Industry · dormant
Three percent Interest Subvention Programme (MSME)
3 budgets named it 4 year span 49 ₹ crore allocated AIADMK government
First announced in 2013-14 and named again in 2 later budgets, most recently 2016-17.
Allocated by budget year
See it on the map → All Industry projects →
What each budget said, year by year
2013-14 Rs.25 crores
“Similarly, Rs.25 crores is allocated for the three percent Interest Subvention Programme to benefit MSME through the Tamil Nadu Industrial Investment Corporation (TIIC) and banks.”
“புதிய தொழில் முனைவோர் - தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம் 2012-2013 ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயிற்சி மற்றும் ஆலோசனை உதவிகளோடு, முதலீடுகளுக்கு 25 சதவீத முதலீட்டு மானியத்தையும் அரசு வழங்கி வருகிறது. 2013-2014 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில், இதற்கென 100 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளதோடு, இதில் 50 சதவீதம் மகளிர் தொழில் முனைவோருக்காக தனி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மற்றும் வங்கிகள் மூலமாக, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குப் பலன் அளிக்கும் மூன்று சதவீத வட்டி மானியத் திட்டத்திற்காக, 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶72) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2013-14_speech_en · p.30 · ¶72 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.12 crores
“A sum of Rs.80 crores as capital subsidy, Rs.42 crores as generator subsidy, Rs.12 crores as interest subvention and Rs.60 crores as infrastructure support for new industrial estates are provided for the year 2015-2016.”
“குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை, 63.18 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி தமிழகத்தின் பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு அதிகபட்சம் முப்பது இலட்சம் ரூபாய் வரை 25 சதவீத முதலீட்டு மானியத்தையும், 3 சதவீத அளவிற்கான வட்டி மானியத்தையும் இந்த அரசு வழங்கி வருகிறது. தனியார் தொழில் குழுமங்களின் கட்டமைப்பை மேம்படுத்தவும் இந்த அரசு உதவியளித்து வருகிறது. தொழில் முனைவோருக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்க பெரிய தொழிற்சாலைகளுக்கென ஏற்படுத்தப்படவுள்ள ஒற்றைச் சாளர முதலீட்டாளர்கள் வளைதளப் பகுதியைப் போன்றே இத்துறைக்கு இத்தகைய வசதியை 2015-2016 ஆம் ஆண்டில் இந்த அரசு ஏற்படுத்தும். 2015-2016 ஆம் ஆண்டில் மூலதன மானியமாக 80 கோடி ரூபாயும், மின்னாக்கி மானியமாக 42 கோடி ரூபாயும், வட்டி மானியமாக 12 கோடி ரூபாயும், புதிய தொழிற்பேட்டைகளுக்கான கட்டமைப்பு நிதியுதவியாக 60 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶58) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.37 · ¶58 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.12 crores
“For the year 2016-2017, Rs.12 crores and Rs.60 crores have been allocated for interest subvention and infrastructure support respectively.”
“குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெறும் கடன்களுக்கு மூன்று சதவீத வட்டி மானியம் வழங்குவதுடன், அதிகபட்சமாக 30 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் 25 சதவீதம் முதலீட்டு மானியத்தையும் இந்த அரசு தொடர்ந்து வழங்கும். தொழிற் கூட்டமைப்புகளின் மூலமாக உருவாக்கப்படும் தனியார் தொழிற் குழுமங்களை ஊக்குவித்து, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட அரசு தொடர்ந்து நிதியுதவி அளிக்கும். 2016-2017 ஆம் ஆண்டிற்கு, வட்டி மானியத்திற்காக 12 கோடி ரூபாயும், கட்டமைப்பிற்கான நிதியுதவியாக 60 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶82) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.42 · ¶82 · source PDF ↗ · full speech ↗ · on the map →
Nearby in the same sector
- New Entrepreneur-cum-Enterprise Development Scheme (NEEDS) · 11 years
- Handloom sale rebate subsidy · 8 years
- Industrial Growth Corridor (Madurai–Thoothukudi) · 6 years
- New Industrial Policy 2011 · 5 years
- Rebate to Khadi and Sarvodaya Societies · 5 years
- MSME Cluster Development Programme · 4 years