Welfare · dormant

Student retention incentive (10th to +2)

1 budget named it 1 year span ₹ crore allocated 394 ₹ crore whole-project cost AIADMK government

First announced in 2011-12 and not named in any budget since.

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2011-12 ` 394.04 crores new project project cost AIADMK · revised

“This is expected to benefit 24,94,649 students annually with a total outlay of ```` 394.04 crores.”
“தொடக்கக்‌ கல்வி நிலையில்‌ மாணவர்‌ சேர்க்கை உயர்ந்து வருவதால்‌ மேனிலைக்‌ கல்வி நிலையிலும்‌ மாணவர்‌ சேர்க்கை உயர்ந்து வருகிறது. மேனிலைக்‌ கல்வியின்‌ தரத்தையும்‌, உள்கட்டமைப்பு வசதிகளையும்‌ மேம்படுத்துவதற்காக, 2009-2010 ஆம்‌ ஆண்டு முதல்‌ தேசிய இடைநிலைக்‌ கல்வித்‌ திட்டம்‌ (Rashtriya Madhyamik Shiksha Abhiyan) செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, இத்திட்டம்‌, நடுநிலைப்‌ பள்ளிகளை உயர்‌ நிலைப்‌ பள்ளிகளாகத்‌ தரம்‌ உயர்த்துவதையும்‌ இடைநிலைக்‌ கல்வியின்‌ தரத்தை உயர்த்துவதற்காக தற்போதுள்ள இடைநிலைப்‌ பள்ளிகளின்‌ கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதையும்‌ நோக்கமாகக்‌ கொண்டுள்ளது. இத்திட்டத்தைச்‌ செயல்படுத்துவதற்காக 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ 150 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2009-2010 ஆம்‌ ஆண்டில்‌ மேனிலைப்‌ பள்ளிகளில்‌ இடைநிற்றல்‌ விகிதம்‌ 1.39 விழுக்காடாக இருந்தது. மேனிலைப்‌ பள்ளிகளிலிருந்து இடை நிற்றலை இன்னும்‌ குறைப்பதற்கு பத்தாம்‌ வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம்‌ வகுப்புவரை பயிலும்‌ அனைத்து மாணவர்களுக்கும்‌ ஒரு சிறப்பு ஊக்கத்‌ தொகை வழங்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. அரசு பள்ளிகள்‌, அரசு உதவி பெறும்‌ பள்ளிகள்‌ ஆகியவற்றில்‌ பத்தாம்‌ வகுப்பு, மேனிலை முதலாம்‌ ஆண்டு பயிலும்‌ மாணவ மாணவியர்களுக்கு தலா 1,500 ரூபாயும்‌, மேனிலை இரண்டாம்‌ ஆண்டு படிக்கும்‌ மாணவ மாணவியர்களுக்கு தலா 2,000 ரூபாயும்‌ ஊக்கத்‌ தொகையாக மாநில அரசால்‌ வழங்கப்படும்‌. இத்தொகை மாணவ மாணவியர்களின்‌ பெயரில்‌ மின்விசை நிதி நிறுவனம்‌ போன்ற பொதுத்‌ துறை நிதி நிறுவனங்களில்‌ வைப்புத்‌ தொகையாக வைப்பீடு செய்யப்பட்டு, அவர்கள்‌ பள்ளிப்‌ படிப்பை முடிக்கும்‌ பொழுது அத்தொகை அவர்களுக்கு வழங்கப்படும்‌. இத்திட்டத்தின்‌ கீழ்‌ 394.04 கோடி ரூபாய்‌ ஒதுக்கீட்டில்‌ 24,94,649 மாணவ மாணவியர்‌ பயன்பெறுவார்கள்‌. இத்திட்டத்தின்‌ மூலம்‌ மேனிலைப்‌ பள்ளிகளில்‌ இடைநிற்றல்‌ விகிதம்‌ மேலும்‌ குறையும்‌ என நம்புகிறேன்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶82) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2011-12_speech_en_revised · p.50 · ¶82 · source PDF ↗ · full speech ↗ · on the map →

Nearby in the same sector