Rural development · dormant

Rural poverty reduction schemes allocation

3 budgets named it 3 year span 1,345 ₹ crore allocated AIADMK government

First announced in 2016-17 and named again in 2 later budgets, most recently 2018-19.

Allocated by budget year

See it on the map → All Rural development projects →

What each budget said, year by year

2016-17 Rs.355.81 crores continuation AIADMK · revised

“For these poverty reduction schemes in rural areas, an amount of Rs.355.81 crores has been provided in the Revised Budget Estimates 2016-2017.”
“தமிழ்நாட்டில்‌ 120 வட்டாரங்களில்‌ 'புதுவாழ்வுத்‌ திட்டம்‌” செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர, உலக வங்கியின்‌ நிதியுதவியுடன்‌, 900 கோடி ரூபாய்‌ செலவில்‌ 120 வட்டாரங்களில்‌ “தமிழ்நாடு கிராமப்புறப்‌ புதுவாழ்வுத்‌ திட்டம்‌” (Tamil Nadu Rural Transformation Project) செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டங்களோடு, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கமும்‌*, “தேசிய ஊரக வாழ்வாதார இயக்கமும்‌” சேர்த்து, மொத்தம்‌ 385 வட்டாரங்களிலும்‌, அதாவது மாநிலம்‌ முழுவதும்‌, வறுமை ஒழிப்புத்‌ திட்டங்கள்‌ செயல்படுத்தப்படும்‌. கிராமப்புறப்‌ பகுதிகளில்‌ இத்தகைய வறுமை ஒழிப்பிற்கான திட்டங்களுக்கு, 2016-2017 ஆம்‌ ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 355.81 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶7) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2016-17_speech_en_revised · p.6 · ¶7 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.469 crore continuation AIADMK

