Education · dormant
State Skill Development Mission
3 budgets named it 4 year span 500 ₹ crore allocated AIADMK government
First announced in 2013-14 and named again in 2 later budgets, most recently 2016-17.
Allocated by budget year
See it on the map → All Education projects →
What each budget said, year by year
2013-14 Rs.100 crores
“The allocation of Rs.75 crores for State Skill Development Mission will be stepped up to Rs.100 crores in the coming financial year.” financedept_2013-14_speech_en · p.12 · ¶24 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.100 crore
“A sum of Rs.100 crore will be provided for this Mission in the year 2014-2015 also.”
“தொலைநோக்குப் பார்வை 2023-ன் இலக்கை எய்திட திறன் மேம்பாட்டிற்கு ஊக்கம் அளிப்பது இந்த அரசு பின்பற்றும் உத்திகளுள் ஒன்றாகும். உயர் இலக்குடன் செயல்பட்டு வரும் திறன் மேம்பாட்டு இயக்கத்திற்கு 2013-2014 ஆம் ஆண்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2014-2015 ஆம் ஆண்டிலும், இந்த இயக்கத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶68) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.35 · ¶68 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.150 crores
“In the Interim Budget Estimates Rs.150 crores has been provided for Skill Development Mission.”
“2023 ஆம் ஆண்டுக்குள் இரண்டு கோடி இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி அளிக்க வேண்டுமென தொலைநோக்குத் திட்டம் 20230 வகுக்கப்பட்டுள்ள இலக்கை எட்டுவதற்காக, ஒரு பெரும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. பல்வேறு திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வருவதற்காக, “மாநில திறன் மேம்பாட்டு இயக்கத்தை அமைத்து, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பயிற்சியளிக்கும் தகுதி வாய்ந்த நிறுவனங்களை அங்கீகரிக்கவும், பயிற்சித் திட்டத்தையும், உதவித் தொகையையும் முறைப்படுத்தவும் இந்நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிறுவனம் இதுவரை, 146.22 கோடி ரூபாய் செலவில் 2,89,721 நபர்களுக்கு திறன் பயிற்சி அளித்துள்ளது. இத்துடன், கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்த அரசு 142.40 கோடி ரூபாய் செலவில் 23 புதிய அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களை அமைத்துள்ளதோடு, 10.16 கோடி ரூபாய் செலவில் 47 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில், மொழி மற்றும் மென்திறன் வளர்க்கும் ஆய்வுக் கூடங்களையும் இந்த அரசு தொடங்கியுள்ளது. திறன் மேம்பாட்டு இயக்கத்திற்காக இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்மொழி வளர்ச்சி வருவாய்க் கணக்கில் செலவுகள் 2016-2017 ஆம் ஆண்டிற்கான வருவாய்க் கணக்கு செலவுகள் ரூ.161159.01 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2015-2016 ஆம் ஆண்டு திருத்த மதிப்பீட்டை விட 9.05 சதவீதம் கூடுதலாகும். வருவாய்க் கணக்கு செலவுகளின் முக்கிய கூறுகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன. © 2016-2017 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் சம்பள செலவினத்திற்கான ஒதுக்கீடு ரூ.47,261.92 கோடியாகும். ஓய்வூதியம் மற்றும் இதர ஒய்வுக்கால பலன்கள் குறித்த செலவினத்திற்கான ஒதுக்கீடு ரூ.19,840.81 கோடியாகும். இவ்வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் சம்பளம் மற்றும் ஒய்வூதியம் குறித்த செலவுகள் மொத்த வருவாய்ச் செலவுகளில் 41.64 சதவீதமாகும். அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு மற்றும் காலிப் பணியிடங்களை நிரப்புதல் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய செலவுகளின் காரணமாக, 2017-2018 மற்றும் 2018-2019 ஆம் ஆண்டுகளில் இதன் வளர்ச்சி விகிதம் முறையே 30 மற்றும் 10.50 சதவீதமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. 