Education · dormant

School toilets

1 budget named it 1 year span — ₹ crore allocated 59 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2016-17 and not named in any budget since.

See it on the map → All Education projects →

What each budget said, year by year

2016-17 Rs.59.25 crores continuation project cost AIADMK · revised

“Continuing the efforts of the last five years, 4,339 units of toilets will be provided in the year 2016-2017 in elementary and high schools at a cost of Rs.59.25 crores.”
“பள்ளிகளில்‌ போதுமான அளவிற்கு கழிவறை வசதிகள்‌ செய்து தரப்படுவதற்கும்‌, அவை சிறப்பான முறையில்‌ பராமரிக்கப்படுவதற்கும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ முக்கியத்துவம்‌ அளித்து வருகிறார்கள்‌. கடந்த ஐந்தாண்டுகளில்‌ மேற்கொண்ட முயற்சிகளின்‌ தொடர்ச்சியாக, 2016-2017 ஆம்‌ ஆண்டில்‌ 59.25 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌, தொடக்க மற்றும்‌ உயர்நிலைப்‌ பள்ளிகளில்‌ 4,339 கழிவறைகள்‌ அமைத்துத்‌ தரப்படும்‌. கழிவறைகளைப்‌ பராமரிப்பதற்காக மட்டும்‌, 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ 57.63 கோடி ரூபாயை உள்ளாட்சி அமைப்புகள்‌ மூலம்‌ வழங்கி, அனைத்துப்‌ பள்ளிகளிலும்‌ உள்ள கழிவறைகள்‌ சுத்தமாகப்‌ பராமரிக்கப்பட வேண்டும்‌ என்ற நெடுநாள்‌ தேவையை மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ நிறைவு செய்துள்ளார்கள்‌. இத்திட்டம்‌, 2016-2017 ஆம்‌ ஆண்டிலும்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. இம்முன்‌ முயற்சி மத்திய அரசால்‌ பாராட்டப்பட்டுள்ளது மட்டுமல்லாமல்‌, பிற மாநிலங்களும்‌ இதனை முன்மாதிரியாகப்‌ பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளன. நபார்டு வங்கிக்‌ கடன்‌ உதவியுடன்‌ வகுப்பறைகள்‌, கழிவறைகள்‌ மற்றும்‌ குடிநீர்‌ வசதிகள்‌ போன்ற பள்ளிக்‌ கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக, இந்த திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ 333.61 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶117) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2016-17_speech_en_revised · p.57 · ¶117 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Nearby in the same sector