Urban · dormant
Tamil Nadu Urban Flagship Investment Programme (TNUFIP)
4 budgets named it 4 year span 1,277 ₹ crore allocated 8,156 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2018-19 and named again in 3 later budgets, most recently 2021-22. Places named: Madurai, Coimbatore, Vellore, Tiruchirappalli, Tirunelveli, Tiruppur, Ambur, Rajapalayam.
Allocated by budget year
Located at Madurai · Madurai district
See it on the map → All Urban projects →
What each budget said, year by year
2018-19 Rs.4,790 crore
“The State will also be implementing the 'Tamil Nadu Urban Flagship Investment Programme' (TNUFIP) with the assistance of Asian Development Bank (ADB) at an estimated cost of Rs.4,790 crore for supporting urban local bodies to meet their financial commitments under the AMRUT scheme.”
“நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் பங்குத் தொகையினை வழங்கி, அம்ருத் திட்டத்தினைச் செயல்படுத்திட, 4,790 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 'தமிழ்நாடு நகர்ப்புர முன்னோடி முதலீட்டுத் திட்டத்தினை (Tamil Nadu Urban Flagship Investment Programme) மாநில அரசு செயல்படுத்தும். இந்தத் திட்டத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி விரைவில் தனது ஒப்புதலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு முதல், உலக வங்கி நிதியுதவியுடன், தமிழ்நாடு நிலையான நகர்ப்புர வளர்ச்சித் திட்டத்தை (TNSUDP) 3,831 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், இதுவரை 13 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில், 854.59 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், “தமிழ்நாடு நிலையான நகர்ப்புர வளர்ச்சித் திட்டத்திற்கு” 712.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2018-2019 ஆம் ஆண்டில், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நபார்டு வங்கி நிதியுதவியுடன், பேரூராட்சிகளில் உள்ள 400 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளைத் தரம் உயர்த்துவதற்கான மேம்பாட்டுப் பணிகளை இந்த அரசு செயல்படுத்தும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶81) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.49 · ¶81 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.8,155.81 crore
“The TNUFIP is being implemented by the State Government with the assistance of ADB at an estimated cost of Rs.8,155.81 crore for supporting urban local bodies to meet their share of financial commitments under the AMRUT scheme.”
“திறன்மிகு நகரங்கள் மற்றும் அட்டல் நகர்ப்புர புத்துணர்வு மற்றும் நகர்ப்புர மாற்றங்களுக்கான (அம்ருத்) திட்டங்களை தமிழ்நாடு செம்மையாகச் செயல்படுத்தி வருகிறது. திறன்மிகு நகரங்கள்” திட்டத்தின் கீழ், 11776 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 326 திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டில், இத்திட்டத்திற்காக 1650 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்ருத் திட்டத்தில் 445 பணிகள் 11,441.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 8,155.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் நகர்ப்புர முன்னோடி முதலீட்டுத் திட்ட நிதியிலிருந்து அம்ருத் திட்டத்திற்குத் தேவைப்படும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கான பங்குத் தொகை வழங்கப்படுகிறது. 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், அம்ருத் திட்டத்திற்காக 1,450 கோடி ரூபாயும், “தமிழ்நாடு நகர்ப்புர முன்னோடி முதலீட்டுத் திட்டத்திற்காக” 302 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சி இயக்கத்திற்காக 750 கோடி ரூபாயும், சென்னைப் பெருநகர வளர்ச்சி இயக்கத்திற்காக 500 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶57) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.34 · ¶57 · source PDF ↗ · on the map →
2020-21 Rs.406 crore
“The Tamil Nadu Urban Flagship Investment Programme at a total cost of Rs.8,155.81 crore with assistance from the Asian Development Bank will support the State in developing urban and environmental infrastructure in strategic industrial corridors. Underground sewerage and water supply schemes in Madurai, Coimbatore, Vellore, Tiruchirapalli, Tirunelveli, Tiruppur, Ambur and Rajapalayam are funded under the project and the total provision in the Budget Estimates 2020-21 is Rs.406 crore.”