2017-2018 ஆம் ஆண்டு முதல் ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கருதப்படுவதன் அடிப்படையில் இவை கணிக்கப்பட்டுள்ளன. 2016-2017 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் மானியம் மற்றும் உதவித்தொகைக்கான ஒதுக்கீடு ரூ.62,382.40 கோடியாகும். உணவு மானியம், மின்சார மானியம், நியாய விலைக் கடைகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்தல், கல்வி உதவித் தொகைகள் முதலான பல்வேறு நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளைக் கருத்திற்கொண்டு இவ்வுயர் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் சொந்த வரிவருவாயின் வளர்ச்சிக் கணிப்பிற்கேற்ப உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிப்பகிர்வு கணிக்கப்பட்டுள்ளது. இதுபோன்றே, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு கூடுதல் மானியம் வழங்குவதும் மானியங்களுக்கான மொத்த ஒதுக்கீட்டு அளவை உயர்த்தியுள்ளது. 2017-2018 மற்றும் 2018-2019 ஆம் ஆண்டுகளில் இதன் வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. © 2016-2017 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் ஊதியம் அல்லாத செயல்முறை மற்றும் பராமரிப்பு செலவுகள் 10,361.59 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பராமரிப்பு, நிர்வாகச் செலவுகள், எரிபொருள் செலவுகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குதல் ஆகிய திட்டங்களால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. 2017-2018, 2018-2019 ஆம் ஆண்டுகளில் இதன் வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. © 2016-2017 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் வட்டி செலுத்துதல் ரூ.21304.48 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மொத்த வருவாய்ச் செலவுகளில் 13.22 சதவீதமாகும். 2016-2017 ஆம் ஆண்டிற்கான வட்டிச் செலவு மொத்த வருவாய் வரவில் 14.02 சதவீதமாகும். இது, 2017-2018 மற்றும் 2018-2019 ஆம் ஆண்டுகளிலும் 14 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 111, மூலதனக் கணக்கில் செலவுகள் 2016-2017 ஆம் ஆண்டில் மூலதனம் குறித்த செலவுகளை பெருமளவு உயர்த்த மாநில அரசு கருதியுள்ளது. அதன் விளைவாக, மூலதனம் குறித்த செலவுகளுக்கு 2015-2016 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீட்டில் செய்யப்பட்ட ஒதுக்கீடான ரூ.22,878.45 கோடி, 2016-2017 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூ.27,585.33 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 2017-2018 ஆம் ஆண்டில் 10.88 சதவீதம் மற்றும் 2018-2019 ஆம் ஆண்டில் 10.97 சதவீதமாகவும் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. IV. வருவாய்ப் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை 2016-2017 ஆம் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.9,154.78 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2017-2018 ஆம் ஆண்டிலிருந்து ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கருதுவதன் அடிப்படையில், அவ்வாண்டில் வருவாய்ப் பற்றாக்குறை ஏற்படும் என கணிக்கப்படுகிறது. 2016-2017 ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.36,740.11 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 2.92 சதவீதமாக இருக்கும். மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப் பற்றாக்குறை விகிதம் 2017-2018 ஆம் ஆண்டில் 3.30 சதவீதமாகவும், 2018-2019ல் 2.79 சதவீதமாகவும் இருக்கும். 2017-2018 ஆம் ஆண்டில் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளால் ஏற்படும் கூடுதல் செலவினங்களைச் சமாளித்து நிதிப் பற்றாக்குறையை நிர்ணயிக்கப்பட்ட 3 சதவீத அளவிலேயே கட்டுப்படுத்த வேண்டுமெனில், மாநில அரசு கூடுதல் நிதி ஆதாரத்தைத் திரட்டுவது அல்லது செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியமாகும். V. கடன் 2016-2017 ஆம் ஆண்டில் ரூ.37,782 கோடி அளவிற்கு கடன் திரட்டுவதற்கு மாநில அரசிற்கு அனுமதியுள்ளபோதிலும், கடன் வாங்குவதை கடந்த காலங்களைப் போல் கட்டுப்படுத்த அரசு உத்தேசித்துள்ளது. 2016-2017 ஆம் ஆண்டில் நிகர கடன் வாங்குதல் ரூ.35,129 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட நிலுவையிலுள்ள கடன் 31.03.2017 அன்று, ரூ.2,47,031 கோடியாக இருக்கும். இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 19.62 சதவீதம் மட்டுமே ஆகும். VI. கடன் உத்திரவாதங்கள் ஒவ்வொரு ஆண்டிலும் நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்கள் முந்தைய ஆண்டின் மொத்த வருவாய்க் கணக்கு வரவுகளில் 100 சதவீத அளவு அல்லது மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 10 சதவீத அளவு, இவற்றில் எது குறைவானதோ அந்த அளவிற்குள் அமையப்பெற வேண்டும். 