைப்புகள் ஏற்படுத்துதல், வீடுகள் கட்டுதல் போன்றவை இந்த பழங்குடியினர் துணைத் திட்டத்தின் முக்கியக் கூறுகள் ஆகும். குறிப்பாக, அருகிவரும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக 25.72 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழங்குடுபினா வளர்ச்சிக்கான சிறப்புக் திட்டம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶131) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.54 · ¶131 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.28.80 crores
“In this Revised Budget Estimates, Rs.28.80 crores and Rs.7 crores have been allocated for the development of particularly vulnerable tribes living in the State and for the implementation of the 'Van Bandhu Kalyan Yojana', respectively.”
“ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம்” (Comprehensive Tribal Development Programme), மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 2011-2012 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பழங்குடியினர் குடியிருப்புப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், அவர்கள் வருவாய் ஈட்டும் தொழில்களை மேற்கொள்ள உதவுவதற்காகவும், 2016-2017 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக 50 கோடி ரூபாய் இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், 12 கோடி ரூபாய் செலவில், நபார்டு வங்கி கடனுதவியுடன் வனத்துறையால் நடத்தப்படும் பழங்குடியினருக்கான பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். மாநிலத்தில் வாழும் அழிவின் விளிம்பிலுள்ள பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக 28.80 கோடி ரூபாயும், 'வனபந்து கல்யாண் யோஜனா திட்டத்தைச்” செயல்படுத்துவதற்காக 7 கோடி ரூபாயும் இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶131) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.63 · ¶131 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.37 crore
“In the Budget Estimates 2017-2018, Rs.50 crore has been allocated under CTDP and Rs.37 crore has been provided for the development of Particularly Vulnerable Tribal Groups.”
“2016-2017 ஆம் ஆண்டில், மொத்தம் 49.84 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டு, நபார்டு வங்கி கடனுதவியுடன் 157 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் மற்றும் வனத்துறையால் நடத்தப்படும் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. பழங்குடியினர் பகுதிகளில் பல்வேறு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வசதிகள் மேற்கொள்ளவும், பழங்குடியினக் குடும்பங்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கு நிதியுதவி வழங்கிடவும், 2011-2012 ஆம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம்” அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த அரசு, பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில், பழங்குடியின மாணவ, மாணவியர் தங்கி கல்வி பயிலும் வகையில், ஜவ்வாது மலையில் இரண்டு உண்டு உறைவிட மாதிரிப் பள்ளிகள் (Model Residential School) ஆசிரியர் குடியிருப்புகளுடன் 24 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் இதன் பயனாக அப்பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் மேல்நிலைப் பள்ளி வரை கல்வி கற்பதற்கான வாய்ப்பினை பெறுவர். 2017-2018 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 50 கோடி ரூபாயும், அழிவின் விளிம்பிலுள்ள பண்டைய பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 37 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶124) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.68 · ¶124 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 16 years
- Free bicycles for SC/ST students · 13 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Social Security Pension Schemes · 12 years
- Marriage assistance with gold coin · 11 years