Urban · announced once

Urban road upgradation 2025-26

1 budget named it 1 year span — ₹ crore allocated 3,750 ₹ crore whole-project cost DMK government

First announced in 2025-26 and not named in any budget since.

This scheme continues an earlier one under a new name: Urban streets and street lighting upgrade (2021-22). Budget speeches almost never announce a rename, so this link is inferred from the two schemes' descriptions and timing rather than stated in the documents.

See it on the map → All Urban projects →

What each budget said, year by year

2025-26 Rs.3,750 crore continuation project cost DMK

“In the year 2025-26, roads measuring a length of 6,483 km in all Corporations, Municipalities and Town Panchayats in Tamil Nadu will be upgraded at an estimated cost of Rs.3,750 crore by converging various funds. Under this scheme, in particular, roads to an extent of 570 km will be taken up at a cost of Rs.486 crore in Greater Chennai Corporation, Rs.200 crore in Coimbatore Corporation and Rs.130 crore in Madurai Corporation.”
“2025-26-ஆம்‌ ஆண்டில்‌ பல்வேறு திட்ட நிதிகளைத்‌ திரட்டி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும்‌ பேரூராட்சிகளில்‌ 6,483 கி.மீ. நீளமுள்ள சாலைகள்‌ 3,750 கோடி ரூபாய்‌ மதிப்பிட்டில்‌ தரம்‌ உயர்த்தப்படும்‌ என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தின்‌ கீழ்‌, குறிப்பாக 570 கி.மீ. நீளமுள்ள சாலைகள்‌ 486 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ சென்னை மாநகராட்சியிலும்‌, கோயம்புத்தூர்‌ மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ 200 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலும்‌, மதுரை மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ 130 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலும்‌ சாலைப்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்படும்‌. 33, சென்னை மாநகரத்தில்‌ வாகனப்‌ போக்குவரத்து பன்மடங்காக அதிகரித்துள்ளதால்‌ ஏற்படும்‌ கடும்‌ போக்குவரத்து நெரிசலைத்‌ தவிர்ப்பதற்காக பல திட்டங்கள்‌ நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதன்‌ ஒரு பகுதியாக வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில்‌ வசிக்கும்‌ சுமார்‌ 7 இலட்சம்‌ மக்கள்‌ பயன்‌ பெறும்‌ வகையில்‌, வேளச்சேரி பிரதான சாலையிலிருந்து குருநானக்‌ கல்லூரி சந்திப்பு வரை 3 கி.மீ. நீளத்திற்கு ஒரு மேம்பாலம்‌ 310 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டிலும்‌, அதேபோன்று இரயில்வே துறையுடன்‌ இணைந்து கொருக்குப்பேட்டை இரயில்வே மேம்பாலம்‌, சுமார்‌ ஒரு இலட்சத்திற்கும்‌ மேற்பட்ட அப்பகுதி மக்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌, 70 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில்‌ அமைக்கப்படும்‌. 34, சென்னை பெருநகர மாநகராட்சியின்‌ ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத்‌ திட்டத்தின்‌ கீழ்‌, கொடுங்கையூர்‌ குப்பை கொட்டும்‌ வளாகத்தில்‌ உயிரி எரிவாயு (Bio CNG) நிலையம்‌, இயற்கை உரம்‌ தயாரிக்கும்‌ நிலையம்‌, தானியங்கி பொருள்‌ மீட்பு மையம்‌ (Automatic Material Recovery Facility) மற்றும்‌ 21 மெகாவாட்‌ திறன்‌ கொண்ட திடக்‌ கழிவிலிருந்து மின்சாரம்‌ தயாறிக்கும்‌ பணி 3450 கோடி ரூபாய்‌ திட்டக்‌ காலத்திற்கான மதிப்பீட்டில்‌ தொடங்கப்படும்‌. இதைப்‌ போன்று, திறன்மிக்க திடக்கழிவு மேலாண்மை மற்றும்‌ மின்சார உற்பத்தி செய்யும்பொருட்டு, சென்னை மற்றும்‌ தாம்பரம்‌ மாநகராட்சிகளுக்கு அருகிலுள்ள நகராட்சிகள்‌ மற்றும்‌ பேரூராட்சிகளுக்குப்‌ பயன்படும்‌ வகையில்‌, திடக்கழிவிலிருந்து மின்சாரம்‌ தயாரிக்கும்‌ ஆலை (Waste to Energy Plant) தாம்பரம்‌ மாநகராட்சிப்‌ பகுதியில்‌ நிறுவப்படும்‌. இத்திட்டத்தின்‌ கீழ்‌ 1500 டன்‌ மறுசுழற்சி செய்ய இயலாத திடக்கழிவின்‌ செயலாக்கம்‌ மூலம்‌ தினந்தோறும்‌ 15 முதல்‌ 18 மெகாவாட்‌ மின்சாரம்‌ தயாரிக்க இயலும்‌. 3, நகர்ப்புரங்களில்‌ வசிக்கும்‌ மக்களுக்குத்‌ தூய்மையான மற்றும்‌ பசுமையான வாழிடச்‌ சூழலை உருவாக்கும்‌ பொருட்டு, அடையாறு நதியை மீட்டைடுத்து அழகுறச்‌ சீரமைக்கும்‌ கிட்டம்‌ 1500 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ தனியார்‌ பங்களிப்புடன்‌ டுதாடங்கப்பட்டுள்ளது. முப்பது மாத காலத்திற்குள்‌ பணி நிறைவடையக்‌ கூடிய இத்திட்டத்தின்‌ முதற்கட்டமாக, சைதாப்பேட்டை முதல்‌ திரு.வி.க.பாலம்‌ வரையிலான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 15 மாதங்களுக்குள்‌ இப்பணிகள்‌ முடிக்கப்படும்‌. பருவநிலை மாற்றத்திலிருந்து மீட்கும்‌ தன்மையுடைய ஏழு மழைநீர்‌ உறிஞ்சும்‌ பல்லுயிர்ப்‌ பூங்காக்கள்‌ (Sponge Park) சென்னை பெருநகரப்‌ பகுதியில்‌ 88 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ உருவாக்கப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶32) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2025-26_speech_en · p.16 · ¶32 · source PDF ↗ · on the map →

Linked projects

Nearby in the same sector