Education · recurring
Assistance to Universities
First announced in 2014-15 and named again in 6 later budgets, most recently 2025-26. Places named: Annamalai University.
Allocated by budget year
Located at Annamalai University · Cuddalore district
See it on the map → All Education projects →
What each budget said, year by year
2014-15 Rs.979.32 crore
“This Government is providing Rs.979.32 crore for the year 2014-2015 as assistance to various Universities in the State.”
“திறன்மிக்க மனித ஆற்றலுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் அமையப்பெற்று அதன் மூலமாக, இந்தியாவின் புதுமைப் படைப்பு மையமாகவும், அறிவாற்றலின் தலைநகரமாகவும் தமிழ்நாடு திகழவேண்டும் என்ற மகத்தான இலட்சியம் 'தொலைநோக்குப் பார்வை 2023-0 குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டிட, உயர்கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டிற்கு திட்டமிட்ட முதலீடுகளை இந்த அரசு தொடர்ந்து செய்து வருகிறது. உயர்கல்விச் சேர்க்கை விகிதம் 25 சதவீதத்தை எட்ட வேண்டும் என்று பன்னிரெண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் இலக்கிடப்பட்டாலும், 2011-2012 ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி, ஏற்கெனவே 38.2 சதவீத அளவை நமது மாநிலம் எட்டியுள்ளது. இந்த அரசின் கடந்த மூன்று ஆண்டுகளில் 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 24 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், நான்கு அரசுப் பொறியியல் கல்லூரிகள், 11 பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் புதியதாக தொடங்கப்பட்டுள்ளன. இதுபோன்றே, மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசுக் கல்வி நிறுவனங்களில் 798 புதிய பாடப் பிரிவுகளை தொடங்கிட இந்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலத்தில் உயர்கல்விச் சேர்க்கை விகிதத்தை உயர்த்திட, கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில், அரசுக் கல்வி நிறுவனங்களை அமைக்க வேண்டும் என்பதே இந்த அரசின் குறிக்கோளாகும். 2014-2015 ஆம் ஆண்டில் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கான மானியமாக 979.32 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2014-2015 ஆம் ஆண்டில், உயர்கல்வித் துறைக்கு 3,627.93 கோடி ரூபாய் வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶105) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.53 · ¶105 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.868.40 crores
“Similarly, Rs.868.40 crores have been set apart for sanctioning grants to various universities in the State during 2015-2016.”
“2014-2015 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு 153.55 கோடி ரூபாய் அளவிற்குக் கணிசமான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டிற்கு இப்பல்கலைக்கழகத்திற்கு நிதியுதவியாக 110.57 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்றே, 2015-2016 ஆம் ஆண்டிற்கு மாநிலத்தில் உள்ள பிற பல்கலைக்கழகங்களுக்கு நிதியுதவியாக 868.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் உயர்கல்வித் துறைக்கு 3,696.82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வி வளர்ச்சிக்காக இந்த அரசு எடுத்துவரும் இத்தகைய முயற்சிகள் மாநிலத்தைச் சிறப்பான நிலைக்கு இட்டுச்செல்லும் என நாங்கள் நம்புகிறோம். விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶99) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.57 · ¶99 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.357.12 crores
“The Government has also set apart Rs.357.12 crores in the Revised Budget Estimates for sanctioning grants to the Universities, including Rs.152.97 crores to the Annamalai University.”
“அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு 152.97 கோடி ரூபாய் உட்பட, அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் மானியம் வழங்குவதற்காக, திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மொத்தமாக இந்த அரசு 357.12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. 2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், உயர்கல்வித் துறைக்கென மொத்தமாக 3,679.01 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶124) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2016-17_speech_en_revised · p.60 · ¶124 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2017-18 Rs.320 crore
“The Government has allocated Rs.320 crore in the Budget Estimates 2017-2018 for providing grants to universities, including Rs.139 crore for Annamalai University.”
“அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கான 139 கோடி ரூபாய் உட்பட, அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் மானியம் வழங்குவதற்காக 2017-2018 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 320 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2017-2018 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உயர்கல்வித் துறைக்காக 3,680 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶118) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2017-18_speech_en · p.65 · ¶118 · source PDF ↗ · on the map →
2018-19 Rs.500.65 crore
“The Government has allocated Rs.500.65 crore for providing grants to Universities, including Rs.250 crore for Annamalai University.”
“கல்வியில் பின்தங்கிய குடும்பங்களிலிருந்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், முதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணத்தை அரசே திரும்ப வழங்கும் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 2017-2018 ஆம் ஆண்டில் 2.17 இலட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர். 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்காக 682.87 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பு நல்கைத் தொகை கடந்த பல வருடங்களாக மாற்றியமைக்கப்படவில்லை. எனவே, 2018-2019 ஆம் ஆண்டு முதல் இந்த தொகுப்பு நல்கைத் தொகை புதிய கணக்கீட்டின்படி மாற்றியமைக்கப்படும். அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு 250 கோடி ரூபாய் உட்பட, அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் மானியம் வழங்குவதற்காக, 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், 500.65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உயர்கல்வித் துறைக்காக 4,620.20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶109) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2018-19_speech_en · p.64 · ¶109 · source PDF ↗ · on the map →
2019-20 Rs.538.10 crore
“A sum of Rs.538.10 crore has been allocated as block grants to various universities of which Rs.250 crore is allocated to Annamalai University.”
“பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பு நல்கைத் தொகைகளில் 20 வருடங்களுக்குப் பின்னர் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு 250 கோடி ரூபாய் உட்பட, பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு 538.10 கோடி ரூபாய் தொகுப்பு நல்கைத் தொகையாக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர் தொழில்நுட்பத் திறன்களும் சிறப்புத் தகுதிகளும் கொண்ட பணியாளர்களுக்கான தேவை உலக அளவில் வளர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு, தொழிற் கல்லூரிகளில் உள்ள வசதிகளை சர்வதேசத் தரத்திற்கு தொடர்ந்து மேம்படுத்துவது அவசியமாகிறது. எனவே, மாநிலத்தின் முதன்மையான பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்திலும், தொழில்நுட்பக் கல்வி ஆணையரின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளிலும் சர்வதேசத் தரத்தில் கற்பித்தலுக்குத் தேவைப்படும் உபகரணங்கள் உள்ளிட்ட அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உயர்கல்வித் துறைக்காக 4,584.21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶83) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து tnbudget_2019-20_speech_en · p.48 · ¶83 · source PDF ↗ · on the map →
2025-26 Rs.700 crore
“To mitigate the fiscal constraints faced by State Universities, block grant will be enhanced to Rs.700 crore.”
“அரசுப் பல்கலைக்கழகங்களின் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் வண்ணம், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பு நிதி நல்கை 700 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மேலும், தமிழ்நாட்டில் செயல்படும் அரசுப் பல்கலைக்கழகங்களின் கல்விச் டயல்பாடுகள், ஆராய்ச்சித் திறன் மேம்பாடு, ஆசிரியர்களுக்கான தொடர் பயிற்சி, பாடத்திட்ட மேம்பாடு, தேர்வு முறை மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம் ஆகிய தளங்களில் உரிய முன்னேற்றங்களைக் கொண்டு வரும் நோக்கில் 200 கோடி ரூபாய் கொண்ட சிறப்புத் தொகுப்பு நிதியம் உருவாக்கப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶71) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2025-26_speech_en · p.36 · ¶71 · source PDF ↗ · on the map →
Linked projects
- contains Financial support to Annamalai University · 2015-16 –2020-21
- part of Tamil University Thanjavur infrastructure grant · 2013-14 –2021-22
- part of State universities dedicated corpus fund · 2025-26
Nearby in the same sector
- First-generation graduate education fees · 10 years
- Cash incentives to school students · 10 years
- Free school uniforms and footwear · 9 years
- School infrastructure (259 schools) · 9 years
- Free laptop distribution scheme · 8 years
- Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) · 8 years