Welfare · dormant

Smart phones for hearing and visually impaired persons

1 budget named it 1 year span ₹ crore allocated 10 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2020-21 and not named in any budget since.

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2020-21 Rs.10 crore new project project cost AIADMK

“In order to enable the hearing and visually impaired persons to communicate better, the Government will provide smart phones with appropriate applications, to 10,000 hearing and visually impaired persons at a total cost of Rs.10 crore.”
“2016 ஆம்‌ ஆண்டு, மாற்றுத்திறனாளிகள்‌ உரிமைச்‌ சட்டத்தை தமிழ்நாடு மிக முனைப்புடன்‌ செயல்படுத்தி வருகிறது. அரசு வேலைவாய்ப்புகளிலும்‌ பொதுத்துறை நிறுவனங்களில்‌ நடைபெறும்‌ பணி நியமனங்களிலும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதிசெய்யும்‌ வகையில்‌, நிரப்பப்படாமல்‌ நிலுவையிலுள்ள அனைத்து காலிப்‌ பணியிடங்களுக்கும்‌ சிறப்பு ஆட்சேர்ப்பு பணிகள்‌ நடத்தப்படும்‌. தற்போது, அறிவுசார்‌ குறைபாடுகள்‌ உடையோர்‌, கடுமையாக ஊனமுற்றோர்‌, தொழுநோயால்‌ பாதிக்கப்பட்டோர்‌, தசைசிதைவு நோயால்‌ பாதிக்கப்பட்டோருக்கு பராமரிப்பு மானியமாக மாதம்‌ ஒன்றிற்கு 1500 ரூபாய்‌ வழங்கப்பட்டு வருகிறது. மாநிலம்‌ முழுவதும்‌ உள்ள 1.75 இலட்சம்‌ நபர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ 313.26 கோடி ரூபாய்‌ செலவில்‌ இத்திட்டம்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதுகுத்‌ தண்டுவடம்‌ பாதிக்கப்பட்டோர்‌ மற்றும்‌ பார்க்கின்சன்‌ நோய்‌, தண்டுவட மரப்பு நோய்‌ ஆகிய நாட்பட்ட நரம்பியல்‌ பாதிப்புக்கு உள்ளான நபர்களுக்கும்‌, இனிமேல்‌ மாதாந்திர பராமரிப்பு மானியம்‌ வழங்கப்படும்‌. புதிதாக சேர்க்கப்பட்ட பிரிவுகளுக்கும்‌, உதவித்தொகை கோரி நிலுவையில்‌ உள்ள விண்ணப்பங்களை ஒப்புதல்‌ செய்வதற்கும்‌, 21 இலட்சம்‌ தகுதியுள்ள பயனாளிகள்‌ பயன்‌ பெறும்‌ வகையில்‌, 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌ நிதி ஒதுக்கீடு 375 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பார்வைத்‌ திறனற்றோர்‌ மற்றும்‌ கேட்கும்‌ திறனற்றோர்‌, பிறரை எளிதில்‌ தொடர்பு கொள்வதற்கு, தக்க செயலிகளுடன்‌ கூடிய திறன்பேசிகள்‌, 10,000 பார்வைத்‌ திறனற்றோர்‌ மற்றும்‌ கேட்கும்‌ திறனற்றோருக்கு 10 கோடி ரூபாய்‌ செலவில்‌ வழங்கப்படும்‌. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌ மாற்றுத்திறனாளிகள்‌ நலனுக்காக 667.08 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டுள்ளது. இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாடு” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶170) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.94 · ¶170 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector