Transport · dormant
3,000 new buses for State Transport Corporations
2 budgets named it 2 year span — ₹ crore allocated 548 ₹ crore whole-project cost AIADMK government
First announced in 2011-12 and named again in 1 later budget, most recently 2012-13.
Allocated by budget year
See it on the map → All Transport projects →
What each budget said, year by year
2011-12 ` 125 crores
“It is also proposed to introduce 3,000 new buses during 2011-2012 improving the level of service to the public. A sum of ```` 125 crores has been provided in the Revised Budget Estimates as share capital support for this purpose.”
“தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகங்கள் மிகவும் குறைந்த கட்டணத்தில் நம்பகத்தன்மையுடைய போக்குவரத்து வசதிகளை பொதுமக்களுக்கு அளித்து வருகின்றன. தற்போது 21169 மாநில போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மாநிலத்தின் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு போக்குவரத்து நிறுவனங்களின் தற்போதைய நிதிநிலை மிக மோசமான நிலையில் உள்ளது. எனவே, அன்றாட நிர்வாகச் செலவுகளுக்குக்கூட மாநில அரசு நிதியுதவி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. பணியாளர் கட்டுப்பாட்டுடன் செயல்பட வழிவகை செய்து தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும், போக்குவரத்துக் கழகங்களின் செயல் திறனை மேம்படுத்துவதற்கும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். போக்குவரத்துக் கழகங்களுக்குக் கூடுதல் வருவாய் ஏற்படுத்தும் வகையில் தற்போது கணிசமாக நிலம் உள்ள பேருந்து நிலையங்களை அரசு-தனியார் கூட்டு முயற்சியால் பேருந்து நிறுத்தம் வசதியுடன் அடுக்கக வணிக வளாகம் கட்டி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கு 2011-2012 ஆம் ஆண்டில் 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும். இதற்காக திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் பங்கு மூலதன உதவிக்கென 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கு இழப்பீடாக மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கு உதவித் தொகை வழங்க 304 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶119) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.70 · ¶119 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2012-13 Rs.548 crores
“another 3000 new buses will be purchased during 2012-2013 at an estimated cost of Rs.548 crores. Towards this, the Government will provide share capital assistance of Rs.150 crores and a loan support of Rs.150 crores.”
“இந்த அரசு பதவியேற்ற பின், மாநிலப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு 3,000 புதிய பேருந்துகளை வாங்க அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது, இந்நிறுவனங்களின் வசம் உள்ள பேருந்துகளின் சராசரி வயது 4.24 ஆண்டுகளாக உள்ளது. தற்போதுள்ள சேவைகளை சிறந்த முறையில் தொடரவும், தேவைக்கேற்ப புதிய வழித்தடங்களில் வாகனங்களை இயக்கவும், 548 கோடி ரூபாய் செலவில் 2012-2013 ஆம் ஆண்டிலும் 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும். இதற்காக, இந்த அரசு 150 கோடி ரூபாயை பங்கு மூலதன உதவியாகவும், 150 கோடி ரூபாயை கடனாகவும் வழங்கும். மாநிலப் போக்குவரத்து நிறுவனங்களிடம் உள்ள பேருந்து கட்டும் பணிக்கான கட்டமைப்புகளை முழுமையாக பயன்படுத்தும் வகையில், புதிய பேருந்துகளை உரிய கால இடைவெளியில் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றங்களில் பிணையில் உள்ள 219 பேருந்துகளை மீட்பதற்காக, இந்நிறுவனங்களுக்குத் தேவையான நிதியுதவியை ஒருமுறை சிறப்பு நிதியுதவியாக இந்த அரசு வழங்கும். மேலும், பேருந்து நடத்துனர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும், பயணிகள் எளிதாக பயணச் சீட்டுகளை வாங்கவும், புவி நிலைக் காட்டி (Global Positioning System) வசதி கொண்ட கையடக்க இயந்திரங்களை பயன்படுத்தி மின்னணு பயணச் சீட்டு வழங்கும் முறை அனைத்து அரசு பேருந்துகளிலும் 2012-2013 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶67) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.43 · ¶67 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Tamil Nadu Road Sector Project – Phase II · 12 years
- Comprehensive Road Infrastructure Development Programme (CRIDP) · 11 years
- Chennai Peripheral Ring Road · 10 years
- Chennai Metro Rail Project · 9 years
- Diesel subsidy to State Transport Undertakings · 9 years
- Chennai Metro Rail Phase-II · 9 years