Culture & tourism · completed claimed

Temple renovation works

3 budgets named it 11 year span 633 ₹ crore allocated DMK / AIADMK governments

First announced in 2011-12 and named again in 2 later budgets, most recently 2021-22.

Allocated by budget year

See it on the map → All Culture & tourism projects →

What each budget said, year by year

2011-12 ` 523 crores completion claim DMK · interim

“From 2006 onwards, this Government has completed temple renovation works worth ` 523 crores. 4,724 temples have been renovated and consecrated.”
“2006 ஆம்‌ ஆண்டிலிருந்து இதுவரை ரூபாய்‌ 523 கோடி செலவில்‌ ஆலயத்‌ திருப்பணிகளும்‌, கட்டுமானப்‌ பணிகளும்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. 4,724 திருக்கோயில்களுக்குத்‌ திருப்பணிகள்‌ செய்யப்பட்டு, குடமுழுக்குவிழா நடத்தப்பட்டுள்ளது. திருவாரூர்‌ அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலின்‌ பழைமையான ஆழித்‌ தேரினைச்‌ சீரமைக்க ரூபாய்‌ 2.6 கோடி அளிக்கப்பட்டு, பணிகள்‌ நடைபெற்று வருகின்றன. ஆதிதிராவிடர்‌ வாழும்‌ குடியிருப்புப்‌ பகுதிகளில்‌ உள்ள 6,000 திருக்கோயில்களின்‌ திருப்பணிகளுக்கு, ரூபாய்‌ 15 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அர்ச்சகர்‌ மற்றும்‌ பூசாரிகளுக்கு ரூபாய்‌ 277 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌, 10 ஆயிரம்‌ மிதிவண்டிகள்‌ வழங்கப்பட்டுள்ளன. 2011-2012 ஆம்‌ ஆண்டில்‌ ரூபாய்‌ 100 கோடி மதிப்பீட்டில்‌ ஆயிரம்‌ திருக்கோயில்களின்‌ திருப்பணிகளை முடித்து குடமுழுக்கு விழாக்கள்‌ நடத்தப்பட உள்ளன. கலை மற்றும்‌ பண்பாடு” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶40) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2011-12_speech_en_interim · p.17 · ¶40 · source PDF ↗ · on the map →

2012-13 continuation AIADMK

“During 2011-2012, 1006 temples have been renovated and consecrated. Similarly, in the coming year also, 1006 temples are selected for consecration.”
“கோயில்கள்‌, வழிபாட்டுத்‌ தலங்களை பாதுகாத்து பராமரிக்க இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும்‌ எடுத்து வருகிறது. 2011-2012 ஆம்‌ ஆண்டு 1006 திருக்கோயில்கள்‌ புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளன. இதே போன்று, வரும்‌ ஆண்டிலும்‌ 1,006 கோயில்கள்‌ தெரிவுசெய்து குடமுழுக்கு செய்யப்படும்‌. தவறாக வகைமாற்றம்‌ செய்யப்பட்ட மற்றும்‌ ஆக்கிரமிக்கப்பட்ட கோயில்‌ சொத்துகளை மீட்பதற்கான முயற்சிகள்‌ எடுக்கப்பட்டு வருகின்றன. கோயில்‌ சொத்துகளை விரைந்து மீட்பதற்காகவும்‌, கோயில்‌ நிலங்கள்‌ குறித்த வழக்குகளை தீர்ப்பதற்காகவும்‌ அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வருவாய்‌ இலகுகளும்‌, வருவாய்‌ நீதிமன்றங்களும்‌ மேலும்‌ வலுப்படுத்தப்படும்‌. மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ சிந்தையில்‌ உதித்த உன்னதத்‌ திட்டமாகிய 'அன்னதானத்‌ திட்டம்‌” தற்போது 468 திருக்கோயில்களில்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம்‌ 2012-2013 ஆம்‌ ஆண்டில்‌ மேலும்‌ 50 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்‌. இத்திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌ அனைத்துக்‌ கோயில்களிலும்‌, பக்தர்களுக்கு சுகாதாரமான உணவு அளிக்கும்‌ வகையில்‌, சமையற்கூடங்கள்‌ நவீனப்படுத்தப்படும்‌. ஸ்ரீரங்கம்‌ அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலிலும்‌, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலிலும்‌, காலை 8 மணி முதல்‌ இரவு 10 மணி வரை நாள்‌ முழுவதும்‌ தொடர்ந்து அன்னதானம்‌ அளித்திட மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஆணையிட்டுள்ளார்கள்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶78) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2012-13_speech_en · p.51 · ¶78 · source PDF ↗ · on the map →

2021-22 Rs.109.65 crore continuation AIADMK · interim

“1,409 temples have been provided with Rs.109.65 crore for renovation work from the HR&CE Common Good Fund.”
“2011 ஆம்‌ ஆண்டு மே மாதத்திலிருந்து, 754 திருக்கோயில்களில்‌ அன்னதானத்‌ திட்டம்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2011 ஆம்‌ ஆண்டிலிருந்து 11,454 திருக்கோயில்களில்‌ 550.60 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ திருக்குடமுழுக்கு விழாக்கள்‌ நடத்தப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர்‌ குடியிருப்புப்‌ பகுதிகளில்‌ உள்ள 7,159 திருக்கோயில்களை புனரமைக்க 53.39 கோடி ரூபாய்‌ நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 'ஒரு கால பூஜை” திட்டத்தின்‌ கீழ்‌ தற்போது மொத்தம்‌ 12,959 திருக்கோயில்கள்‌ பயன்‌ பெற்று வருகின்றன. இந்துசமயம்‌ மற்றும்‌ அறநிலையங்கள்‌ துறையின்‌ பொது நல நிதியிலிருந்து 1,409 திருக்கோயில்களின்‌ புனரமைப்புப்‌ பணிகளுக்காக 109.65 கோடி ரூபாய்‌ வழங்கப்பட்டுள்ளது. 1234 திருக்கோயில்களுக்குச்‌ சொந்தமான 8,163.26 ஏக்கர்‌ நிலங்கள்‌ ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டு, அவற்றின்‌ பட்டாக்கள்‌ அத்திருக்கோயில்களின்‌ பெயரிலேயே மாற்றம்‌ செய்யப்பட்டுள்ளன. மானசரோவர்‌ மற்றும்‌ முக்திநாத்‌ ஆகிய புனித தலங்களுக்குச்‌ செல்வதற்கான மானியங்கள்‌ அரசால்‌ வழங்கப்பட்டு வருகின்றன. சமூக நலன்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶116) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

tnbudget_2021-22_speech_en_interim · p.72 · ¶116 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector