Transport · dormant

Tamil Nadu Rural Roads Improvement Scheme (TNRRIS)

2 budgets named it 2 year span 800 ₹ crore allocated AIADMK government

First announced in 2016-17 and named again in 1 later budget, most recently 2017-18.

Allocated by budget year

See it on the map → All Transport projects →

What each budget said, year by year

2016-17 continuation AIADMK · revised

“The 'Tamil Nadu Rural Roads Improvement Scheme' (TNRRIS), launched in 2015-2016 to take up works relating to improvement of road infrastructure, will be continued during 2016-2017 by dovetailing funds from various schemes.”
“ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கட்டமைப்பு மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌” (Comprehensive School Infrastructure Development Scheme) கீழ்‌, கிராமப்புறப்‌ பகுதிகளிலுள்ள ஆரம்ப மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ புதிய கட்டடங்கள்‌, சமையற்‌ கூடங்கள்‌, குடிநீர்‌ வழங்கல்‌, கழிவறைகள்‌ முதலான அடிப்படை உட்கட்டமைப்புகள்‌ ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 2016-2017 ஆம்‌ ஆண்டில்‌ 100 கோடி ரூபாய்‌ செலவில்‌ இத்திட்டம்‌ தொடர்ந்து மேற்கொள்ளப்படும்‌. பல்வேறு திட்ட நிதிகளை ஒருங்கிணைத்து சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான பணிகளை மேற்கொள்ள, 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌ துவங்கப்பட்ட தமிழ்நாடு ஊரக சாலைகள்‌ மேம்பாட்டுத்‌ திட்டம்‌”, 2016-2017 ஆம்‌ ஆண்டிலும்‌ தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌. 2015-2016 ஆம்‌ ஆண்டில்‌, பிரதம மந்திரி கிராமப்புற சாலைகள்‌ திட்டத்தின்‌” (PMGSY) ஒன்பதாவது கட்டப்‌ பணிகள்‌ 357.12 கோடி ரூபாய்‌ செலவில்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ நிலையில்‌, இத்திட்டத்தின்‌ பத்தாவது கட்டப்‌ பணிகளாக 758.44 கோடி ரூபாய்‌ செலவில்‌ 573 சாலைகளின்‌ மேம்பாட்டுப்‌ பணிகளும்‌, 22 பாலப்‌ பணிகளும்‌ நடப்பு ஆண்டில்‌ மேற்கொள்ளப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶90) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2016-17_speech_en_revised · p.45 · ¶90 · source PDF ↗ · full speech ↗ · on the map →

2017-18 Rs.800 crore continuation AIADMK

“In the Budget Estimates 2017-2018, Rs.758 crore has been provided under PMGSY and Rs.800 crore will be pooled from various ongoing schemes under Tamil Nadu Rural Roads Improvement Scheme for road works.”
“பிரதம மந்திரி கிராமப்புறச்‌ சாலைகள்‌ திட்டத்தின்‌” (Pradhan Manitri Gram Sadak Yojana) பதினொன்றாவது கட்டப்‌ பணிகளின்‌ கீழ்‌, 792 சாலைகள்‌ மற்றும்‌ 12 பாலங்களை மேம்படுத்தவும்‌, தரம்‌ உயர்த்துவதற்குமான பணிகளையும்‌ இந்த அரசு மேற்கொள்ளும்‌. 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, பிரதம மந்திரி கிராமப்புறச்‌ சாலைகள்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 758 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊரகச்‌ சாலைகள்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ (Tamil Nadu Rural Roads Improvement Scheme) கீழ்‌ சாலைப்‌ பணிகளுக்காக, தற்போது செயல்படுத்தப்பட்டு வரும்‌ பல்வேறு திட்டங்களிலிருந்து 800 கோடி ரூபாய்‌ ஒருங்கிணைக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶85) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2017-18_speech_en · p.49 · ¶85 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector