Urban · recurring
Vada Chennai Valarchi Thittam
வட சென்னை வளர்ச்சி திட்டம்
3 budgets named it 3 year span 1,000 ₹ crore allocated 6,858 ₹ crore whole-project cost DMK government
First announced in 2023-24 and named again in 2 later budgets, most recently 2025-26. Places named: Chennai.
Allocated by budget year
Located at Chennai · Chennai district
See it on the map → All Urban projects →
What each budget said, year by year
2023-24 Rs.1,000 crore
“the Government will implement the „Vada Chennai Valarchi Thittam‟ at a cost of Rs.1,000 crore over the next three years. Under this scheme, action will be taken to identify and address the infrastructure deficit and gaps in development.”
“நாட்டிலேயே வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான, சென்னை, பல்வேறு நிறுவனங்களால் வெளியிடப்பட்ட வாழ உகந்த நகரங்கள் பட்டியலில்: முன்வரிசையில் உள்ளது. இருப்பினும், நகரத்தின் சில பகுதிகளில், குறிப்பாக வடசென்னையில், போதிய அளவில் அடிப்படை வசதிகளும் கட்டமைப்புகளும் இல்லா நிலை உள்ளது. சென்னையில் சீரான, சமமான வளர்ச்சியை உறுதி செய்ய “வடசென்னை வளர்ச்சி திட்டம்” என்ற திட்டத்தை 1000 கோடி ரூபாய் செலவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசு செயல்படுத்தும். இத்திட்டத்தில், கட்டமைப்பு பற்றாக்குறைகளையும் வளர்ச்சிக் குறியீடுகளின் குறைபாடுகளையும் கண்டறிந்து, அவற்றைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிதியையும் நடைமுறையிலுள்ள திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும். நெடுஞ்சாலைகள்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶88) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2023-24_speech_en · p.38 · ¶88 · source PDF ↗ · on the map →
2024-25 Rs.1,000 crore
“Under this scheme, development works to the tune of Rs.1,000 crore will be undertaken.”
“நாட்டிலேயே. மிக வேகமாக வளர்ந்துவரும் நகரங்களில் ஒன்றான சென்னை மாநகரத்தின் சில பகுதிகளில், குறிப்பாக வடசென்னையில் போதிய அளவு அடிப்படை வசதிகளும் கட்டமைப்புகளும் இல்லாத நிலை உள்ளது. சென்னை மாநகரில் சமச்சீர் வளர்ச்சியை உறுதி செய்ய “வடசென்னை வளர்ச்சித் திட்டம்” எனும் புதிய முயற்சியை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், வாட்டர் பேசின் (water basin) சாலையில் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் புதிய குடியிருப்புகள், எழும்பூரில் குழந்தைகள் நல மருத்துவமனையில் 53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய உயர்தர சிகிச்சைப் பிரிவு (Super speciality block), இராயபுரத்தில் RSRM மருத்துவமனையில் 96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 புதிய கட்டடங்கள், பெறியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 புதிய தளங்கள், 11 கோடி ரூபாய் மதிப்பிட்டில் தொழிற்பயிற்சி நிலையம், 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரெட்டேரி, வில்லிவாக்கம், பாடி ஏரிகளை சீரமைத்தல், 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 பள்ளிகளைப் புதுப்பித்தல், மேம்படுத்துதல் மற்றும் கணினிம௰மாக்கல் போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகள் என மொத்தம் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶40) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2024-25_speech_en · p.20 · ¶40 · source PDF ↗ · on the map →
2025-26 Rs.6,858 crore
“The Government is implementing the ‘Vada Chennai Valarchi Thittam’ to promote balanced growth in Chennai. As part of this initiative, various development projects including the construction of a bus stand, provision of housing facilities, enhancement of drinking water, educational, and medical infrastructure, improvement of lakes, ponds, and beaches, establishment of a fish market, gym, parks, sports facilities, construction of electric crematoria, upgradation of electricity substations and transformers, setting up of polytechnic colleges and provision of skill development training are being undertaken at an estimated cost of Rs.6,858 crore.”
“சென்னை மாநகரத்தின் சமச்சீர் வளர்ச்சியை உறுதிசெய்திட வடசென்னை வளர்ச்சித் திட்டம் என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பேருந்து நிலையம் அமைத்தல், குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்துதல், குடிநீர்ப் பணிகள், கல்வி மற்றும் மருத்துவ உட்கட்டமைப்புப் பணிகள், ஏரிகள் மற்றும் குளங்கள் மேம்பாட்டுப் பணிகள், கடற்கரை மேம்படுத்துதல், மீன் சந்தை அமைத்தல், உடற்பயிற்சி நிலையம், பூங்காக்கள் மற்றும் விளையாட்டுக் கட்டமைப்புப் பணிகள், மின் மயானங்கள் அமைத்தல், துணை மின் நிலையம் மற்றும் மின் மாற்றிகள் தரம் உயர்த்தும் பணிகள், பலவகை தொழில்நுட்பக் கல்லூழி அமைத்தல், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்குதல் போன்ற பணிகள் 6,858 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶42) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2025-26_speech_en · p.21 · ¶42 · source PDF ↗ · on the map →
Linked projects
- part of Institute of Child Health and Hospital for Children, Egmore - modern equipment · 2014-15 –2024-25
- part of Namakku Naame Thittam (urban) · 2021-22
- part of Modernization and computerization of 10 schools · 2024-25
- part of New ITI in North Chennai · 2024-25
- part of New tenements at Water Basin Road (TNUHDB) · 2024-25
- part of Restoration of Retteri, Villivakkam and Padi lakes · 2024-25
- part of Three new floors, Government Peripheral Hospital, Periyar Nagar · 2024-25
- part of Two new blocks, RSRM Hospital, Royapuram · 2024-25
Nearby in the same sector
- Chennai Mega City Development Mission · 10 years
- Integrated Urban Development Mission · 10 years
- Tamil Nadu Sustainable Urban Development Project · 8 years
- Smart Cities Scheme · 8 years
- Tamil Nadu Urban Livelihood Mission · 7 years
- Urban solid waste management projects · 7 years