“An allocation of Rs.469 crore has been made in the Budget Estimates 2017-2018 for these rural poverty alleviation programmes.”
“இந்த அரசு “புதுவாழ்வு” திட்டத்தினை 120 வட்டாரங்களில்‌ உள்ள 9.80 இலட்சம்‌ ஏழைக்‌ குடும்பங்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ 4174 கிராம ஊராட்சிகளில்‌ செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம்‌ 2017 ஆம்‌ ஆண்டு ஜூன்‌ மாதம்‌ நிறைவடைய உள்ளது. இதைத்‌ தொடர்ந்து, அடுத்த கட்டமாக உலக வங்கி உதவியுடன்‌, 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌, கூடுதலாக 120 வட்டாரங்களில்‌ 1000 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீட்டில்‌ 'தமிழ்நாடு கிராமப்புற புத்தாக்கத்‌ திட்டம்‌” (Tamil Nadu Rural Transformation Project) செயல்படுத்தப்படும்‌. தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கம்‌, மீதமுள்ள 145 வட்டாரங்களிலும்‌ செயல்படுத்தப்படுவதன்‌ மூலம்‌, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து 385 வட்டாரங்களிலும்‌ வறுமை ஒழிப்புத்‌ திட்டங்கள்‌ செயல்படுத்த வழி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தை ஏழ்மையில்லா மாநிலமாக மாற்றுவதற்கு, பொருளாதாரத்தில்‌ பின்தங்கிய அனைத்துக்‌ குடும்பங்களையும்‌ வறுமையின்‌ பிடியிலிருந்து மீட்க இந்த அரசு உறுதியாக உள்ளது. 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, ஊரக வறுமை ஒழிப்புத்‌ திட்டங்களுக்காக 469 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருவாய்க்‌ கணக்கில்‌ செலவுகள்‌ 2017-2018 ஆம்‌ ஆண்டில்‌ வருவாய்க்‌ கணக்கு செலவுகள்‌ 175,293 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2016-2017 ஆம்‌ ஆண்டு திருத்த மதிப்பீடுகளை விட 10.06 சதவீதம்‌ கூடுதலாகும்‌. வருவாய்க்‌ கணக்கு செலவுகளின்‌ முக்கிய கூறுகள்‌ கீழே விவரிக்கப்பட்டுள்ளன. 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ சம்பள செலவினத்திற்கான ஒதுக்கீடு 46,332 கோடி ரூபாயாகும்‌. ஓய்வூதியம்‌ மற்றும்‌ இதர ஒய்வுக்கால பலன்கள்‌ குறித்த செலவினத்திற்கான ஒதுக்கீடு 20,577 கோடி ரூபாயாகும்‌. ஏழாவது ஊதியக்குழுவின்‌ பரிந்துரைகள்‌ நடைமுறைப்படுத்துவதால்‌ ஏற்படக்கூடிய செலவினம்‌ இம்மதிப்பீடுகளில்‌ சேர்க்கப்படவில்லை. இந்த நிதி ஒதுக்கீடுகள்‌, மொத்த வருவாய்ச்‌ செலவுகளில்‌ 38.17 சதவீதமாகும்‌. ஏழாவது ஊதியக்‌ குழுவின்‌ பரிந்துரைகளின்படி ஊதிய விகிதங்களின்‌ திருத்தம்‌, அகவிலைப்படியின்‌ காலமுறை உயர்வு, ஊதிய உயர்வு மற்றும்‌ காலிப்‌ பணியிடங்களை நிரப்புதல்‌ ஆகியவற்றால்‌ ஏற்படக்கூடிய செலவுகளின்‌ காரணமாக, 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான சம்பளச்‌ செலவினம்‌, மற்றும்‌ ஓய்வூதியம்‌ மற்றும்‌ இதர ஒஓய்வுகாலப்‌ பலன்கள்‌ குறித்த செலவினங்கள்‌ ஆகியவற்றின்‌ வளர்ச்சி விகிதம்‌, முறையே 31.58 மற்றும்‌ 34.37 சதவீதமாக இருக்கும்‌ எனவும்‌, இதுவே 2019-2020 ஆம்‌ ஆண்டில்‌ சம்பளம்‌ மற்றும்‌ ஓய்வூதியம்‌ ஆகிய இரண்டிற்கும்‌ 10 சதவீதமாக இருக்கும்‌ எனவும்‌ கருதப்படுகிறது. 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ மானியம்‌ மற்றும்‌ உதவித்தொகைக்கான ஒதுக்கீடு 72,616 கோடி ரூபாயாகும்‌. உணவு மானியம்‌, மின்சார மானியம்‌, கல்வி உதவித்‌ தொகைகள்‌, வீட்டுவசதித்‌ திட்டங்கள்‌ போன்ற தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும்‌ பல்வேறு நலத்திட்டங்களுக்கான செலவினம்‌, விவசாயக்‌ கடன்‌ தள்ளுபடி மற்றும்‌ வீடுகளுக்கு 100 யூனிட்‌ இலவச மின்சாரம்‌ போன்ற புதிய திட்டங்களுக்கான கூடுதல்‌ செலவினங்கள்‌ இந்த மதிப்பீடுகளில்‌ உள்ளடங்கியுள்ளன. மேலும்‌, ஐந்தாவது மாநில நிதிக்குழுவின்‌ பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, மாநிலத்தின்‌ சொந்த வரிவருவாயின்‌ வளர்ச்சிக்‌ கணிப்பிற்கேற்ப உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகரிக்கப்பட்ட நிதிப்பகிர்வும்‌ வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ சேர்க்கப்பட்டுள்ளது. 2018-2019 மற்றும்‌ 2019-2020 ஆம்‌ ஆண்டுகளில்‌ இதன்‌ வளர்ச்சி விகிதம்‌, முறையே 6.5 மற்றும்‌ 7.05 சதவீதமாக இருக்கும்‌ என கணிக்கப்பட்டுள்ளது. 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ ஊதியம்‌ அல்லாத செயல்முறை மற்றும்‌ பராமரிப்பு செலவுகள்‌ 9,764 கோடி ரூபாயாக இருக்கும்‌ என கணிக்கப்பட்டுள்ளது. இம்மதிப்பீடுகளில்‌, குறிப்பாக, பராமரிப்பு, நிர்வாகச்‌ செலவுகள்‌, எரிபொருள்‌ செலவுகள்‌ மற்றும்‌ பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குதல்‌ ஆகிய திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை உள்ளடக்கியதாகும்‌. 2018-2019 மற்றும்‌ 2019-2020 ஆம்‌ ஆண்டுகளில்‌ இதன்‌ வளர்ச்சி விகிதம்‌ 5.22 சதவீதமாக இருக்கும்‌ எனக்‌ கருதப்படுகிறது. 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ வட்டி செலுத்துவதற்கான செலவினம்‌ 25,982 கோடி ரூபாய்‌ என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மொத்த வருவாய்ச்‌ செலவுகளில்‌ 14.82 சதவீதமாகும்‌. மேலும்‌, 2016-2017 ஆம்‌ ஆண்டு திருத்த மதிப்பீடுகளில்‌ 21397 கோடி ரூபாய்‌ என இச்செலவினம்‌ மதிப்பிடப்பட்டுள்ளது. “உதய்‌” திட்டத்தின்‌ கீழ்‌ மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல்‌ வட்டிச்‌ செலவினத்தால்‌, 2016-2017 ஆம்‌ ஆண்டு திருத்த மதிப்பீடுகளைவிட, 2017-2018 ஆம்‌ அண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகள்‌ உயர்ந்துள்ளது. 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான வட்டிச்‌ செலவு மொத்த வருவாய்‌ வரவில்‌ 16.30 சதவீதமாகும்‌. இது, 2018-2019 மற்றும்‌ 2019-2020 ஆம்‌ ஆண்டுகளில்‌, முறையே, 16.77 மற்றும்‌ 17.38 சதவீதமாக இருக்கும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶11) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.9 · ¶11 · source PDF ↗ · on the map →

2018-19 Rs.519.81 crore continuation AIADMK

“A total allocation of Rs.519.81 crore has been provided in the Budget Estimates 2018-2019 for all the rural poverty eradication programmes.”
“வறுமை ஒழிப்பிற்கான இயக்கத்தினை ஒருமுகப்படுத்தி செயல்படுத்துவதற்கான முகமையாக, தமிழ்நாடு மகளிர்‌ நல மேம்பாட்டு நிறுவனம்‌ செயல்பட்டு வருகிறது. கல்வி, சுகாதாரம்‌ ஆகியவற்றுடன்‌ நிலைக்கத்தக்க வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கி, ஊரக மற்றும்‌ நகர்ப்புரப்‌ பகுதிகளில்‌ வறுமையை அறவே அகற்ற வேண்டும்‌ என்பதுதான்‌ இந்த இயக்கத்தின்‌ குறிக்கோளாகும்‌. 'புதுவாழ்வு திட்டத்தின்‌” மூலம்‌, கிராம அளவில்‌ மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்கள்‌ அமைக்கப்பட்டு, அவர்களுக்குத்‌ திறன்‌ பயிற்சியும்‌, வங்கிகள்‌ மூலம்‌ கடனுதவியும்‌ வழங்கப்பட்டுள்ளன. இந்தத்‌ திட்டத்தினால்‌ கிடைக்கப்‌ பெற்ற அனுபவத்தின்‌ அடிப்படையில்‌ அதன்‌ பயன்களை நிலைப்படுத்தும்‌ வகையில்‌, 920.63 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலான தமிழ்நாடு கிராமப்புற புத்தாக்கத்‌ திட்டத்தினை உலக வங்கி நிதியுதவியுடன்‌, 26 மாவட்டங்களில்‌ உள்ள 120 வட்டாரங்களில்‌ இந்த அரசு செயல்படுத்த உள்ளது. கிராமங்களில்‌ மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்கள்‌ மூலமாக குறுந்தொழில்களைத்‌ தொடங்குவதற்கும்‌, அவற்றை வட்டார / மாவட்ட அளவில்‌ சீரிய முறையில்‌ ஒருங்கிணைத்து, உற்பத்தியாளர்‌ கூட்டமைப்பு நிறுவனங்களாக உருவாக்குவதற்கும்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌. இதன்‌ மூலம்‌ பொருளாதார அளவின்‌ பலன்களை (Economies of Scale) சிறிய முதலீட்டில்‌ தொடங்கப்படும்‌ கிராமப்புறத்‌ தொழில்‌ நிறுவனங்களும்‌ பெற இயலும்‌. 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, இத்திட்டத்திற்காக 100 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர மாநிலத்தில்‌ உள்ள 265 வட்டாரங்களில்‌ “தேசிய ஊரக வாழ்வாதார இயக்கமும்‌”, 'தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கமும்‌” செயல்படுத்தப்பட்டு வருவதால்‌, மாநிலம்‌ முழுவதும்‌ உள்ள அனைத்து வட்டாரங்களிலும்‌ வறுமை ஒழிப்புத்‌ திட்டங்கள்‌ செயல்படுத்த வழிவகை ஏற்பட்டுள்ளது. 2018-2019 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, அனைத்து ஊரக வறுமை ஒழிப்புத்‌ திட்டங்களுக்கும்‌ மொத்தமாக 519.81 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶10) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2018-19_speech_en · p.7 · ¶10 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector