Welfare · dormant
Annadhana Thittam extension
5 budgets named it 11 year span — ₹ crore allocated AIADMK government
First announced in 2011-12 and named again in 4 later budgets, most recently 2021-22. Places named: Srirangam, Palani.
Allocated by budget year
Located at Srirangam · Tiruchirappalli district
See it on the map → All Welfare projects →
What each budget said, year by year
2011-12
“Annadhana Thittam in Temple launched by Hon’ble Chief Minister in her earlier regime will be implemented with full vigour. It will be extended to 106 more temples.”
“கோயில்களின் புனிதத் தன்மை, தொன்மை, வரலாற்று முக்கியத்துவம் முதலியவற்றைப் பேணிக் காப்பதில் இந்த அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த உன்னதமான நோக்கத்தை மனதிற்கொண்டு ஆகம விதிகளின்படி கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு மேல் குடமுழுக்கு நடைபெறாமல் உள்ள கோயில்களில் 1,006 கோயில்களுக்கு புனரமைப்புப் பணிகள் முடிக்கப்பெற்று குடமுழுக்கு செய்யப்படும். இந்த நிதியாண்டில் 89 கோயில்களை புனரமைப்பதற்காக 22.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அவரது முந்தைய ஆட்சிக் காலத்தில் திருக்கோயில்களில் தொடங்கப்பட்ட அன்னதானத் திட்டம் முழு உத்வேகத்துடன் செயல்படுத்தப்படும். இத்திட்டம் மேலும் 106 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும். நாள்தோறும் ஒரு கால பூஜையாவது மேற்கொள்வதற்காக வட்டி வருமானம் கிடைக்கும் வகையில் 11931 கோயில்களுக்கு 25,000 ரூபாய் வீதம் நிரந்தர வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வைப்பீடு ஒரு இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். கோயில் அர்ச்சகர்கள், ஓதுவார்கள், இசைவாணர்கள், கிராம பூசாரிகள் ஆகியோர்களுக்கான மாத ஓய்வூதியம் 750 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்படும். தமிழ் வளர்ச்சி”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶78) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.47 · ¶78 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2012-13
“Annadhanam Scheme, the brain child of the Hon’ble Chief Minister, is being implemented in 468 temples at present and it will be further extended to 50 more temples during 2012-2013. In all these temples where this scheme is being implemented, the kitchens will be modernised to provide hygienic food to the devotees. Hon’ble Chief Minister has ordered that Annadhanam be provided in Arulmigu Sri Ranganatha Swami temple at Srirangam and Arulmigu Dandayudhapani Swami temple at Palani throughout the day from 8 A.M. to 10 P.M.”
“கோயில்கள், வழிபாட்டுத் தலங்களை பாதுகாத்து பராமரிக்க இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 2011-2012 ஆம் ஆண்டு 1006 திருக்கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளன. இதே போன்று, வரும் ஆண்டிலும் 1,006 கோயில்கள் தெரிவுசெய்து குடமுழுக்கு செய்யப்படும். தவறாக வகைமாற்றம் செய்யப்பட்ட மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் சொத்துகளை மீட்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோயில் சொத்துகளை விரைந்து மீட்பதற்காகவும், கோயில் நிலங்கள் குறித்த வழக்குகளை தீர்ப்பதற்காகவும் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வருவாய் இலகுகளும், வருவாய் நீதிமன்றங்களும் மேலும் வலுப்படுத்தப்படும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சிந்தையில் உதித்த உன்னதத் திட்டமாகிய 'அன்னதானத் திட்டம்” தற்போது 468 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2012-2013 ஆம் ஆண்டில் மேலும் 50 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும். இத்திட்டம் செயல்படுத்தப்படும் அனைத்துக் கோயில்களிலும், பக்தர்களுக்கு சுகாதாரமான உணவு அளிக்கும் வகையில், சமையற்கூடங்கள் நவீனப்படுத்தப்படும். ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலிலும், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலிலும், காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை நாள் முழுவதும் தொடர்ந்து அன்னதானம் அளித்திட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶78) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.51 · ¶78 · source PDF ↗ · on the map →
2015-16
“The laudable Annadhanam scheme is being implemented in 518 temples. This scheme will be extended to another 206 temples very soon.”
“அனைவராலும் வெகுவாக பாராட்டப்படும் அன்னதானத் திட்டம் தற்போது 518 கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை மேலும் 206 கோயில்களுக்கு வெகுவிரைவில் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பதின்மூன்றாவது நிதி ஆணையத்தின் நிதியுதவியின் கீழ், 250 பழம்பெரும் கோயில்களைப் புதுப்பிப்பதற்கு இந்த அரசு 90 கோடி ரூபாய் வழங்கியது. கிராமப்புறக் கோயில்களுக்குத் தொடர்ந்து உதவும் வகையில், 2014-2015 ஆம் ஆண்டில் 1006 கிராமக் கோயில்களுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள 1006 கோயில்களுக்கும் 10.06 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, நாள்தோறும் ஒருகால பூஜை செய்வதற்கான திட்டத்தின் கீழ் 12,504 கோயில்கள் பயனடைந்துள்ளன. கோயில்களின் பொதுநல நிதியையும், கோயில் தேர்களுக்கான புதுப்பித்தல் நிதியையும் பயன்படுத்தி, 606 கோயில்களும், 123 கோயில் தேர்களும் புதுப்பிக்கப்பட்டன. வரும் ஆண்டிலும் இம்முயற்சிகள் அனைத்தும் தொடரும். சமூக நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶103) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.59 · ¶103 · source PDF ↗ · on the map →
2016-17
“The scheme of Annadhanam is being implemented in 724 temples in the State, which will be extended to another 30 temples during 2016-2017.” tnbudget_2016-17_speech_en_revised · p.38 · ¶73 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2021-22
“The Annadhanam Scheme is being implemented in 754 temples from May, 2011.” tnbudget_2021-22_speech_en_interim · p.72 · ¶116 · source PDF ↗ · on the map →
Nearby in the same sector
- Post-matric scholarships (Adi Dravidar) · 15 years
- Free rice / food subsidy under PDS · 13 years
- Integrated Child Development centres infrastructure · 13 years
- Free bicycles for SC/ST students · 12 years
- Marriage assistance with gold coin · 11 years
- Nutritious Meal Programme · 11 years