“உலகவங்கி நிதியுதவியுடன், 3,831 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு நீடித்த நகர்ப்புர வளர்ச்சித் திட்டத்தின் (Tamil Nadu Sustainable Urban Development Project (TNSUDP)) கீழ் ஈரோடு, வேலூர் மற்றும் ஒசூர் ஆகிய நகரங்கள் திறன்மிகு நகர்ப்புர மேலாண்மைக்கான மாதிரி நகரங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில், இத்திட்டத்திற்காக 532.54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த தொழில் வழித்தடங்களில் நகர்ப்புர மற்றும் சுற்றுச்சூழல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட, ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன், 8,155.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு நகர்ப்புர முதலீட்டுத் திட்டம் (Tamil Nadu Urban_ Flagship Investment Programme (TNUFIP)) பெரிதும் உதவும். இத்திட்டத்தின் கீழ், மதுரை, கோயம்புத்தூர், வேலூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பூர், ஆம்பூர் மற்றும் இராஜபாளையம் ஆகிய இடங்களில், பாதாள சாக்கடைத் திட்டம் மற்றும் குடிநீர் வழங்கல் திட்டம் ஆகியவற்றைச் செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 2020-21 ஆம் ஆண்டிற்கு இத்திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு 406 கோடி ரூபாய் ஆகும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶82) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2020-21_speech_en · p.46 · ¶82 · source PDF ↗ · on the map →
2021-22 Rs.871.31 crore
“The Tamil Nadu Urban Flagship Investment Program (TNUFIP) with ADB assistance of USD 502 million spread over 3 phases to develop priority water supply, sewerage and drainage infrastructure along strategic industrial corridors is currently under implementation. In the Interim Budget Estimates for 2021-22 a total amount of Rs.871.31 crore has been provided for this project.”
“2015ஆம் ஆண்டிலிருந்து, மொத்தம் 3,831 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு நிலைக்கத்தக்க நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் (TNSUDP), உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதியுடன் நிறைவடையும். இத்திட்டத்தில் ஏற்பட்ட 32 மில்லியன் அமெரிக்க டாலர் சேமிப்பில், சென்னையின் முக்கிய பகுதிகளில் விடுபட்டுப்போன மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில், குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய் அமைத்த காரணத்தால் சேதமடைந்த சாலைகளை மேம்படுத்துதல் உட்பட 2 துணைத் திட்டங்களை கூடுதலாக மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களுக்கான ஒப்புதலை உடனடியாக அளிக்குமாறு மத்திய அரசிடம் கோரியுள்ளோம். முக்கியமான தொழில் வழித்தடங்களில், முன்னுரிமை அடிப்படையில் குடிநீர் வழங்கல், கழிவுநீர் மற்றும் வடிகால் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 3 கட்டங்களில் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் 502 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் தமிழ்நாடு நகர்ப்புற முதன்மை முதலீட்டுத் திட்டம் (TNUFIP) தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2021-22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்காக மொத்தம் 87131 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் கொசஸ்தலையாறு வடிநிலத்தில் ஒருங்கிணைந்த வெள்ளநீர் வடிகால் வலையமைப்புத் திட்டம் நடப்பாண்டில் 3,220 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்காக 287 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கனவான குடிசைகள் இல்லாத நகரங்கள் என்னும் நிலையை அடைவதற்கு இந்த அரசு கடினமாக உழைத்து வருகிறது. 2011 முதல் 2020 ஆம் ஆண்டு வரையில், பல்வேறு திட்டங்களின் கீழ், 12,248 கோடி ரூபாய் மதிப்பில் 1.09 இலட்சம் அடுக்குமாடிக் குடியிருப்புகளும், 2.27 இலட்சம் தனி வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தற்போது கட்டப்பட்டு வரும் 1.25 இலட்சம் அடுக்குமாடிக் குடியிருப்புகளும், விரைவில் கட்டி முடிக்கப்படும். 2021-22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்திற்கு (நகர்ப்புறம்) 3,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶76) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2021-22_speech_en_interim · p.48 · ¶76 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Chennai Mega City Development Mission · 10 years
- Integrated Urban Development Mission · 10 years
- Tamil Nadu Sustainable Urban Development Project · 8 years
- Smart Cities Scheme · 8 years
- Tamil Nadu Urban Livelihood Mission · 7 years
- Urban solid waste management projects · 7 years