31.3.2015 அன்று உள்ளபடி நிலுவையிலுள்ள அரசு உத்தரவாதங்களின் அளவு முந்தைய ஆண்டின் மொத்த வருவாய் வரவுகளில் 49.70 சதவீதமாகவும் மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 5.70 சதவீதமாகவும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும் மீளப்பெறும் சாத்தியக் கூறுகளின் அடிப்படையில் (Risk weighted) கணக்கிடப்பட்ட நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்கள் முந்தைய ஆண்டின் மொத்த வருவாய்க் கணக்கு வரவுகளில் 75 சதவீதம் அல்லது மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 7.50 சதவீதம் இவற்றில் எது குறைவானதோ அந்த அளவிற்குள் அமையப்பெற வேண்டும். 31.3.2015 அன்று உள்ளபடி மீளப்பெறும் சாத்தியக் கூறுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்களின் (Risk weighted guarantees) அளவு, முந்தைய ஆண்டின் மொத்த வருவாய் வரவுகளில் 9.28 சதவீதமாகவும் மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 106 சதவீதமாகவும் உள்ளது. முடிவுரை உலக பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்த நிலை, மாநில பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2012-2013 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வறட்சியானது, இத்தாக்கத்தின் அளவினை மேலும் அதிகரித்துள்ளது. 2012-2013 ஆம் ஆண்டில் 3.39 சதவீதம் வளர்ச்சி பெற்ற மாநில மொத்த உற்பத்தி மதிப்பானது, 2014-2015 ஆம் ஆண்டில் (2004-2005 ஆம் ஆண்டின் நிலையான விலையில்) 7.25 சதவீதமாக வளர்ச்சி பெற்றுள்ளது. நடப்பாண்டில், மாநில மொத்த உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி, 2011-2012 ஆம் ஆண்டின் நிலையான விலையில், 9.13 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனை வரி, குறிப்பாக, பெட்ரோலிய பொருட்களின் விற்பனை மூலம் பெறப்படும் வரி குறைந்துள்ளதே, மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் குறிப்பிடத்தக்க அளவிற்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கு காரணமாகும். மேலும், மத்திய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய நிகர வரி வருவாயில் தமிழகத்தின் பங்கு குறைந்ததும், மத்திய அரசால் காலம் தாழ்த்தி உதவி மானியங்கள் விடுவிக்கப்படுவதும், மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு தனது பங்கினை குறைத்துள்ளதும் மாநிலத்தின் நிதிநிலைய பாதித்துள்ளது. எனினும், செலவுகள் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளன; செலவுகளின் பாங்கும் நிலையாக உள்ளது. 2017-2018 ஆம் ஆண்டு முதல் ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கருதப்படுவதன் அடிப்படையில், அந்த ஆண்டைத் தவிர்த்து, ஏனைய ஆண்டுகளில், ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை, நிகர கடன், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் கடன் விகிதம் ஆகியவை, வருவாய் வரவுகளில் சுணக்கம் உள்ள நிலையிலும், அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கட்டுப்படுத்தப்படும் மாநில பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல, அரசு அனைத்து வகையான நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶11) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.9 · ¶11 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.150 crores
“During 2016-2017, it is proposed to train two lakh youth for skill development under this Mission. A sum of Rs.150 crores has been earmarked in the Revised Budget Estimates 2016-2017 for the 'Tamil Nadu Skill Development Mission'.” tnbudget_2016-17_speech_en_revised · p.7 · ¶9 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- First-generation graduate education fees · 10 years
- Free school uniforms and footwear · 9 years
- School infrastructure (259 schools) · 9 years
- Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) · 8 years
- Sarva Shiksha Abhiyan school infrastructure · 8 years
- Cash incentives to school students · 8 years