Education · dormant
Tamil Nadu Skill Development Mission (TNSDM)
3 budgets named it 8 year span 275 ₹ crore allocated AIADMK government
First announced in 2011-12 and named again in 2 later budgets, most recently 2018-19.
Allocated by budget year
See it on the map → All Education projects →
What each budget said, year by year
2011-12
“The programme aims to train about 1.50 lakh youth in soft and technical skills during the year 2011-2012.”
“மாநில அரசு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம் (Tamil Nadu Skill Development Mission) மூலமாக தனியார் தொழில் நிறுவனங்களோடு இணைந்து வேலைவாய்ப்புக்குரிய திறன் தேவையில் உள்ள குறைவைக் கண்டறிந்து, அதற்கேற்ப சான்றிதழ் அடிப்படையில் வேலைவாய்ப்புக்கு உகந்த பயிற்சிகளை (Modular Employable Skill) வழங்கும் பாடத்திட்டங்களை வடிவமைக்கும். அரசு கலை-அறிவியல் கல்லூரிகளிலும் அரசு உதவி பெறும் கலை-அறிவியல் கல்லூரிகளிலும் மென்திறன் பயிற்சியும், வாழ்வாதாரத் தொழிற் பயிற்சி (vocational training) வழங்கும் அமைப்புகள் மூலமாக, அனைத்து அரசு தொழில் பயிற்சி நிறுவனங்களில் தொழில் திறன் பயிற்சியும் வழங்கப்படும் இத்தகைய பயிற்சிகள் மூலமாக, 2011-2012 ஆம் ஆண்டில் 1.5 இலட்சம் இளைஞர்கள் மென்திறன், தொழில்நுட்பத் திறன் போன்றவற்றைப் பெறுவார்கள். திறன் மிகுந்த பயிற்சியாளர்களை தொடர்ந்து உருவாக்கும் நோக்குடன் பயிற்றுவிப்போர் திறன் மேம்பாட்டு நிறுவனம் (Faculty Development Institution) ஒன்றை தனியார் தொழில் நிறுவனங்களுடன் அரசு இணைந்து உருவாக்கும். தமிழ்நாடு மாநிலத் திறன் பதிவுத்தொகுப்பு (Tamil Nadu State Skill Registry) தொடங்கப்பட்டு, அதன்மூலம், நமது மாநிலத்தில் தொழில் திறன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு பராமரிக்கப்படும். முதற்கட்டமாக அரசு தொழில்நுட்பப் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றவர்கள் விவரங்களும், வேலைவாய்ப்புக்கு உகந்த பயிற்சி (Modular Employable Skill) மூலம் திறன் வளர்ப்புப் பயிற்சி பெற்றவர்கள் விவரங்களும் பதிவு செய்யப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶59) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.37 · ¶59 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2012-13 Rs.75 crores
“The Tamil Nadu Skill Development Mission which is currently being implemented through a society, will be reorganized as a Special Purpose Vehicle (SPV) with participation from the private sector as well. We have set apart Rs.75 crores in the Budget Estimates for 2012-2013 for providing such skill training through different departments.”
“வேகமான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக திறனுள்ள பணியாளர்களுக்கான தேவை பெருமளவு அதிகரித்துள்ள போதிலும், நமது மாநிலத்தில் உள்ள படித்த இளைஞர்களிடையே வேலையின்மையும், முழுமையான வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறாத நிலையும் பரவலாகக் காணப்படுகின்றன. தொழில்நுட்பத் தகுதி பெற்றுள்ள நமது படித்த இளைஞர்களில் பலர் மென் திறன்களிலும், வேலைவாய்ப்புக்கேற்ற தொழில் சார்ந்த திறன்களிலும் குறைபாடு உள்ளவர்களாக இருப்பதால்தான் அவர்களால் தனியார் துறையில் போதிய வேலைவாய்ப்புகளைப் பெற இயலுவதில்லை. அடுத்த 15 ஆண்டுகளில் ஏற்படக்கூடிய திறன்மிக்க பணியாளர்களின் தேவையில் உள்ள இடைவெளியை ஆய்ந்து பார்க்கும்போது, சுமார் இரண்டு கோடி திறன்மிக்க பணியாளர்கள் தேவைப்படுவர் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கென, நமது மாநில இளைஞர்களுக்கு திறன் உருவாக்கும் பயிற்சியும், திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிப்பது அவசியமாகின்றன. இந்தக் கடினமான பணியை முனைப்போடு செயல்படுத்த இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. வரும் நிதியாண்டிலிருந்து தற்போது பல்வேறு துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டுவரும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் அனைத்தையும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் கொண்டுவந்து, ஒருங்கிணைத்து செயல்படுத்த உள்ளோம். தொழில்களுக்குத் தேவையான திறன்களை உருவாக்க, சூழலுக்கேற்ப மாற்றியமைக்கத்தக்க புதுமையான உத்திகளை உள்ளடக்கி, பயிற்சித் திட்டங்களை வடிவமைத்தல், சான்றிதழ் வழங்குதல், கல்வியுடன், வேலைக்கான பயிற்சியையும் இணைத்தல் போன்றவற்றைத் தனியார் துறையுடன் இணைந்து அரசு செயல்படுத்தும். இதற்கென ஏற்கெனவே உருவாக்கப்பட்ட சங்கம் மாற்றியமைக்கப்பட்டு தனியார் துறையின் பங்களிப்புடன்கூடிய ஒரு சிறப்பு நிறுவன அமைப்பு ஏற்படுத்தப்படும். பல்வேறு துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டுவரும் இத்தகைய திறன் பயிற்சிகளுக்காக, 2012-2013 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளது. இளைஞர்கள், வேலைவாய்ப்பை நாடுவோர், வேலைவாய்ப்பை அளிப்போர், பெரும் எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு வருவதை கருத்தில் கொண்டு, தனியார் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதற்காக 32 மாவட்டங்களிலும் 37 மாவட்ட அளவிலான உதவி மையங்களை 193.2 இலட்சம் ரூபாய் செலவில் இந்த அரசு அமைக்கும். ஆளுகை”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶15) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.11 · ¶15 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.200 crore
“The allocation for TNSDM will be enhanced from Rs.150 crore to Rs.200 crore in 2018-2019 to give further impetus to skill development.”
“தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கத்தைச் செயல்படுத்தும் முகமையாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தை இந்த அரசு உருவாக்கியுள்ளது. இந்த இயக்கத்தின் கீழ், இதுவரை 4.32 இலட்சம் இளைஞர்கள் திறன் வளர் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களில் 103 இலட்சம் இளைஞர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சீமென்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் உயர்மட்டத் திறன் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டுத் திட்டம் மூலமும் திறன் வளர் பயிற்சியை இந்த அரசு வழங்கி வருகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கத்திற்கான நிதி ஒதுக்கீடு 150 கோடி ரூபாயிலிருந்து 200 கோடி ரூபாயாக வரும் நிதியாண்டில் உயர்த்தப்படும். 2018-2019 ஆம் ஆண்டில், பல்வேறு திட்டங்களின் நிதிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு கூடுதலாக இரண்டு இலட்சம் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (Overseas Manpower Corporation), தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பினைத் தேடும் இளைஞர்களுக்கு உரிய தொழில்நுட்பத் திறனுடன் மென்திறன் பயிற்சிகளையும் வழங்கி, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் பண்பாடு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶14) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.10 · ¶14 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- First-generation graduate education fees · 10 years
- Free school uniforms and footwear · 9 years
- School infrastructure (259 schools) · 9 years
- Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) · 8 years
- Sarva Shiksha Abhiyan school infrastructure · 8 years
- Cash incentives to school students · 8 years