Welfare · completed claimed

Amma Unavagam Centres

2 budgets named it 7 year span 100 ₹ crore allocated AIADMK government

First announced in 2014-15 and named again in 1 later budget, most recently 2020-21.

Allocated by budget year

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2014-15 completion claim AIADMK

“As a price control measure, this Government has opened 297 'Amma Unavagam' Centres besides launching the Amma Mineral Water Scheme.”
“விலைவாசியைக்‌ கட்டுப்படுத்த 297 அம்மா உணவகங்களைத்‌ தொடங்கி நடத்துவதுடன்‌ அம்மா குடிநீர்த்‌ திட்டமும்‌ தொடங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இது தவிர, மேலும்‌ ஒரு முன்முயற்சியாக ஏற்கெனவே கூட்டுறவுத்‌ துறையால்‌ நடத்தப்படும்‌ 210 மருந்தகங்களுடன்‌ கூடுதலாக 100 அம்மா மருந்தகங்கள்‌ புதியதாகத்‌ தொடங்கப்படும்‌. இதற்கென 20 கோடி ரூபாய்‌ மாநில விலை நிலைப்படுத்தும்‌ நிதியத்திலிருந்து பயன்படுத்தப்படும்‌.” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶40) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2014-15_speech_en · p.22 · ¶40 · source PDF ↗ · on the map →

2020-21 Rs.100 crore policy AIADMK

“the Government has decided to form a ‘not-for-profit’ Special Purpose Vehicle (SPV) to finance and manage the Amma Unavagam programme.”
“சமுதாயத்தில்‌ உள்ள நலிந்த பிரிவினர்களுக்கு குறைந்த விலையில்‌ சத்தான, சுகாதாரமான உணவு வழங்குவதற்காக, மறைந்த முன்னாள்‌ முதலமைச்சர்‌ புரட்சித்‌ தலைவி ஜெ ஜெயலலிதா அவர்கள்‌, 2013 ஆம்‌ ஆண்டு பிப்ரவரி மாதம்‌ 19 ஆம்‌ நாளன்று அம்மா உணவகங்களை திறந்து வைத்தார்‌. இந்த முன்னோடித்‌ திட்டம்‌, உலக அளவில்‌ நன்மதிப்பைப்‌ பெற்றுள்ளதோடு, இந்தியாவில்‌ உள்ள பல மாநிலங்கள்‌ இதைப்‌ பின்பற்றி செயல்படுத்தி வருகின்றன. இம்முன்னோடித்‌ திட்டத்திற்கு மேலும்‌ புத்துணர்ச்சியூட்டும்‌ பொருட்டும்‌, நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள்‌ மீதான நிதிச்சுமையை குறைப்பதற்கும்‌, அம்மா உணவகத்‌ திட்டத்தைச்‌ செயல்படுத்துவதற்காக “இலாப நோக்கமற்ற' ஒரு சிறப்பு நோக்கு முகமையை உருவாக்க அரசு முடிவெடுத்துள்ளது. அம்மா உணவகங்களை அதிக அளவில்‌ பயன்படுத்தி வரும்‌ கட்டுமானப்‌ பணியாளர்களை கவனத்தில்‌ கொண்டு, அவர்கள்‌ தங்கும்‌ மற்றும்‌ பணிபுரியும்‌ இடங்களுக்கு அம்மா உணவகம்‌ உணவு கொண்டு செல்ல ஏற்பாடுகள்‌ செய்யப்படும்‌. இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்காக பெருநிறுவன சமூகப்‌ பொறுப்பு பங்களிப்பு மற்றும்‌ நன்கொடை பங்களிப்புகளை இந்த சிறப்பு நோக்க முகமை சேகரிக்கும்‌. அம்மா உணவகங்களுக்கு மானிய விலையில்‌ உணவுப்‌ பொருட்களை இந்த அரசு தொடர்ந்து வழங்கும்‌. வருவாய்‌ வரவுகள்‌, பெறப்பட்ட பங்களிப்புகள்‌, நன்கொடைகள்‌ ஆகியவற்றிற்கும்‌ அதன்‌ செலவினத்திற்கும்‌ இடையேயான பற்றாக்குறையை சரிசெய்வதற்கு அரசு நிதியுதவி அளிக்கும்‌. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகளில்‌, அம்மா உணவகத்‌ திட்டத்திற்காக, 100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர்‌ வழங்கல்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶86) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2020-21_speech_en · p.48 · ¶86 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector