Welfare · dormant

Amudham stores expansion

1 budget named it 1 year span ₹ crore allocated AIADMK government

First announced in 2015-16 and not named in any budget since.

See it on the map → All Welfare projects →

What each budget said, year by year

2015-16 Rs.20 crores continuation investment target AIADMK

“The TNCSC is in the process of vastly expanding its network of Amudham stores with an initial investment of Rs.20 crores to make groceries available at reasonable prices.”
“விலைவாசி உயர்வைக்‌ கட்டுப்படுத்த தமிழ்நாடு பல புதுமையான முயற்சிகளை எடுத்துள்ளது. சந்தை அளவில்‌, குறிப்பிட்ட விலைக்‌ கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்‌ நோக்கத்தோடு, மாநில விலைக்‌ கட்டுப்பாட்டு நிதியம்‌ ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிதியம்‌ திறன்பட செயல்படுவதற்காக அதற்கான நிதியம்‌ 50 கோடி ரூபாயிலிருந்து 100 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே குறிப்பிட்டவாறு, மிகவும்‌ இன்றியமையாத பருப்புகள்‌ மற்றும்‌ சமையல்‌ எண்ணெய்‌ ஆகியன மிகக்‌ குறைந்த விலையில்‌ சிறப்பு பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்படுவதால்‌, ஆண்டுதோறும்‌ 1,230 கோடி ரூபாய்‌ மானியச்‌ சுமை ஏற்படுகிறது. கூடுதலாக, பண்ணைப்‌ பசுமைக்‌ கடைகளைக்‌ கூட்டுறவு அமைப்புகள்‌ தொடங்கி குறைந்த விலையில்‌ காய்கறிகளை விற்று வருவதோடு, அம்மா மருந்தகங்கள்‌ குறைந்த விலையில்‌ மருந்துகளை விற்பனை செய்து வருகின்றன. மளிகைப்‌ பொருட்களை நியாயமான விலையில்‌ கிடைக்கச்‌ செய்யும்‌ நோக்குடன்‌, அமுதம்‌ கூட்டுறவு அங்காடிகளை விரிவாக்கத்‌ தேவையான நடவடிக்கைகளை, 20 கோடி ரூபாய்‌ செலவில்‌ தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகம்‌ மேற்கொண்டு வருகிறது. அம்மா உணவகங்கள்‌, அம்மா குடிநீர்‌ அம்மா சிமெண்ட்‌, அம்மா உப்பு போன்ற திட்டங்கள்‌ விலைவாசியைக்‌ கட்டுப்படுத்திட இந்த அரசு மேற்கொண்டுள்ள மேலும்‌ சில குறிப்பிடத்தக்க முயற்சிகளாகும்‌. நீர்ப்‌ பாசனம்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶38) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2015-16_speech_en · p.24 · ¶38 · source PDF ↗ · on the map →

Nearby in the same sector